/* */

Brother kavithai in tamil-ஒரு செடியில் பூத்த மலர்கள்..! சகோதர பாசம்..!

ஒரு வயிற்றில் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒருமுறை மட்டுமே பூக்கும் மனிதப்பூக்கள். அங்கு பாசம் கணக்கற்று விளைந்துகிடக்கும்.

HIGHLIGHTS

Brother kavithai in tamil-ஒரு செடியில் பூத்த மலர்கள்..! சகோதர பாசம்..!
X

brother kavithai in tamil-சகோதர பாசம் (கோப்பு படம்)

Brother kavithai in tamil

நமது நாட்டில் சகோதர பாசத்தினை வெளிப்படுத்த ராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற காவிங்களே சாட்சி. வேறு எந்த நாட்டிலும் இல்லாத சகோதர பாசம் குறிப்பாக தமிழ்நாட்டில் அது மென்மையாக கருதப்படுவதுடன் போற்றப்படுகிறது.


சகோதர பாசத்தை வைத்து எடுத்த சினிமாக்கள் எல்லாம் நூறுநாட்கள் கடந்து ஓடிய வரலாறும் தமிழ்நாட்டில் உள்ளது. தங்கைக்கு ஒரு பிரச்னை என்றால் சகோதரர்கள் ஒன்று சேர்வது தமிழ்நாட்டில் மட்டுமாகத்தான் இருக்கும். அக்காவாகட்டும் அல்லது தங்கையாகட்டும் சகோதரி பாசம் என்றால் சகோதரர்கள் கொஞ்சம் சொக்கித்தான் போவார்கள்.


அந்த அளவுக்கு சகோதர பாசம் உள்ளத்துக்குள் ஊற்றெடுத்து இருக்கிறது. வீட்டுக்குள் ஆயிரம் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் வெளியில் ஒரு பிரச்னை என்றால் சகோதரிகளுக்காக முதல் ஆளாக நிற்பது சகோதரர்கள்தான்.

Brother kavithai in tamil

அது சொல்லமுடியாத ஒரு பந்தக்கயிற்றால் இணைக்கப்பட்ட பாசம். ஒரு வயிற்றுப் பிள்ளைகளாக, ஒரு தாயின் மார்பில் பால் குடித்தவர்களாக பிணைக்கப்பட்ட பாசம். அதுதான் குடும்பம் என்னும் கோவில்.

அப்படியான குடும்பக்கோவிலில் சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் மேற்கோள்கள் உங்களுக்காக தரப்பட்டுள்ளன. படித்து பாசம் பெறுங்கள்.

ஒர் ஆணின் சிரிப்பை பகிர்ந்து கொள்வதற்கும் கண்ணீரை துடைப்பதற்கும் இறைவனால் அனுப்பப்பட்டவள் உடன் பிறந்த சகோதரி உறவு.

என் வாழ்க்கையில் நான் வெற்றி பெற உன் ஆதரவையும் தன்னம்பிக்கையையும் முழு சுதந்திரத்தையும் அளித்த நண்பனும் நீயே. என் உடன் பிறப்பும் நீயே.

திரைப்படத்தில் சூப்பர் ஹீரோவாக இருப்பதை விட வாழ்க்கையில் நல்ல உடன்பிறப்பாக

இருப்பவரே உயர்ந்த சகோதரர்.


Brother kavithai in tamil

ஒரு கொடியின் இரு மலர்கள் போன்றது அண்ணன்-தங்கை உறவு. அந்த பந்தத்தை பிரிக்க முடியாது. யாராலும் அழித்துவிட முடியாது.

என் வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் வரலாம், போகலாம். ஆனால் என் வாழ்க்கையின் ஒப்பற்ற அன்பின் ஒற்றைச் சகோதரன் நீ ஒருவன் தான்.

அண்ணனுடன் பிறந்த தம்பிகளுக்கு மட்டும் தான் தெரியும் அண்ணனுக்கு இன்னொரு பெயர், அப்பா என்று.

அப்பா மகன் உறவு போல தான் அண்ணன் தம்பி உறவும். வளர்ந்த பின் அதிகம் பேசமாட்டோம் ஆனால்,

உள்ளுக்குள் பாசம் அப்படியே புதைந்து இருக்கும்.


