மன இருள் நீக்கியே இறை அருள் பெறுவோம்..! தீபங்கள் ஏற்றியே தீபாவளி கொண்டாடுவோம்..!

Deepavali Greetings in Tamil

Deepavali Greetings in Tamil

Deepavali Greetings in Tamil-தீபாவளி என்றாலே நம் முதலில் நினைவிற்கு வருவது பட்டாசும் புத்தாடையும், தித்திக்கும் தீபாவளி இனிப்புகளும் தான்.

Deepavali Greetings in Tamil-தீபாவளிக்கு முந்தையநாள் இரவே, நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் வாழ்த்து கவிதைகளையும், அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அனுப்ப தயாராகிவிடுவோம். அப்படி தாயாரும்போதுதான் எண்ணத்தை நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம்.

 • தீபங்கள் ஜொலித்திடும் தீபாவளி.. பட்டாசு வெடித்திடும் தீபாவளி, புத்தாடை உடுத்திடும் தீபாவளி..! இனிப்புகள் பரிமாறும் தீபாவளி..! சோதரம் வளர்த்திடும் தீபாவளி..! தீபாவளித்திருநாள் நன்மைகளை அள்ளித்தரட்டும்..! இனிய தீபாவளி வாழ்த்துகள்!
 • ஆண்டுதோறும் வந்துவிடலாம் தீபாவளி..துன்பங்கள் விலகிப்போகணும்..நன்மைகள் வந்து சேரனும்..வெற்றிகள் குவிந்து மகிழ்ச்சி குடியேறனும்..தீபங்கள் ஏற்றும் ஒளியினால் இருளகன்று ஒளிவெள்ளம் பெருகட்டும்..! மகிழ்வோடு கொண்டாடுவோம் தீபாவளியை..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • இறைவன் நம்மைத் தேடுகிறார்..என்ன நன்மைகள் செய்தோம் என்று தேடுகிறார்..! நன்மைகள் செய்தால் நலமே வாரும்..! இறையருள் சேரும்..! வளங்கள் எல்லாம் வந்தே தீரும்..! நன்மைகள் செய்து நல்லதை அறுவடை செய்வோம்..! இறையருள் பெற்றே வாழ்வில் உயர்வோம்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
 • உள்ளங்கை எய்யும் உதவி உள்ளத்தால் செய்த பயனாகவேண்டும்..! உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர் மத்தியில் உள்ளம் தூய்மை என்பது இறைவன் தந்த வரமே..! இல்லாதோருக்கு உதவி இறையருள் பெறுங்கள்..! வளமெனும் வாழ்வை அடைந்திடுங்கள்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
 • கண்ணைப் பறிக்கும் ஒளிமட்டுமே தீபாவளி ஆகிவிடாது..! மானைப்போற்றும் மனது வேண்டும்..மனிதரை மதிக்கும் மாண்பும் வேண்டும்..! உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதமின்றி சமநிலை பேணும் மனது வேண்டும்..! தங்கு தடையின்றி வெற்றியும் வாரும்..! வாழ்வின் உன்னதம் அடைந்தே தீரும்..! காதைப் பிளக்கும் ஒலியம் வேண்டாம்..! கண்ணைப் பறிக்கும் ஒளியும் வேண்டாம்..! அமைதியும் மகிழ்ச்சியும் இறையருள் ஆகும்..!இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
 • புத்தாடையணிந்து புன்னகை மனதோடு வீடெங்கும் தீபமேற்றி விழாக்கோலம் ஆக்குவதல்ல தீபாவளி..! மனதின் அழுக்கெனும் இருள் நீங்கவேண்டும்..! நல்ல எண்ணங்கள் எனும் ஒளியும் பிரகாசிக்கவேண்டும்..! மனதின் அழுக்கை அகற்றி, தன்னம்பிக்கை எனும் நெய்யிலே மகிழ்ச்சி தீபமேற்றுவோம்..நன்மையைத்தேடி..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • நல்லதும் கெட்டதும் அறிந்து கெட்டதை அகற்றி நல்லதை தேடும் உள்ளம் பெறுவோம்..! எதிரிகள் என்று எமக்கேது எனும் நிலையை உருவாக்குவோம்..! அனைத்து உயிரினமும் மண்ணில் மகிழ்வோடு வாழ வழிவகை செய்வோம்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
 • அன்பு மட்டுமே மனதை ஆழமாக உழும் காயம் ஏற்படுத்தாத கருவி..! கடிந்துகொள்வது கூட அன்பின் வெளிப்பாட்டினால்தானே தவிர அங்கு பகைமை இருக்காது..! அன்பை விதைப்போம்..! இறையரும் நிறைப்போம்..! கருணையும் அன்பும் காலம்தோறும் வரட்டும்..இனிப்புகள் போலவே வாழ்க்கையும் சுவைக்கட்டும்..! ஒன்று சேர்ந்து இனிமையாய இணைந்து கொண்டாடுவோம், தீபாவளியை..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, இருட்டைக் கிழித்து விளக்கேற்றி, வண்ண வண்ண புத்தாடையணிந்து மகிழ்வோடு, வகை வகையான இனிப்பு காரம் பலகாரம், சின்னச் சின்ன மத்தாப்புகள் சிதறி வெடிக்கும் பட்டாசு, கண்ணைக் கவரும் ஒளி வண்ணம் இன்றுதான் காண்போமே..தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
 • சூரியன் உதிக்கும் முன்னெழுந்து வண்ணக்கோலங்கள் வாசலில் போட்டுவைத்தோம்..சின்னஞ்சிறுசுகள் குளித்தெழுந்து புத்தாடை வாசமுடன் குதித்தாடும் அழகு கண்டோம்..நற்காலைப்பொழுதில்..! இருளகன்று ஒளிபெறவே இல்லங்கள்தோறும் ஏற்றினோம் தீபங்கள்..! ஒளிவெள்ளம் கண்டோம் இன்பம் பொங்கவே..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • அம்மா தந்தார் புத்தாடை, அப்பா தந்தார் பொற்காசு, தாத்தா தந்தார் பட்டாசு..பாட்டி தந்தார் மத்தாப்பு..அத்தை தந்தார் இனிப்புகளை..மாமா உதவினார் வெடித்திடவே..! அண்ணா,தம்பி, அக்கா,தங்கை உறவுகள் சூழும் தீபாவளி..! இனிப்புகள் பகிர்ந்தோம்..ஒற்றுமை வளர..! ஓங்கும் வாழ்க்கை மகிழ்வோடு..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • தீபங்களில் இருந்து வரும் ஒளியைப்போல் நம் வாழ்வது பிரகாசிக்கும் பாரீர்..! இல்லாதோருக்கு ஈந்து உவக்கச் செய்வோம்..ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்..! இறையருள் வாரும் பாரீர்..! இன்பமும் பெருகும் பாரீர்..! விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்..! ஆசிகள் கிடைக்கும், ஆசைப்பட்டதும் கிடைக்கும்...இறைவனை நாடினால்..! இனிய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்கள்..!
 • வெந்ததைத் தின்று வாழ்ந்தோம் என்பது வாழ்க்கையல்ல..வென்றதை அடைவதே லட்சிய வாழ்க்கை..! முயற்சியும் உழைப்பும் இருந்துவிட்டால் வெற்றி வாரும் வாழ்க்கையிலே..! இனிமைகள் இருந்தால் வளம் பெருகும்..செல்வம் இருந்தால் மகிழ்ச்சி பெருகும்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • தருவோம் தருவோம் நம்பிக்கையை..! பெறுவோம் பெறுவோம் உயர்வினையே..! வீழ்ந்துகிடக்கும் மனிதருக்கு கைகொடுப்போம்..மீண்டெழவே..தோள் கொடுப்போம்..! விளக்கின் ஒளியது கிடைத்திட வேண்டும் எல்லோருக்கும்..! ஏற்றத் தாழ்வு இங்கில்லை..எல்லாம் கிடைக்கும் எல்லோருக்கும்..என்றொரு உலகம் படைத்திடுவோம்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • ஆட்டிப்படைத்த துன்பங்கள் தொலைந்தே போய்விடவேண்டும்..! தேடிப்போன வாழ்க்கையது விரைந்து வரவே வேண்டுகிறோம்..! இறையருள் எமக்கு நிறைந்து வாரவேண்டும்..! இருள் தெரிந்தால் மட்டுமே வெளிச்சத்தின் அருமை தெரியும்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • இல்லங்கள்தோறும் தீபங்கள் ஜொலிக்கும்..உள்ளங்கள்தோறும் மகிழ்ச்சி வெள்ளம் ஆர்ப்பரிக்கும்..! செல்லங்கள் எல்லாம் பாட்டாசும் மத்தாப்பும் கொளுத்த..தீமைகள் கருகிப்போயினவே..! இருள் மறைந்து ஒளி பிரகாசித்ததுவே..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • இறையருள் எப்போது இடைவிடாமல் கிடைக்குமெனில் கருணை கொண்ட மனிதருக்கே..! காலம் சொன்ன கணக்கிது, நன்மை செய்தால் நன்மையே விளையும்..! எது விதைக்கப்பட்டதோ அதுவே பலனாக கிடைக்கும்..! நன்மைகள் விதையுங்கள்..! நல்லதை அறுவடை செய்யுங்கள்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
 • அதிகாலை துயில் எழுங்கள்..! வாசல்தோறும் வண்ணக் கோலமிடுங்கள்..! நல்லெண்ணெய் தேய்த்து குளியல் இடுங்கள்..! புத்தாடை போட்டுக்கொள்ளுங்கள்..! தீபங்கள் ஏற்றிடுங்கள்..இருளதை விரட்டிவிடுங்கள்..! கோபுரமாக உயர்ந்து நிற்கும் பெரியோரை வணங்கி ஆசி பெறுங்கள்..! இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story