தாய்- மகள் உறவு எதனால் வலுப்பெற்றது தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!

Daughter Mother Quotes in Tamil
Daughter Mother Quotes in Tamil
இவ்வுலகில் பல்வேறு விஷயங்கள் விந்தைக்குரியனவாக இருக்கின்றன. அதில் பெண்மையும் ஒன்று. பெண் தாய்மை வடிவில் கடவுளுக்கு ஒப்பாகிறாள். தாய்மை குணம் என்பது இயற்கை வாரி வழங்கிய விந்தை குணம். அப்படி பிறந்த பெண் மகளாகவும் இருக்கிறார். மகள் என்பவள் தாய்க்கு இன்னொரு தாய். ஆமாம் பெற்றோரைத் தாங்குவதில் பெண் குழந்தைக்கு நிகராக ஆண்மகன் இருப்பதில்லை.

அதனால் தாய் பெண் குழந்தையை விரும்புவாள். மகன் கடைசி வரை காப்பாற்றினாலும் மகள் அளவுக்கு மகனால் எதுவும் செய்துவிட முடியாது. அதனால் தாய் -மகள் உறவு தனித்தன்மை வாய்ந்தது. அப்பாவுக்கு மகளை பிடிப்பதும், அம்மாவுக்கு மகனை பிடிப்பதும் எதிர்பால் ஈர்ப்பின் இயற்கை சார்ந்த விஷயம். பிடித்திருப்பதிலும், அன்பு செலுத்துவதிலும் மகனுக்கும் மகளுக்கும் ஒரு தாய் வேறுபாடு காட்டுவதில்லை. இருப்பினும் தன்னைப் பேணுவதில் மகளுக்கு கூடுதல் சுதந்திரம் உள்ளது, இருவரும் பெண்கள் என்பதால். இதோ தாய் மகள் உறவு குறித்த மேற்கோள்கள்.
காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய்மட்டுமே அவளை காலம் முழுதும் மனதில் சுமப்போம்..!
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கும் அவளுக்கும் விடுமுறையில்லை, ஆமாம்..அம்மா சமையலறை..! ஓய்வறியா இருகால் எறும்பு அவள்..!
இன்பம்,துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அணைத்துக் கொள்கிறது தாய்மை..!

வயது வித்தியாசம் பார்ப்பதில்லை...நாற்பதைத்தாண்டியும் அம்மாவின் கொஞ்சலில் மட்டும் இன்னும் குழந்தையாகவே நாம்..!
அம்மாவின் கைக்குள் இருந்த வரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது..!
அன்பு கலந்த அக்கறையோடு சமைப்பதால்தான் எப்போதும் அம்மாவின் சமையலில் சுவை அதிகம்..! பாசமும் சேர்ந்து வேகிறது..!
நான் முதல்முறை பார்த்த அழகிய பெண்ணின் முக தரிசனம், அம்மா..! என் குழந்தை பருவத்தின் நிலா, என் அம்மா..!

இன்று என்னை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்த என் அன்பு அம்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாலும் அந்த ஆசை தீராது..!
நான் உன்னுடன் இருக்கும் பொழுது என் பிரச்னையை எப்போதும் மறந்து விடுகிறேன் என் செல்ல அம்மாவே..!
எதுவும் அறியாத புரியாத வயதில் எந்த சுமைகளும் கவலைகளுமின்றி அன்னையின் கரங்களில் தவழும் காலம் சொர்க்கமே..!
உயிருக்குள் அடைக்காத்து, உதிரத்தை பாலாக்கி, பாசத்தில் தாலாட்டி, பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து நமக்காகவே வாழும் அன்பு தெய்வம், நம் அன்னை..!

கடல் நீரை கடன் வாங்கி கண்கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா இந்த வாழ்க்கை..!அன்னையர் தின வாழ்த்துக்கள்..!
ஒவ்வொரு நாளும் கவலைப்படுவாள். ஆனால் ஒரு நாளும் தன்னைப் பற்றி கவலைப் படமாட்டாள்..1
ஆயிரம் உணவுகளை ஐந்து நட்சத்திர உயர் ஓட்டலில் வித விதமாக சாப்பிட்டாலும் அன்னை சமைத்த உணவுக்கு ஈடாகாது..!
உலகின் நிகழ்வுகளை அவ்வப்போது எடுத்தியம்பி..இயற்கையின் அழகினை பாடமாக கற்றுக்கொடுத்து வாழ்க்கையின் நூலகமாக, முதல் குருவாக இருப்பவர் அம்மா மட்டுமே..!
ஆயிரம் உறவுகள் உன் மீது அன்பாக இருந்தாலும் அன்னையின் அன்புக்கும் அவள் அரவணைப்பிற்கும் எதுவும் ஈடாகாது..!

நிம்மதியான தூக்கத்திற்கு தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் வேறெதுவும் இல்லை..!
அம்மா, எந்த நேரத்திலும் தன்னைப் பற்றி கவலைகொள்ளாமல் நமது ஆரோக்யத்தில் அக்கறை கொள்ளும் அந்த உணர்வு பாசம் தான், தாய்மை..!
உன்னை அணைத்துப் பிடிக்கும் போதெல்லாம் உணர்கிறேன், உலகம் என் கையில் இருக்கிறதென்று..!
அன்புள்ள மகளே, எனக்குத் தெரிந்த மிகவும் கனிவான மனிதர்களில் நீயும் ஒருவர். ஒருபோதும் மாறாதே. பிறந்தநாள் வாழ்த்துகள்..!
ஆனந்த யாழை மீட்டுகிறாய்..! அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்..! அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்..! அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்..! அன்பு மகள்களுக்கு நல்வாழ்த்துகள்..!

மனைவியின் பேச்சைக் கேட்காத கணவர்கள்கூட மகளின் பேச்சைக் கேட்பார்கள், ஒரு நல்ல தந்தையாக..! இனிய மகள்கள் தின வாழ்த்துகள்..!
கோவில் தெய்வங்கள் எதற்கு..? உனது புன்னகையே போதுமடி...! செல்ல மகள்களுக்கு பெற்றோர்களின் அன்பு வாழ்த்துகள்..!
பெண் குழந்தைகள் வாழும் வீடு, ஆனந்தம் பொங்கும் வீடு..! அழகிய தேவதைகள் வாழும் வீடு..! அன்பினைப் பொழியும் பாசக்கிளிகளின் கூடு..! மகள்கள் தின நல்வாழ்த்துகள்..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu