பூரான் கடிச்சிடிச்சா..? என்ன செய்யலாம்..? தெரிஞ்சுக்கங்க..!

Centipede in Tamil
Centipede in Tamil

இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது ஏதாவது பூச்சி கடித்து விடும். என்ன பூச்சி கடித்தது என்று சருமத்தில் ஏற்பட்டிருக்கும் தடிப்புகளை வைத்தே நாம் அறிந்துகொள்ளமுடியும். பூரான் அல்லது நூறுகாலி என்று அழைக்கப்படும் பூச்சி கடித்த இடத்தில் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் காணப்படும். குழந்தைகளுக்கு அரிப்பும் எரிச்சலும் ஏற்படும். இதை வைத்தே அது பூரான் கடிதான் என்பதை உறுதி செய்ய முடியும். பூரான் விஷம் இல்லையென்றாலும் சில உடல் ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி வரலாம். பூரான் கடிதானே என்று அலட்சியம் காட்டக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் செல்லவேண்டும். அதற்கு முன்னதாக சில முதலுதவி சிகிச்சைகள் செய்யலாம்.

பூரான் கடித்த இடத்தில் உடனடியாக ஆன்டிசெப்டிக் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும். இதனால் அரிப்பும் எரிச்சலும் கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் நெருப்பு சுட்டதுபோல இருக்கும். வலியும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும்.
Centipede in Tamil
ஊமத்தை தைலம்
பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி பலமாதங்களாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும். ஊமத்தம் செடியின் இலைகளை நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால் லிட்டர் நல்லெண்ணெயில் ஊற வைக்கவேண்டும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி வெயிலில் ஊறவைத்து குளிக்கவேண்டும். இதன் மூலமாக உடலில் வேறு அரிப்புகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தாலும் குணமாகும். ஊமத்தை தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.
பனை வெல்லம்
பூரான் கடித்தது என்று தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை கரைத்து ஒரு சங்கு அளவு கொடுக்கலாம். சாப்பிட தெரிந்த குழந்தையாக இருந்தால் பனைவெல்லம் தந்து சாப்பிடச் சொல்லலாம். அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும். தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக ஆன்டிசெப்டிக் சோப்பு போட்டு கழுவலாம்.

Centipede in Tamil
குப்பைமேனி இலை
சுமாராக 6 அவுன்ஸ் வெற்றிலைச் சாற்றுடன் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் காற்றுப்புகாமல் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வெந்நீரில் குடித்து வரவேண்டும். இந்த மருந்து சாப்பிடும்போது உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது.
குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும்.

ஆகாச கருடன் கிழங்கு
ஆகாச கருடன் கிழங்கை, சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். இந்த மருந்து சாப்பிடும் 3 நாட்களும் வெயில் படாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும்.
குழந்தைகளை பூரான் கடித்துவிட்டால் சில முதலுதவி சிகிச்சைகளை செய்து உடனே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்பெற்று அவரது பரிந்துரையின் பேரில் சிகிச்சைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu