'யாரையும் நம்பவேண்டாம்' என்பதற்கான மேற்கோள்கள் தமிழில்..!

யாரையும் நம்பவேண்டாம் என்பதற்கான மேற்கோள்கள் தமிழில்..!
X
Don't Depend On Others Quotes in Tamil- யாரையும் நம்புவது என்பது தற்கால உலகச் சூழலில் அவ்வளவு எளிதானதல்ல என்பதற்கான மேற்கோள்கள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.

Don't Depend On Others Quotes in Tamil

நம்பிக்கை என்பது பிறரின் மீதானது மட்டுமல்ல தன் மீதானதும் கூட. எப்போது ஒருவர் பிறை நம்பமாட்டார் தெரியுமா? எப்போது அவர் தன்னை நம்பவில்லையோ அப்பபோது அவர் பிறரையும் நம்பமாட்டார். இருப்பினும் யாரையும் நம்பாதீர்கள் என்பதற்கு சில சொற்றொடர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஒருபோதும் யாரையும் நம்பக்கூடாது என்று சொல்வது வேடிக்கையானது.

2. பிறர் அஞ்சும் வகையில் நாம் நடந்து, உங்கள் மீதான நம்பிக்கையை கெடுத்துக்கொண்டால், உங்களை மோசமானவராக பார்க்க வைக்கும்.

3. யாரையும் எளிதில் நம்பாதீர்கள். அவர்கள் உங்கள் மிகப்பெரிய எதிரியின் கூட்டாளிகளாக கூட இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

4. நான் செய்தது தவறில்லை என்பதை நிரூபிக்க உங்களை அனுமதிக்காத ஒருவரை ஒருபோதும் நம்பாதீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் உங்களைப்பற்றி ஏற்கனவே அறிந்தவராக இருக்கிறார் என்பதாகும்.

5. வேறொரு நபரின் கதையையோ அல்லது ரகசியங்களையோ உங்களுக்குச் சொல்பவரை ஒருபோதும் நம்பாதீர்கள். ஏனென்றால் அவர்கள் உங்களுடைய பக்கங்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்வார்கள்.

6. ஒவ்வொரு ஏமாற்றமும் கூட உங்களுக்கான ஒரு வரம். சில ஏமாற்றங்கள் படிப்பினைகள். மக்களை எப்படி எந்தவகையில் நம்பவேண்டும் என்பதற்கான பாடங்கள்.

7. உங்களை நம்பவில்லை என்று கூறுபவர்களிடம் உங்களை நிரூபிக்க முனைவது முட்டாள்தனமாகும்.

8. இன்று ஏப்ரல் முட்டாள்கள் தினம். எதையும் நம்பாதே யாரையும் நம்பாதே. மற்ற நாட்களைப் போலவே.

9. யாரையும் நம்பாதீர்கள். உங்கள் ரகசியங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். யாரும் உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என்று சொல்லமுடியாது.

10. உங்கள் பற்கள் கூட உங்கள் நாக்கை அவ்வப்போது கடிக்கும் என்பதால் நீங்கள் யாரை நம்புகிறீர்கள் என்பதை பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்.

11. உங்கள் ரகசியத்தை யாரிடமும் சொல்லாதீர்கள். உங்களால் உங்கள் ரகசியத்தை காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதபோது, அதை மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

12. இந்த நாட்களில் நம்பிக்கையை கண்டுபிடிப்பது கடினம். நீங்கள் ஒருவரை நம்ப ஆரம்பித்துவிட்டால், அந்த நம்பிக்கையை இறுதிவரை உங்களுக்குக் காட்டுவது போன்றது.

13. உங்கள் பிரச்சினையை நீங்கள் யாருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒவ்வொரு நண்பரும் உங்கள் சிறந்த நண்பர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14. நீங்கள் யாரை நம்புகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் அவர்கள் உங்கள் நண்பர்கள் என்று சொன்னவுடன், அவர்கள் எவ்வளவு விரைவாக உங்களைப் புறக்கணிப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.

15. நான் யாரையும் நம்பவில்லை. யாரும் என்னை நம்புவார்கள் என்று எதிர்பார்க்கவுமில்லை. பரஸ்பரம் நீயும் நம்பவில்லை. நானும் நம்பவில்லை என்று இருந்துவிடுவது சிறப்பு.

16. சில நேரங்களில் உங்களை எதிர்ப்பவர்கள் அச்சுறுத்தல் இல்லாதவர்களாக இருப்பார்கள். உங்கள் நண்பன் என்று சொல்லிக்கொண்டு உங்களுக்கு துரோகம் செய்பவரை விட அவர் மேலானவர் என்பதை உணருங்கள்.

17. உங்களைத் தவிர யாரையும் நம்பாதீர்கள், ஏனென்றால் அந்த 'உண்மையான' நண்பர்கள் எப்போது உங்களை வெறுத்து காணாமல் போவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.-don t trust anyone quotes in tamil-

18. எல்லோரையும் நேசியுங்கள். ஆனால் எல்லோரையும் நம்பிவிடாதீர்கள்.

19. உங்களை நம்புபவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் சுயநலவாதிகளாகத்தான் இருப்பார்கள்.

20. உங்களை முதலில் நம்புங்கள். வாழ்க்கையை புரிந்துகொள்வீர்கள். பின்னர் யாரை நம்புவது என்பதில் தெளிவாக இருப்பீர்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
why is ai important to the future