Death Quotes In Tamil-வாழ்க்கையின் முழுமை மரணம்..!

Death Quotes In Tamil-வாழ்க்கையின் முழுமை மரணம்..!
X

Death Quotes In Tamil-இறப்பு மேற்கோள்கள் (கோப்பு படம்)

மரணம் யாராலும் தடுக்கமுடியாதது. எப்போது மரணம் வரும் என்று தெரிந்துவிட்டால் மனிதன் நிம்மதியாக வாழமுடியாது. அது ஒரு நிரந்தர உறக்கம்.

Death Quotes In Tamil

பிறப்பு ஒன்று உண்டென்றால் அங்கு மரணமும் உள்ளது என்பதே இயற்கை விதித்துள்ள விதி. வந்தவர எல்லாம் இந்த பூமியில் தங்கிவிட்டால், புதிய உயிர்கள் ஜனனம் என்னாவது? இந்த பூமியில் இடம் வேண்டாமா?

Death Quotes In Tamil


இயற்கை கொடுத்த வாரங்களில் ஒன்று தன்னை புதுப்பித்துக்கொள்ளல். அந்த புதுப்பித்தலில் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று பிறப்பு மற்றொன்று இறப்பு. பிறப்பைக் கொண்டாடும் மனிதன் இரைப்பைக்கு கொண்டாடுவதில்லை. காரணம் பிரிவு.

பிரிவு என்பது ஒருவருக்கு மட்டுமானது அல்ல. அது உயிரினம் முழுமைக்கும் ஆனது.இந்த பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆனது. எந்த உயிரினமும் நிரந்தரமாக வாழ்ந்துவிடுவதில்லை. வனத்தில் வாழும் விலங்குகளின் வாழ்க்கை நிலையை எண்ணிப்பாருங்கள்.

பிறந்து 10 நாட்கள் கூட வாழ்ந்திருக்காத மான்குட்டியை புலி கொன்று தின்றிருக்கும். நிச்சயமற்ற பொழுதுகளை எதிர்நோக்கியே அவைகளின் வாழ்க்கை கழிகிறது. ஆனாலும் அவை இரைதேடாமல் இல்லை. புலி வந்து கொன்றுவிடும் என்று மேய்ச்சலுக்கு போகாமல் இருப்பதில்லை. நடப்பது நடக்கட்டும். நான் உயிர்வாழ உணவு வேண்டும். இபப்டி வாழும் விலங்குகள் மத்தியில் மனிதர்கள் வாழ்க்கை பாதுகாப்புமிக்கதே.


Death Quotes In Tamil

ஆனாலும் இன்று பல இளைஞர்கள் விவேகமில்லாத வேகத்தால் வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். வாழவேண்டிய வயதில் வேகத்தால் வாழ்க்கையையும் வேகமாக தொலைத்துவிடுகின்றனர். வாழ்ந்துமுடித்து செல்லும் பெரியவர்கள் மரணம், தானே வந்த மரணம். அது ஏற்புக்குரியது. ஆனால், இளைஞர்கள் தேடிக்கொள்ளும் மரணம் தற்கொலைக்கு சமம்.

மரணம் குறித்த மேற்கோள்கள் உங்களின் பார்வைக்காக.

மரணம் என்பது முழுமைபெற்றது. அதை ஆரத்தழுவி ஏற்பதே இயற்கையின் பாடம்.

ஆயிரம் ஜனனம் சொல்லாத கடினமான வாழ்வின் ரகசியத்தை ஒரு மரணம் சொல்லிவிட்டுச் செல்கிறது

வாழ்க்கை சொல்லி தரும் பாடம் முழுமையாய் படிக்கும் முன்னரே வந்து விடுகிறது புத்தகத்தின் கடைசி பக்கம் கடைசி வரியினை வாசிக்கும் நொடியிலே அச்சம் ஒன்று மனத்தை ஆட்கொள்ள அதற்கான காரணம் அறியும் முன்னரே மூச்சு நின்று போகிறது

Death Quotes In Tamil


எதிர்பாராமல் எதிர் பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வருவது தான் மரணம்

முகங்களை மாற்றி மாற்றி என்னை வதைத்தவர்களை விட்டு பிரிகிற மகிழ்ச்சி எனக்கு துரோகத்தின் நிழல்களிலிருந்து விடைபெற்ற மகிழ்ச்சி எதிர்பார்ப்புகளை மட்டுமே தாங்கி வந்த உறவுகளைப் பிரிந்த மகிழ்ச்சி மரணம் என் மீது கவிழ்வது குறித்து நான் உணர்வது சிறகடித்துப் பறத்தலை

நிச்சயம் ஒரு நாள் இந்த ஏமாற்றங்களும் ஏக்கங்களும் இல்லாமல் நிம்மதியாய் தூங்குவேன் என் கல்லறையில்


Death Quotes In Tamil

தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகந்தையில் வாழ்ந்தவரும் வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும் தருணம் அது தான் மரணம்

நினைவில் வைத்து கனவில் காண்பது அல்ல நட்பு, மனதில் வைத்து மரணம் வரை புதைப்பதுதான் நட்பு

ஒருவரையொருவர் உண்மையாக, ஆழமாக நேசித்திருப்பவர்களே, தங்கள் அன்பானவர்களின் இழப்பை நேர்த்தியாகக் கையாளுவர்

மரணம்தான் உயர்ந்த ஓய்வுநிலை. வாழ்க்கை நகர வேண்டுமெனில் அதற்கு குறிப்பிட்ட அளவு பக்குவம் தேவைப்படுகிறது


Death Quotes In Tamil

மரணம் வாழ்க்கையின் இறுதிப் பரிசு. பொறாமை வரவழைக்காத பொக்கிஷம். விடை இல்லாத விந்தை. வினா வெல்ல முடியாத எதிரி. எல்லா வகை கர்வத்தையும் சுக்கு நூறாக மாற்றும் சூட்சுமம்.

வேண்டாம் என்று விலகி சென்ற நான் தான் அவள் கல்லறையின் அருகில் துணையாக அமர்கிறேன்.

யாரும் பயந்துவிடாதீர்கள். பயம் கொள்வதால் விட்டு விட்டா செல்லப்போகிறது, மரணம்? மரணத்துக்கு துணிவிருந்தால் வந்து நம்மை பெற்றுக் கொள்ளட்டும் என்று எதிர்நில்லுங்கள்.

Death Quotes In Tamil


மனிதன் இறுதியாக-இறப்பதற்கு இடையில், மனதால் பல முறை-இறந்து விடுகிறான். சில நேரம்-சில மனிதர்களால்; சில நேரம்-சில மாற்றங்களால்.

நல்லவன், கெட்டவன், ஏழை,பணக்காரன் எவராக இருந்தாலும் ஒரே நீதி மரணத்தின் முன் மட்டுமே.

ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடியே நாம் தீர்த்தாலும், ஒரு நாள் அடங்கிப் போகும் நம் ஆட்டம் அனைத்தும். அது தான் நம் மரணம்.


Death Quotes In Tamil

தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகந்தையில் வாழ்ந்தவரும் வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும் தருணம் அது தான் "மரணம்"

கண்கள் இமைக்க மறந்து இதயம் துடிக்க மறுத்த தருணம் மரணம்.

இதயம் துடிக்க மறுத்து நம் ஆத்மா அடங்கி ஆன்மா எழுந்து போகும் தருணம் அதுவே மரணம்.


Death Quotes In Tamil

வாழ்க்கை என்னும் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனுக்கும் இறுதிப் பாடம் "மரணம்".

மனிதன் மனிதனை அன்பு, பாசம், வேசம், துரோகம் கொண்டு வென்றாலும், மரணதேவன் வரும் போது இவன் நாடகம் எதுவும் பலிப்பது இல்லை

மூச்சை இழுக்க மறந்தால் 'மரணம்'. இழுத்த மூச்சை விட மறந்தால் 'மரணம்'. அவ்வளவு தான் "வாழ்க்கை

கொடுத்தவன் எவனோ எடுத்தவனும் அவனே. உயிர் கொடுத்து, உடல் கொடுத்து, ஆசைகள் பல விதைத்து விட்டு, செடியாகி, மரமாகி,காயாகி, கனியாகும் முன் எடுப்பதை என்ன சொல்வது? "கொடுத்தவன் கெடுத்தான். கொடுத்தவன் எடுத்தான்".


Death Quotes In Tamil

நாம் எடுத்துவிடும் ஒவ்வொரு மூச்சிலும் நாம் கல்லறையை நோக்கிய பயணத்திற்கான காலங்களே..மூச்சு நிற்கும்போது மரணம் நேர்கிறது.

உரிய நேரத்தில் நிகழும் மரணம் பேரிழப்பு அல்ல. மிக அதிகமான பிறப்புகள்தான் உண்மையான பேரிழப்பு.

மரணம் குறித்த விழிப்பு உங்களிடம் இருந்துவிட்டால் அது ஞானம் அடைந்த நிலைக்கு ஒப்பாகும்.

உயிர் இருப்பதைப் போலவே மரணமும் இருக்கிறது. இந்த உண்மையை உள்ளுக்குள் உணர்ந்துவிட்டால் உங்கள் வாழ்வை முழுமையாக வாழலாம்

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு