Priority என்பதன் அர்த்தம் தெரியுமா..? அது புரிஞ்சால் வெற்றி நிச்சயம்..!

Priority என்பதன் அர்த்தம் தெரியுமா..? அது புரிஞ்சால் வெற்றி நிச்சயம்..!

வெற்றிக்கு இலக்கு அவசியம்.-கோப்பு படம் 

வாழ்வில் எது முக்கியம் என்று யோசித்துப் பாருங்கள். நம்மை யாராவது பார்த்தால் என்ன வேலை செய்கிறீர்கள் என கேட்கிறார்கள்.

நம் வேலை அல்லது தொழில் நமது அடையாளம். இதற்கு பதிலாக நான் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறேன். கட்சியில் இருக்கிறேன் என்று கூறிப் பாருங்கள். அது தொழிலா? வேலை. தொழில் எப்படி பெறலாம்?

இன்று எல்லோரும் குழந்தைகளை படி படி என்கிறார்கள். அவர்கள் கலெக்டராகவோ, விஞ்ஞானியாகவோ வந்தால் இந்தியா முன்னேறும் என்கிறார்கள். படிப்பு வராவிட்டால் குறைந்தது எழுத படிக்க பத்திரிகை படிக்க என்ற அளவுக்கு ஞானம் தேவை. இன்று பெரிய படிப்பு இல்லாதவர்களும் தொழிலதிபர்கள் ஆக இருக்கிறார்கள். அவர்களுக்கு எதையும் சமாளிக்கும் உலக ஞானம் உண்டு.

ஒரு குறிக்கோளாக உள்ளவர்கள் பணக்காரர்களாக கலெக்டராக கம்பெனி நடத்துபவராக ஆகிறார்கள். அவர்களுக்கு வாழ்வில் எது முக்கியம் என்பது தெரியும். கண்ணுக்கு பட்டை போட்ட குதிரை எப்படி நேர்சாலையை பார்த்துக்கொண்டு ஓடுகிறதோ, அதே போல் தங்கள் வேலையில் முன்னுக்கு வருவதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

நம் நாட்டில் சினிமா ரசிக மன்றங்கள் இருக்கின்றன. கேரளாவிலோ உத்திரபிரதேசத்திலோ இவை இல்லை. நடிகர்களுக்கு கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் எல்லாம் செய்கிறார்கள். மற்ற நாடுகளில் இப்படி இல்லை. அங்கெல்லாம் அவர்களுக்கு தொழில் மற்றும் குடும்பம் தான் முக்கியம். ஒரு நடிகரும் சரி அரசியல்வாதியும் சரி, அவர்கள் வேலையைச் செய்கிறார்கள்.

நாம் நம்தொழிலில் கவனம் செலுத்தினால் தான் பிழைக்க முடியும். நம் ஊரில் இளைஞர்கள் சினிமாவில் சேர்ந்து நடிகரானால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். வீட்டுக்கு வீடு எல்லோரும் நடிகர்களாக இருந்தால் பிழைப்பு எப்படி இருக்கும். வீட்டினுள் எல்லோரும் உழைத்து நெல்லையோ வாழைக்காயையோ உற்பத்தி செய்தால் எல்லாரும் அதிக வளத்தைக் காணமுடியும். உற்பத்தி செய்தால் மிகுந்தவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கலாம். நம் நாட்டில் உற்பத்தி என்றைக்கு அதிகமாகிறதோ அன்றைக்குதான் அதிக வளம் காணமுடியும்.

நம் நாடு உற்பத்தியாளர்களால் நிறைய வேண்டும். சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் ஒரு இளைஞர் சொல்கிறார் "எத்தனையோ நல்ல புத்தகங்கள் போட்டேன் வாங்குவோர் இல்லை. சினிமாவில் சேருவது எப்படி என்று ஒரு புத்தகம் எழுதினேன். அது மூன்று பதிப்பு வெளிவந்து விட்டது" என்றார்.

சினிமா பற்றிய புத்தகம் இப்படி விற்பனை ஆகிறது என்றால் இளைஞர்கள் உழைத்து முன்னேறுவதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? நிரந்தரமாக வெற்றி பெறுவதில் நம்பிக்கை வைக்கிறார்களா? அல்லது நிரந்தரமில்லாத ஒரு தொழிலில் மோகம் கொண்டு திண்டாட முன் வருகிறார்களா? யோசித்துப் பாருங்கள். வாழ்வில் எது முக்கியம். எது சரியான வழி என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய தொழில் நிர்வாகத்தில் மெத்தப் படித்தவர்கள் தொழிலில் வெற்றி பெறுவதன் ரகசியம் "எது முக்கியம்" என்பதை உணர்ந்து தான். அதை ஆங்கிலத்தில் Priority என்பார்கள். நீங்களும் எது முக்கியம் என்று ஒரு வேலை தொடங்குவதற்கு முன் நான்கு முறை சொல்லிப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.

Tags

Next Story