deepavali greetings in tamil-தீபங்கள் ஏற்றிடும் தீபாவளி..! தீயவை ஒழிந்திடும் தீபாவளி..!
deepavali greetings in tamil-தீபாவளி கொண்டாட்டம்.(கோப்பு படம்)
Deepavali Greetings in Tamil -தீபாவளி என்பது தீப ஒளித்திருநாள் என்பதின் மறுவடிவம். இந்த பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், ஜைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.தீபாவளியை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். ஆனால் சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறார்கள். அதாவது, வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் என்னும் இருளை நீக்கி, செல்வம் என்னும் ஒளியைத் தரும் பண்டிகையாக தீபாவளி என்னும் இந்தப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ம் நாளிலிருந்து நவம்பர் 15ம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
சாதி,மத,பேதங்கள் கடந்து இந்தியர்கள் அனைவராலும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக திகழ்கிறது தீபாவளித் திருநாள். இந்தியா மட்டுமின்றி இந்துக்கள் வசிக்கும் பல உலக நாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை பட்டாசுகள் வெடித்தும்,தீபங்கள் ஏற்றியும்.மகிழ்ச்சியாகவும் விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. உங்கள் அன்பிற்குரிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை பகிர இதோ தீபாவளி வாழ்த்து மேற்கோள்கள்..!
- தீபாவளித் திருநாளில் விளக்குகள் ஒளிர்வது போல, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் விளக்குகள் என்றென்றும் ஒளிரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!
deepavali greetings in tamil
- இந்த தீபாவளி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும், உழைப்புகளிலும் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை கொண்டு வரட்டும்..!
- அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்து மற்றவர்களின் வாழ்வினை ஒளிரச்செய்து தீபாவளித் திருநாளின் உண்மை அர்த்தத்தை ஊருக்கு உணர்த்துவோம்..இனிமையாக கொண்டாடுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- இந்த தீபாவளித் திருநாள் கடந்துபோன கஷ்டமான காலங்கள் அனைத்தையும் எரித்து நல்ல காலங்களை உங்கள் வாழ்க்கையில் புகுத்தட்டும்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
deepavali greetings in tamil
- தீபாவளியின் கோடிக்கணக்கான விளக்குகள் உங்கள் வாழ்க்கையில் அமைதி,மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஒளிரச் செய்யட்டும். இறைவன் அருள் பெருகி இல்லத்தில் செல்வமும் ஆரோக்யமும் பெருகட்டும்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
- உங்கள் வாழ்க்கை வான வேடிக்கைகளைப் போல பிரகாசிக்கட்டும், தீபவிளக்குகளைப் போல ஒளிரட்டும்,எதிர்மறைகள் என்னும் தீயவை அனைத்தும் பட்டாசுகளைப் போல வெடித்த்துச் சிதறட்டும்..!அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- இந்த தீபாவளித் திருநாள் ஒரு அழகான புதிய விடியலின் தொடக்கம்..! புதிய கனவுகள் மற்றும் புதிய நம்பிக்கைகளுடன் உங்கள் வாழ்க்கையை தொடங்குங்கள். வெற்றியே நமதாகும்..! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
deepavali greetings in tamil
- ஒளியின் திருவிழா உங்களையும் உங்கள் அருகிலுள்ள அன்பிற்குரியவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கட்டும்..! அவர்கள் வாழ்வு பிரகாசிக்கட்டும்..! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- உலகம் முழுவதும் தீபத்திருநாள் கொண்டாடும் அனைவருக்கும் இறை அருள் கிடைத்து மகிழ்ச்சியும் மன அமைதியும் நிறையட்டும்...! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
- குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, அமைதி மேலோங்க, எல்லாமும் எப்போதும் பெற்று மகிழ்ச்சியாக வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
deepavali greetings in tamil
- தீபங்கள் எங்கும் பட்டொளி வீச.. பட்டாசு வெடிச்சத்தம் பட்..பட்..என்று கேட்க.. புத்தாடை அணிந்து புது நம்பிக்கை, புதிய மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாடுவோம்.., இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..!
