தீபாவளிக்கு பட்டர் முறுக்கு செய்வது எப்படி தெரியுமா?

தீபாவளிக்கு பட்டர் முறுக்கு செய்வது எப்படி தெரியுமா?
X

Butter Murukku Recipe- பட்டர் முறுக்கு ரெசிப்பி ( மாதிரி படம்)

தீபாவளி பண்டிகையில நீங்க பல வகையான முறுக்கு செஞ்சிருப்பீங்க.... பட்டர் முறுக்கு செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.

பட்டர் முறுக்கு ... இது ஒரு சுவையான முறுக்கு. அதுவும் இல்லாம சுலபமா செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்னாக். தீபாவளி மட்டும் இல்லாம, மாலை நேரங்கள்ல, குழந்தைகளுக்கு கொடுக்கவும் வீட்டுக்கு வர்ற கெஸ்டை உபசரிக்கவும் சூப்பரான ஒரு ஸ்னாக்ஸ்.

சரி வாங்க இந்த பட்டர் முறுக்கு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்...

20. பட்டர் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி மாவு : 1 கப்

கடலை மாவு : 1/2 கப்

பொட்டுக்கடலை மாவு : 1/4 கப்

உப்பு தேவையான அளவு

வெண்ணை : 1/4 கப்

எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், தேவையான அளவு உப்பு எல்லாத்தையும் சேர்த்து, கைகளால நல்லா கலந்துக்கோங்க...கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நல்லா பிசைஞ்சிக்கோங்க... வாணலியில் எண்ணை சூடானதும், முறுக்கு அச்சில் மாவை சேர்த்து பிழிஞ்சிக்கோங்க. இரண்டு / மூன்று நிமிசம் அல்லது பொன்னிறமாகும் வரைக்கும் பொரிச்சு எடுத்துக்கோங்க.

அவ்வளவுதான் ப்ரண்ட்ஸ், அட்டகாசமான பட்டர் முறுக்கு ரெடி... இதை சாப்பிட்டு பாருங்க...முறுக்குல இப்படி ஒரு சுவையை சாப்பிட்டு இருக்க மாட்டீங்க...

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!