Calm Quotes in Tamil-மனம் வசப்பட்டால் வாழ்க்கை மணக்கும்..!

Calm Quotes in Tamil-மனம் வசப்பட்டால் வாழ்க்கை மணக்கும்..!
X

calm quotes in tamil-அமைதி மேற்கோள்கள் (கோப்பு படம்)

'மனசே சரியில்லைங்க, தூக்கமே வர மாட்டேங்குது, யாராவது ஏதாவது சொல்லிடுறாங்க, மனசு ஒரே குழப்பமா இருக்கு' இதற்கு தேவையில்லாத சிந்தனைகளே காரணம்.

Calm Quotes in Tamil

கிழக்கோ, மேற்கோ, வடக்கோ அல்லது தெற்கோ நாம் எந்த திசையில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவரின் குறிக்கோளும் அமைதியே. ஏழை, பணக்காரர் யாராக இருந்தாலும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நாம் அனைவரும் மனிதர்கள், அதனால் பொதுவாகவே நம் அனைவரின் மனஓட்டமும் ஒரே விதமாக இருக்கிறது:

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக வாழத் தகுதி இருக்கிறது என்ற அந்த அளவிலேயே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருமே ‘நான்’ அல்லது ‘என்னுடையது’ என்றே கருதுகிறார்கள்.

ஆனால் உண்மையில் ‘நான்’ அல்லது ‘என்னுடையது’ என்பதன் முழு அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும், நான் என்ற உறுதியான எண்ணம் மட்டும் நம்மிடம் இருக்கிறது. இந்த உணர்வு வந்தவுடனேயே, மகிழ்ச்சியெனும் ஆசை துளிர்விடுகிறது, கவலைகளை ஏற்க மறுக்கிறோம். இவை தானாகத் தோன்றும், இந்த அடிப்படையில் பார்த்தால் நம் அனைவருக்குமே மகிழ்ச்சிக்கான உரிமை இருக்கிறது.

Calm Quotes in Tamil

மனம் தான் காரணம் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்வதில் மனம் மட்டுமே முக்கிய காரணியாக இருக்கிறது. இதுதான் வாழ்க்கை என்று ஆசையை குறைத்தால் மனம் அமைதி கிடைக்கிறது. கிடைப்பது போதாது என்று ஆசை மனம் ஏங்கும்போது மனம் அமைதி இழந்துவிடுகிறது. எது மனா அமைதி என்பதைக்காட்டும் மேற்கோள்கள்

நிரந்தரம் என்று

சொல்லிக் கொள்வதெல்லாம்

நிரந்தரமின்றி போக

மாற்றங்கள் மட்டுமே

நிரந்தரமாக்கிப் போகும்

காலத்தின் சுழற்சியால்..!

காலம் என்பது கண்ணீரை

மட்டுமல்ல காயங்களையும்

மாற்றும் கேள்விகளை

மட்டுமல்ல பதில்களையும்

மாற்றும்..!

கடந்து வந்த பாதைகள்

கடத்தி போக

மறுப்பதில்லை..

காலம் கடந்த நினைவுகளை

பரிசளிக்க தவறுவதில்லை..!

Calm Quotes in Tamil

சண்டை போட்டு

பேசாமல் இருக்கும் காலம்

போய் பேசினால் சண்டை

வரும் என்று பயந்து பேசாமல்

இருக்கும் காலத்தில்

வாழ்கிறோம்..!

இதெல்லாம் ஒரு நாள்

கடந்து போகும் என்று

காத்திருந்தேன் ஆனால்..!!

எதுவுமே கடந்து போகாது

எல்லாம் பழகிப்போகும்

என்று உணர்த்தி விட்டது

காலம்..!

நீ எவ்வளவு நன்மைகள்

செய்து இருந்தாலும் அதை

ஒரு நொடியில் மறந்து

விடும் இவ்வுலகம்..

நீ தெரியாமல் செய்த

ஒரு தவறை காலம்

முழுவதும் சொல்லிக்

கொண்டே இருக்கும்.

Calm Quotes in Tamil

கடந்து வந்த பின்பே

கண்டு உணர்கிறேன்..

என்னை கலங்கடித்த

காலமெல்லாம் கடுமையான

காலம் அல்ல.. என் வாழ்வை

வடிவமைத்த காலம்

என்று..!

கடைசி காலத்திற்கு

தேவை என்று ஓடி ஓடி

உழைக்கின்றோம் எது

கடைசி காலம் என்று

தெரியாமலே..!

காலம் கற்றுக் கொடுக்கும்

பாடம் போல எந்த ஒரு

ஆசானாலும் கற்றுக்

கொடுக்க முடியாது..!

காலம் கடந்து செல்கின்றேன்

யாவும் மாறும் என்ற

நம்பிக்கையில்..!

ஓடி வந்து மூச்சு வாங்கும்

போது தான் தெரியும்

தண்ணீரின் அருமை..

அது போல தான் கடந்து

வந்த பிறகு தான்

தெரியும் காலத்தின்

அருமை..!

Calm Quotes in Tamil

வாழ்த்தினாலும்

தாழ்த்தினாலும்

சிரித்துக் கொண்டே

இரு காலம் அவர்களுக்கு

பதில் சொல்லும்..!

கசப்பான நினைவுகள்

காலம் முழுவதும்

கசப்பதில்லை..

நிகழ்வுகள் மாறும் போது

நினைவுகளும் இனிக்கும்..!

தானாக உயரும் வயது..

விடாமல் துரத்தும் காலம்..

தடுக்க முடியாத நேரம்..

கடக்கத் துடிக்கும் இளமை..

காலைத் தடுக்கும் சமூகம்..

தொட வேண்டிய இலக்கு..

இத்தனை போராட்டங்கள்

தான் வாழ்க்கை..!

காலம் கடந்தது நினைவுகள்

வலித்தது ஆயினும் அசட்டு

நம்பிக்கையில் காத்திருந்தேன்

அதே காலத்துடன்..!

பாசம் வையுங்கள் தவறில்லை

ஆனால் பைத்தியம் ஆகி

விடாதீர்கள் ஏனெனில்

இங்கு முடிவே இல்லாத

வாழ்வும் இல்லை.. பிரிவே

இல்லாத உறவும் இல்லை..

எல்லாம் சில காலம் தான்..!

Calm Quotes in Tamil

பொறுத்தார் பூமி ஆழ்வார்

என்பது அந்த காலம்

பொங்கி எழுந்தால் தான்

இருப்பதையாவது

காப்பாற்றிக் கொள்ள

முடியும் என்பது இந்த

காலம்.. இது தான்

இன்றைய வாழ்க்கை..!

தொலைந்து போன

காலத்தை தேடித் தேடியே

இருந்த காலமும்

தொலைந்து போனது..!

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!