/* */

ஆஸ்துமாவின் சிரமம் தீர்க்கும் சித்தரத்தை..! எப்படின்னு தெரிஞ்சுக்கங்க..!

Chitharathai Benefits in Tamil-மூலிகை மருத்துவ பயன்பாடுகளில் சித்தரத்தை முக்கிய பங்கினை வகிக்கிறது. அதன் மருத்துவ குணங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்,வாங்க.

HIGHLIGHTS

Chitharathai Benefits in Tamil
X

Chitharathai Benefits in Tamil

Chitharathai Benefits in Tamil

சீன இஞ்சி என்று அழைக்கப்படும் சித்தரத்தை இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன இஞ்சி’ என்றுதான் அழைக்கிறார்கள். சித்தரத்தை எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. ஆமாம், இஞ்சி வளரக்கூடிய செம்மண்கலந்த சரளையில் சித்தரத்தை நன்கு வளரும்.

சித்தரத்தை தாவரம் சுமார் 5 அடி உயரம் வளரும். இதன் இலைகள் நீண்டு மஞ்சள் செடியின் இலைபோன்று இருக்கும். புதர்ச் செடிபோல வளரும். இதன் வேர் பாகத்தில் கிழங்குகள் பரவி நீளும். அதனால் செடி பக்க வாட்டில் வளர்ந்து பெருகும். இதன் வேரில் உண்டாகும் கிழங்கு தான் மருத்துவ குணம் உடையது. இந்தக் கிழங்கு மிகவும் கடினமாக இருக்கும். குருமிளகு வாசனை போல வீசும். கிழங்குகள் மூலம் புதிய செடி விருத்தி செய்யப்படுகிறது.

வாயுக்கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாசக் கோளாறுகளுக்கு சித்தரத்தை நல்ல மருந்து. சித்தரத்தையை எப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.

சித்தரத்தை மருத்துவ பயன்கள்

ஆஸ்துமா குணமாக :

சிலருக்கு ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைத்து மூச்சு விடுவதில் சிரமப்படுவார்கள்.அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி அதை தினமும் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, ஆஸ்த்துமா பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும். இதையே, அடிக்கடி சளித்தொல்லையால் பாதிக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்தால் சளி தொல்லைகளில் இருந்து குழந்தைகள் குணமடைவார்கள்.

இருமல் தடுக்க :

இருமல் ஏற்படும்போது சிறிய துண்டு சித்தரத்தையை வாயில் போட்டு லேசாக அதை சுவைக்கவேண்டும். அப்பபோது நாவில் காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை ஏற்படும். இதனால் இருமல் நின்றுவிடும். உடல் சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து வாயில் போட்டு சுவைத்தால் இது இருமலை போக்கி விடும். இருமலுக்கு இது அற்புத கைக்கண்ட மருந்து.

இடுப்பு வலிக்கு சித்தரத்தை நீர் :

இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில், சிலருக்கு கடுமையான வலி ஏற்பட்டு சாதாரண வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள். அவர்கள், அம்மியில் இஞ்சியை உரசி அந்த சாறு உள்ள இடத்தில், சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்கவேண்டும். அப்போது சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வந்துவிடும். அதை எடுத்து சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூடாக இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவவேண்டும். தொடர்ந்து இதை செய்தால் விரைவில் இடுப்பு வலி இல்லாமல் போகும்.

மூட்டு வலி தீர :

வயதான காலத்தில் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால் வியாதிகள் ஏற்பட்டு, கை கால் மூட்டுகளில், எலும்புகளின் இணைப்பில் வலி ஏற்படும். இதனால் வயது முதிர்ந்தவர்கள், உட்காரவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் சிரமப்படுவார்கள். இந்த பாதிப்புகள் நீங்க, நன்றாக காய்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில் சாப்பிடவேண்டும். வெகுநாட்களாக சிரமப்படுத்திய வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளில் ஆற்றல் மேம்படும். உடலுக்கு இது சிறந்த சக்தியளிக்கும் மருந்தாகும்.

வாய் துர்நாற்றம் நீங்க:

சித்தரத்தை சிறந்த மணமூட்டி. சித்தரத்தையை சிறு துண்டு எடுத்து அதை வாயில் போட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் அழிந்து நோய்த்தொற்றும் சீராகும்.

குழந்தைகளின் பல்நோக்கு மருந்து :

குழந்தைகளுக்கு பால் ஜீரணம் ஆகாமல் ஏற்படும் மாந்தம், இளைப்பு, சளி போன்ற பாதிப்புகள் விலக சித்தரத்தை சிறந்த மருந்து. உலர்ந்த சித்தரத்தைத் துண்டை விளக்கெண்ணையில் தோய்த்து நெருப்பில் சுட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைக்குழந்தைகளுக்கு நாக்கில் தடவ, விரைவில் நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாது. குழந்தைகளின் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

தொண்டைப் புண் :

தொண்டைப்புண் பாதிப்பை சித்தரத்தை சூரணம் குணமாக்கும். சித்தரத்தை தூளை, தேனில் கலந்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர தொண்டைப்புண் பாதிப்பு குணமாகிவிடும்.

குமட்டல் தடுக்க:

சிலருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது, குமட்டல் வந்து வாந்தி ஏற்படும். பயணஹத்தில் வாந்தி ஏற்படுபவர்கள், பயணத்தின்போது, சிறிய துண்டு சித்தரத்தையை வாயில் போட்டு மிட்டாய்போல சுவைத்துக்கொண்டிருந்தால் வாந்தியே வராது. வயிற்றைப் புரட்டி எடுக்கும் குமட்டலும் ஏற்படாது.

மூச்சுத்திணறல் சீராக :

சிலருக்கு ஜலதோசத்தினால் மூக்கடைப்பு ஏற்பட்டு, மூக்கின் வழியே மூச்சு விடமுடியாது அவஸ்தைப் படுவார்கள். சிலருக்கு வறட்டு இருமல் ஏற்பட்டு இருமி இருமி கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுவிடும். இந்த பாதிப்புகள் தீர, சித்தரத்தை, ஓமம், கடுக்காய் தோல் அல்லது பொடி, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி போன்ற மூலிகைகளை சம அளவில் எடுத்து, பொடியாக்கி, அதை அரை டம்ளர் தண்ணீரில், தேன் கலந்து பருகி வர, மூக்கடைப்பு, சளித் தொல்லை, மூச்சுத்திணறல், ஜுரம் மற்றும் வறட்டு இருமல் பாதிப்புகள் விலகும்.

எச்சரிக்கை அறிவிப்பு :

மேலே கூறிய மருத்துவ விளக்கங்களைக் கண்டு நீங்களாக மருந்துகளை உட்கொள்ளக்கூடாது. மருத்துவ ஆலோசனை பெற்று, மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்வது பாதுகாப்பானதாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 18 March 2024 6:58 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...