Brother kavithai in tamil

உன் பாசத்தை உரத்து சொல்ல ஓராயிரம் கவிதைகள் தேவையில்லை. 'அண்ணா' என்று நீ சொல்லும்

ஒற்றை வார்த்தை ஆயிரமாயிரம் கவிதைகளுக்கு சமம்.

அண்ணனோட பாசம் தங்கச்சிக்கு மட்டும் இல்ல. தம்பிக்கும் தான், ஒரு செடிக்கு பாய்ச்சும் நீரைப்போல.

ஆயிரம் சொந்தங்கள் எனக்காக துடித்தாலும், என்னை அன்பாகப் பார்த்துக் கொள்ளும் என் அண்ணன் தான்

எனக்கான உலகம்.

சந்தோசமாக வாழ காசு பணம் தேவையில்லை. பாசமாக பார்த்துக் கொள்ள அண்ணன் ஒருவன் இருந்தால் போதும். வாழ்க்கையே சொர்க்கம் ஆகும்.


Brother kavithai in tamil

அன்பு காட்ட அன்னையும், வழி காட்ட தந்தையும், சண்டை போட தங்கையும், பாதுகாக்க அண்ணனும் என

இது போன்ற சொந்தங்கள் ஒன்றாய் இருந்துவிட்டால் இந்த பூமியே சொர்க்கம் தான்.

ஆயிரம் முறை சண்டை போட்டாலும் தம்பிக்கு ஒரு பிரச்னை என்றால் உயிரையும் துச்சமென மதிக்கும் துணிந்த உறவு அண்ணன் மட்டுமே.

தேனீயின் ரீங்கார ஓசையில் கிடைத்த லேசான சிலிர்ப்பில் முத்தமிடும் இரு மொட்டுகள் போல எங்கள் அக்காவும் நானும் வளர்ந்த அந்த இனிமையான காலங்கள் இன்னும் என் மூளைச் செல்களுக்குள் பதிவாகி கிடக்கிறது அக்கா. இப்படிக்கு உன் தம்பி

அம்மாவிற்குப் பிறகு என்னை புரிந்து கொள்ளும் ஒரு பெண் என் தங்கை மட்டுமே. ஒரு நாளின் வாழ்க்கைமுறையை அவளிடம் மட்டுமே முழுதாய் பகிர்வேன்.


Brother kavithai in tamil

அண்ணா என்ற வார்த்தை கூட கவிதையாய் கேட்கிறது, என் தங்கை என்னை அண்ணா என்று அழைக்கும்போது. அண்ணா எனும் வார்த்தை அழகுபெறுகிறது என் தங்கையின் குரல் பட்டு.

என் துன்பங்களின்போதெல்லாம் என் அண்ணன் வருவான் என்ற தங்கையின் நம்பிக்கையே அண்ணன்களின் அசுரர் பலம்.

தன்னை விட சிறியவள் ஆயினும், தங்கம் எல்லாம் தூசியாகும் அண்ணனின் பாசத்தின் முன்னே. இமயம் தொட்டு நிற்பாள் தங்கை, தன் பாசத்தால்.

அண்ணனின் உள்ளத்தில் உயர்ந்து நிற்பவளே தங்கை. தூசி பட்டாலும் துடித்து ஓடுபவனே அண்ணன்.


Brother kavithai in tamil

என்னை உள்ளத்தில் தாங்கும் உன்னைப்போல் ஒருவன் இன்னும் இந்த உலகில் பிறக்கவில்லை அண்ணா. காத்திருக்கிறேன் உன் அனுமதி பெற்று திருமணம் செய்ய.

உன்னோடு சண்டையிட்ட நினைவுகள் ஏனோ உன் திருமண நாளன்று வருகிறது. அது கண்ணீர் துளியை சிந்துகிறது. தங்கையே உன் திருமணத்திற்கான ஆனந்தக் கண்ணீரா? இல்லை அழுகையா என்று எண்ணிப் பார்க்க எனக்கு நேரமில்லை கண்ணே.

Updated On: 11 Sep 2023 10:06 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  3. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  4. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  5. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  7. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...