/* */

Cheating Love Quotes in Tamil-காதலுக்கு கண்ணில்லை,இதயம் உண்டு..!

காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் காதலில் நேர்மை உண்டு. காதல் தோற்றாலும் உண்மைக்காதல் அழிவதில்லை.

HIGHLIGHTS

Cheating Love Quotes in Tamil-காதலுக்கு கண்ணில்லை,இதயம் உண்டு..!
X

cheating love quotes in tamil-காதல் ஏமாற்ற மேற்கோள்கள் (கோப்பு படம்)

Cheating Love Quotes in Tamil

காதலின் அடித்தளமாக நம்பிக்கையும், நேர்மையும் திகழ்கின்றன. துரோகம் ஒரு ஆழமான வலிமிகுந்த காயத்தை ஏற்படுத்தும். அது அவநம்பிக்கையின் விதைகளை விதைக்கும் ஒரு பண்பற்ற செயல். உண்மையான அன்புக்கு விசுவாசமும் மரியாதையும் தேவை. துரோகத்தை வெளிப்படுத்தும் தமிழ் காதல் மேற்கோள்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

Cheating Love Quotes in Tamil

ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால்

உண்மையாக வெறுத்து விடு

பொய்யாக நேசிக்காதே.

உங்களிடம் ஒருவர் ஆறுதல் தேடி வரும் போது

ஆறுதல் சொல்லி விட்டு, பிறகு அவரை

மற்றவரிடம் குறை கூறினால் அது

நம்பிக்கை துரோகம்.

உங்களை ஏமாற்றியவர்களை மன்னித்து விடுங்கள்

ஆனால் மறுபடியும் அவர்களை

மறந்தும் கூட நம்பி விடாதீர்கள் .

துரோகத்தை செய்து விட்டு

அந்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட

இல்லாமல் திரிபவர்கள் தான்

மிகச் சிறந்த துரோகிகள்.

Cheating Love Quotes in Tamil

நீ யாருக்காக அழுது அழுது

இறந்து கொண்டிருக்கிறாயோ

அவர்கள் வேறு யாருடனோ

சிரித்து சிரித்து வாழ்ந்து

கொண்டு இருப்பார்கள்.

பல பேரின் மாற்றங்களுக்கு காரணமே

சிலர் தரும் ஏமாற்றங்கள் தான்!

துரோகங்கள் வலியை விட

ஆச்சரியத்தை தான் தருகின்றன

இவ்வளவு சிறப்பாக எப்படி நடித்து

ஏமாற்றினார்கள் என்று.

துரோகத்தின் முதல் விதை

அதிகபட்ச நம்பிக்கையால்

தான் விதைக்கப்படுகிறது.

Cheating Love Quotes in Tamil

தன்னோட தேவைக்காக மட்டுமே

உறவு வைத்துக் கொள்ளும் உலகம்!

கண்டிப்பாக தேவைகள் முடிந்ததும்

தூக்கி எரிந்துவிடும்.

என்னை ஏமாற்றியது

உனது தவறல்ல

என்னை ஏமாற்றும் அளவிற்கு

உன் இடம் நான் உண்மையாய்

இருந்தது தான் என் தவறு.

அவள் சென்று விடுவாள்

என தெரிந்திருந்தால்,

என் வாழ்நாள் முழுவதும் இருட்டிலேயே

நீந்தி கழித்திருந்துப்பேன்!

காதல் இல்லாத அவளும்,

அவள் இல்லாத நானும்

முழுமையடையாத வாக்கியங்கள்!

மின்மினிப் பூச்சியாய் வந்தவள்,

கானல் நீராய் மறைந்தது ஏனோ?

பணி கூட சுமையில்லை! ஆனால் பனியும் சுடுகிறது,

நீ இல்லாத இரவுகளில்!

Cheating Love Quotes in Tamil

வந்த தூக்கத்தை துறத்தி விட்டு,

வராத உன்னை பார்க்கிறேன்

அறை சுவரில் சுவரோவியமாக உன் முகம்!

பழகுவது தவறில்லை,

அளவுக்கு அதிகமாக

பாசம் வைப்பது தான் தவறு!

கண் மூடி நான் காணும் கனவே,

கண் விழிக்க நான் மறுக்கக் காரணம்!

பசி அடங்கிய பின் கிடைக்கும்

உணவும், மனம் வெறுத்த பின்

கிடைக்கும் அன்பும் பயனற்றது.

நினைவில் இருந்து நீங்கிவிடு.

கனவில் வருவதை நிறுத்திவிடு!

கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்!

கண்ணீர் வராமலே காலங்கள் கழியட்டும்!

அருகில் இருப்பவர் அருமை தெரிவதில்லை,

அவர்கள் அருகில் இருக்கும் வரை!

Cheating Love Quotes in Tamil

நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை காயப்படுத்தும் போது,

ஏற்படும் வலி மரணத்திலும் கொடியது!

நம்மை ஒருவர் காயப்படுத்துவது வேதனை!

அதையே நியாப்படுத்துவது நரக வேதனை.

சிரிப்பதால் வலியை

மறந்து விட்டேன் என்று அர்த்தம் அல்ல!

மறைத்து விட்டேன் அவ்வளவு தான்!

Updated On: 13 Feb 2024 2:21 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    குழந்தை பருவ காதலிக்காக வேலை கேட்டு உருக்கம்: சிஇஓ பதிவு வைரல்
  2. திருவள்ளூர்
    6.ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட குளியலறையை சீரமைத்து தர...
  3. லைஃப்ஸ்டைல்
    சோயா புரதம்..! மேற்கத்திய கட்டுக்கதைகள்..!
  4. வேலைவாய்ப்பு
    இந்தியாவில் சட்டம் பயின்றோருக்கான சிறந்த தொழில் வாய்ப்புகள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தேசிய வேளாண் மார்க்கெட்டில் கொப்பரை ஏலம்
  6. நாமக்கல்
    சேந்தமங்கலம் பகுதிகளில் நாளை 15ம் தேதி மின்தடை அறிவிப்பு
  7. அரசியல்
    40 தொகுதிகளின் ரிசல்ட் உணர்த்துவது என்ன? இது அனைத்து கட்சிக்குமான ஒரு...
  8. வீடியோ
    🔴LIVE: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள்...
  9. இந்தியா
    ஆந்திராவின் மறக்க முடியாத ஹீரோ..!
  10. திருத்தணி
    ஜெகத்ரட்சகன் எம்.பி., நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு..!