Dad and Son Quotes in Tamil-'அப்பா' எனும் மந்திரச் சொல்..! வழிநடத்தும் விந்தை..!

Dad and Son Quotes in Tamil-அப்பா எனும் மந்திரச் சொல்..! வழிநடத்தும் விந்தை..!
X

dad and son quotes in tamil-அப்பா மகன் மேற்கோள்கள் (கோப்பு படம்)

ஆயுள் உள்ளவரை தன் மகனை அல்லது மகளை மனதில் சுமக்கும் ஒரு அற்புதமான மனிதர், அப்பா. அந்த அன்பிற்கு ஈடேது?

Dad and Son Quotes in Tamil

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கெங்கோ இழுத்துச் சென்றாலும் கூட, சுற்றுப்புறமும் சூழலும் மாறி இருந்தாலும் என்னை ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு, என்னை வீரியமாய் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆழ்ந்து யோசித்தால் அந்த வார்ப்பு வேறு யாருமல்ல என் தந்தை என்று என் மண்டைக்குள் ஓங்கி குட்டு வைத்ததுபோல உரத்துச்சொல்கிறது.

Dad and Son Quotes in Tamil

அப்பா என்ற அந்த மந்திரச் சொல்லின் மேற்கோள்கள்

சொந்தக் காலில் நிற்கும் போது தான் தெரிகிறது.. இத்தனை நாள் சுமந்தவருக்கு எப்படி வலித்திருக்கும் என்று.!

தான் பார்த்த உலகத்தை தன் பிள்ளைகளும் பார்க்கணும்னு நினைப்பவள் தாய்.. தான் பார்க்காத உலகத்தை கூட தன் பிள்ளைகள் பார்க்கணும்னு துடிப்பவர் தந்தை

என்னை பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தவள் என் தாய் என்றால்... என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சிலே சுமந்தவர்... "என் அப்பா "

அம்மா கஷ்டப்படுவதை கண்டுபிடித்துவிடலாம் ஆனால், அப்பா கஷ்டப்படுவதை பிற்காலத்தில் பிறர் சொல்லி தான் நமக்கே தெரிய வரும்.

50 கிலோவை கூட சாதாரணமாக தூக்கும் ஆண்களுக்கு... தன் கைகுழந்தையை தூக்கும் பொழுது வரும் பயத்திற்கு ஈடு இணையே இல்லை....

வெளியே வேலைக்கு சென்று சம்பாதித்து பார் அப்பாவின் கஷ்டம் புரியும், தனியாக வீட்டில் சமையலும் துணி துவைத்தும் பார் அம்மாவின் அருமை தெரியும்

Dad and Son Quotes in Tamil

"நம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான்" என்று நாம் உணரும் காலத்தில் * நீ சொல்வதெல்லாம் தவறு" என்று சொல்ல நமக்கு ஒரு மகன் பிறந்து விடுகிறான்.

தகப்பனின் வருகைக்காக வாசலில் தவமிருக்கும் மகளைவிட அழகாய் காட்சியளிப்பதில்லை எந்த தேவதையும்

பூக்கள் கேட்டால் சோலையை காண்பிப்பாய், பட்டாம்பூச்சிகள் பார்த்தால் இறக்கை தந்திடுவாய், நிலவைக் கேட்டால் இரவை வரச் செய்வாய், கதைகள் சொன்னால் நான் உறங்கியும் நீ விழிப்பாய்... தந்தையர் தின வாழ்த்துகள்

பிள்ளை முகம் பார்த்தே தேவைகள் அறிவாய், உன்னால் முடியும் வரை முயன்று பார்ப்பாய். சில தடவைகள் தோற்பாய். தலையை அடமானம் வைத்துக் கூட நான் ஆசைப்பட்ட கனவுகளை, முள்ளிடம் மண்டியிட்டு பூவென விழிகளில் காட்டிடுவாய்.

எனக்கு தாய் இல்லை என்று நான் வருத்தப்படவில்லை ..... ஏனென்றால் என் தந்தையின் பாசம் தாய் இல்லை என்ற குறையை மறைத்துவிட்டது.

Dad and Son Quotes in Tamil

உன் நிழலில் நான் இளைப்பாரான் உன் வியர்வை சிந்தி பசியாற்றுகின்றாய் உடலுக்குள் இறைவன் தந்த இதயத்தை வியர்வை வாசம் படிந்த உன் உதிரத்தால் உணர்வுகளை கற்றுத்தரும் அன்பின் உலகம். தந்தையர் தின வாழ்த்துக்கள்

மழைத்துளிகள் வேயாத குடிசைக்குள் விழுந்தால் குடையென பெரும் இலையை கரங்கள் தாங்கிட, குளிரிலும் உடையென உன் தேகம் பற்றி உயிர்கள் தூங்கிட, விழி மூடாமல் சுழலும் அன்பின் நிலா அப்பா

உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என !

நம்மல எந்த சுழ்நிலையிலும் யார்க்கிட்டயும் எதுக்காகவும் விட்டு குடுக்காத ஒரே உறவு "அப்பா" மட்டும் தான்...!!!

நான் வணங்கும் தெய்வங்களில் நேரடியானவர் நீங்கள் மட்டுமே ..... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா.......

Dad and Son Quotes in Tamil

எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வுகான துடிக்கும் முதல் இதயம் அப்பா மட்டுமே...!

அப்பா ஏழையாக இருந்தாலும் நம்மை எப்போதும் ஏழையாக வளர்க்க நினைத்ததில்லை...

தன்னிடம் உள்ள அனைத்தையுமே அள்ளி தந்ததாலே என்னவே தந்தை தியாகி போனாய் !!!

மரணத்தை விட கொடியது ஒன்று உண்டு எனில் அது தந்தையின் கண்ணீர் தான்

இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை, ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடியும் உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா....

தன் மகளை சாமியாக நினைப்பது அப்பாக்கள் மட்டும் தான்...

ஒரு ஆண் கொஞ்சம் கொஞ்சமாக திருந்திகிட்டே வர்றான்னா.... அவன் பெத்த பொண்ணு வளர்ந்து கிட்டே வர்றானு அர்த்தம்.

Dad and Son Quotes in Tamil

மனைவியின் பேச்சை கேட்காத கணவன்கள் கூட! மகளின் பேச்சை கேட்பார்கள் தந்தையாக!

எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும்...!!! அப்பாவை போல் யார் இருக்க முடியும்...???

ஒரு நிமிடம் உன் தோள் சாய அனுமதி ...... என் மறுஜென்மத்து துன்பங்களையும் மறந்து விடுகிறேன்

பொறுமையே இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும். ஆனால் பொறுப்புள்ளவன் தான் ஒரு தந்தையாக முடியும்

அப்பாவோட வருமானத்தை சுலபமாக அனுபவிக்க மகனுக்கு சுதந்திரம் இருக்கு, ஆனா அதே சுதந்திரம் அதே மகன் சம்பாதிக்கும் போது அதே அப்பாக்கு கிடைப்பதில்லை

என் தாய் சுமந்தால் என்னை பத்து திங்கள்கனால் தந்தையே என்னை நீ சுமக்கிறாய் உன் வாழ்நாள் முழுதும், தந்தையே என் நன்றியை உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் இந்த இனிய நாளில்... தந்தையர் தின நல்வாழ்த்துகள்

Dad and Son Quotes in Tamil

கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு ஆனால் கடவுளோ வரமாக கிடைத்தார் அப்பாவாக எனக்கு.

அப்பாவின் தோல் மேல் ஏறி நின்று சாமி பார்க்கும் பருவத்தில் தெரியவில்லை, சாமி மேல் தான் ஏறி நின்றேன் என்று.

நீ தான் என் தந்தை ! நீ தான் என் வலிமை! நீ தான் என்னுடைய ஞானத்தின் நீருற்று! தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

கஷ்டப்படும் போதெல்லாம் உணர்கிறோம் கஷ்டங்கள் தெரியாமல் வளர்த்த அப்பாவை..!

அப்பாவுக்கு தொந்தரவு இருக்க கூடாதென்று பெண் பிள்ளைகள் கூறும் "ஒண்ணுமில்லப்பா" வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளன.

உன் அன்பை தோற்கடிக்கும் மற்றொரு அன்பை உலகில் யாரும் தரப்போவது இல்லை உன்னை தவிர.....

Dad and Son Quotes in Tamil

இந்த உலகத்தில் தாய்ப் பாசத்திற்கு மேலான ஒரு பாசம் இருக்குமானால், அது தந்தை பாசமாக மட்டுமே இருக்க முடியும்.....

வீட்டு வாடகை, மின் கட்டணம், தீபாவளி, பொங்கல், உறவினர் வீட்டு விழாகள், பிள்ளைகளின் படிப்பு, அரிசி, காய்கறி, போன்ற வரவு செலவு கணக்குகளை சரிபார்க்கும் போது தான் தெரிந்தது.... இத்தனை நாளும் எனக்கு சோறு போட்ட அப்பா .. கடவுள் என்று...!

கணவனுக்கு மனைவி ராணியாக இல்லாவிடினும் அப்பாவுக்கு மகள் என்றுமே இளவரசிதான்

என் மறுஜென்மம் நம்பிக்கை இல்லை மறு பதிப்பாய், என் குழந்தை

கேட்டது எல்லாம் கிடைக்கும் வரம் காணப்பெற்றேன் தந்தையாக நீங்கள் கிடைத்த பிறகு!

இன்பமான நேரம் நீ என் மார்பில் உறங்கிக்கொண்டு இருந்தாய் சந்தோசமாக இருந்தது மறுபக்கம் கவலையாகவும் இருந்தது என் இதய துடிப்பு உன்னை எழுப்பி விடுமோ என்று!!

Dad and Son Quotes in Tamil

நல்ல தகப்பனிடம் வளர்ந்த பெண்ணிற்கு ஆணைப் பற்றிய எண்ணம் அழகானது..! நல்ல தாயிடம் வளர்ந்த ஆணிற்கு பெண்ணைப் பற்றிய சிந்தனை பேரழகானது..!

எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை , ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும், இளவரசியாகவும் தான் வளர்க்கப்படுகிறார்கள்..!

அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் தெரியும் ஒரே உறவு “அப்பா"

Tags

Next Story