- ஆண்டுதோறும் தீபாவளி வந்தாலும் கூட என்று துன்பங்கள் தொலைக்கின்றனவோ அன்றுதான் உண்மையான மகிழ்ச்சி தீபாவளி..! இந்த தீபத்தின் ஒளிவெள்ளத்தில் துன்பங்கள் விலகட்டும்.. சூழ்ச்சிகள், எதிரிகள், நம்பிக்கை துரோகிகள் எல்லோரும் நம் நம்பிக்கைக்கு எதிராக காணாமல் போவார்கள்..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- சுழன்றடிக்கும் சூறாவளி கூட நம் நம்பிக்கை கண்டு தூர ஓடவேண்டும்.. தீமைகள் எம்மைக்கண்டு தீண்டாமல் போக வேண்டும். நன்மைகள் எம்மைத் தேடிவரவேண்டும்..நம் இலக்கு வெற்றி பெற கொண்டாடுவோம், இனிய தீபாவளியை..வாழ்த்துக்கள்..!
- என் அன்பு கண்டு இறைவன் அருள் தர ஓடிவரவேண்டும்..எனக்காக மட்டுமின்றி துன்புற்றோர் அத்தனை பேருக்கும் வளமளிக்க வரவேண்டும்..மகிழ்ச்சியும், சந்தோசமும் பெருகவேண்டும்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
deepavali greetings in tamil
- குடத்துக்குள் இட்ட விளக்காக நாம் இருக்கவேண்டாம்..! மலைமீது ஏற்றிய விளக்காக ஊருக்கே ஒளிதரவேண்டும்..! பாரபட்ஷம் எம்மிடையே இல்லை..இருப்பவன் இல்லாதவன் என்ற வேறுபாடு எம்மிடையே இல்லை..எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து வாழ்வாங்கு வாழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- குதூகலம் கொண்டே குழந்தைகள் ஆட்டம்போட..கோலம்போட்டு பெண்டிர் இங்கு பாட்டுகளும் பாட..! புத்தாடை வாசத்தில் முகமெல்லாம் புன்னகையின் முகவரி..! இனிப்பு பண்டங்களின் வாசத்தில் திண்டாடும் முதியோரின் நாவும்..சில்லரைச் சிதறல்களாய் சிரிப்புச் சத்தம் வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்கும்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- கண்ணைப் பறிக்கும் ஒளி வேண்டாம்..! காதைப் பிளக்கும் ஒலிவேண்டாம்..! எம்முடன் வாழும் காக்கைக்குருவி எம் இன்பத்துக்காக துன்பப்பட வேண்டுமா..? ஒருநாள் கூத்துக்காக காற்றின் தூய்மையைக் கெடுக்கவும் வேண்டுமா..? நன்மை மட்டுமே விளையும் தீபாவளி கொண்டாடுவோம்..! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
deepavali greetings in tamil
- மூத்தோருக்கு முந்தைய இளமை நினைவுகள்..இளையோருக்கு எதிர்காலக் கனவுகள்..துள்ளலாக எழும் மனதுடன்..துடிப்போடு எழுவோம்..தீமைகள் தொலையவே..இருளகன்று ஒலிபெருக்கட்டும்..! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
- வாழ்க்கையின் துன்பங்கள் வறுமையால் வந்துவிடலாம்..ஆனால் வெறுமையாய் இருந்ததால் வந்தது என்பதை மன்னிக்கவே முடியாது..உழைப்பின்றி நன்மை தேடினால்..மூதேவிகூட நம்மை மன்னிக்காது..! முயற்சியும் உழைப்பும் துன்பங்கள் ஒழிக்கும் தூய ஆசான்..! ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, இந்த தீபாவளி திருநாளில் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu