மனச்சோர்வு வாழ்க்கையை கொல்லும் கொடிய நோய்..!

Depression Quotes in Tamil
X

Depression Quotes in Tamil

Depression Quotes in Tamil-மனம் என்பது ஒரு கண்ணாடி போன்றது. அதை தினமும் துடைத்து துடைத்து நமது முகத்தை அதில் பார்த்துக்கொள்வதுடன், அந்த கண்ணாடி உடையாமல் பாதுகாக்க வேண்டும்.

Depression Quotes in Tamil

மனம் சோர்வடைஞ்சா.. எதையுமே சாதிக்க .முடியாது. மனம் தளர்ந்தால், உடல் எந்த வகையிலும் ஒத்துழைப்புத் தராது. புலம்பித்தவிக்கும் நிலை வரும். அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கவேண்டும் தவிர அதிலேயே மூழ்கி கிடப்பதை தவிர்க்கவேண்டும். மனச் சோர்வு குறித்த வாசகங்களை படீங்க.

  • தனிமை வெறுமை என்று புலம்புவதை விட்டுத்தள்ளினாலே பாதி மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது…
  • அழுவதால் கண்கள் சுத்தமாகுமாம் கண் பார்வை தெளிவாகுமாம் மன அழுத்தம் குறையுமாம் நன்றி சொல்லுங்கள்… உங்கள் மனதை காயப்படுத்தியவருக்கு.
  • உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.

Depression Quotes in Tamil

  • பலரின் உறக்கமில்லா இரவுகளுக்கு சிலரின் இரக்கமில்லா துரோகமே காரணம்.
  • வழிகளைக் தேடித்தான் செல்கிறோம்…! போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டுமே…!
  • நிம்மதி இருந்தால் நிமிடம் கூட வீணாகாது நிம்மதி இல்லாவிட்டால் நிமிடம் என்ன வாழ்நாள் முழுவதும் வீணாகி விடும்…
  • நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது…

Depression Quotes in Tamil

  • சொல்ல முடியாத சோகங்கள் தான் சில சமயம் கோபமாய் வெளிப்படுகிறது…
  • கவலைக்கு நாம் இடம் கொடுத்தால்..அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும்…!
  • மன நோய் என்பது மனதால் வருவதல்ல சில மனிதர்களால் வருகிறது…
  • கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
  • சாம்பலாக கரைந்து சென்றார் நீந்தக் கற்றுக்கொடுத்த தந்தை..

Depression Quotes in Tamil

  • நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...
  • பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயங்கள் தா ( தூ) ங்காது
  • வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது

Depression Quotes in Tamil

  • நம் உறவாக இல்லாத போதும் அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது
  • வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
  • ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்...
  • நினைவுகளும் சுமை மனதுக்கு தொல்லையாகும் போது
  • நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை...
  • மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை...

Depression Quotes in Tamil

  • ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத இழப்புகளிலும் துயரத்திலும் விதிமேல் பழிபோட்டு மனதை
  • தேற்றிக்கொள்வோம்.
  • கண்களில் மிதந்த அழகிய காட்சியெல்லாம் சில நேரங்களில் தூசியாகி கண்ணீரை தருகிறது.
  • உறக்கம் தொலைந்த இரவுகளில் உறங்கிய நினைவுகள் விழித்துக்கொ(ல்)ள்கிறது...
  • தொட்டுச்செல்லும் நினைவுகளைதான் விடாமல் துரத்துகின்றது மனம்...

Depression Quotes in Tamil

  • சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை மனம் ரசிக்கதான் வேண்டும்
  • கலைந்து போன கனவிலும் வலியான நினைவுகள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story