அட..வாங்க சுந்தரி அக்கா..! நம்ம கத்திரிக்காய் ஆரோக்ய நன்மைகளை தெரிஞ்சுக்கலாம்..!

அட..வாங்க சுந்தரி அக்கா..! நம்ம கத்திரிக்காய் ஆரோக்ய நன்மைகளை தெரிஞ்சுக்கலாம்..!
X

brinjal in tamil-கத்திரிக்காய் நன்மைகள்.(கோப்பு படம்)

Brinjal in Tamil Meaning-கத்திரிக்காய் சாம்பார், கத்திரிக்காய் வத்தக்குழம்பு,கத்திரிக்காய் கருவாட்டுக்குழம்பு..சொல்லச் சொல்ல சுவைக்குதடா..என்று பாடத்தோன்றுகிறதா..?

Brinjal in Tamil Meaning-நமது உணவுப்பழக்கத்தில் காய்கறிகள், கீரை வகைகள் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சாம்பார் நமது தனித்தன்மையை குறிக்கும் ஒரு அடையாளமாகும். அதிலும் கத்தரிக்காய் சாம்பார் என்றால் சொல்லவா வேண்டும்?

கத்திரிக்காயில் சாம்பாரும் பிரமாதமாக இருக்கும். குழம்பும் சிறப்பாக இருக்கும். இப்படி கத்திரைக்காய் பன்முகத்தன்மை கொண்ட சிறந்த காய்கறிகளில் ஒன்றாகும். முழு கத்திரிக்காய் போட்டு குழம்பு வச்சி சாப்பிட்டா..ஆஹா வாயில் எச்சில் ஊறுதுங்க. கத்திரிக்காய் கருவாட்டுக்குழம்பு ஊர்முழுதும் பேர்சொல்லும் வாசம். அதிலும் நம்ம நாட்டு கத்திரிக்காய்தாங்க சிறப்பு.

இப்படியான கத்திரிக்காய் நமக்கு ஆரோக்ய நன்மைகள் என்னென்ன என்பதைப்பார்ப்போமா..? .

பயன்கள் :

மலச்சிக்கலுக்கு கத்திரிக்காய்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால்தான் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அதேபோல தற்போது உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது. அதற்கு கத்திரிக்காயில் கூட்டு, பொரியல் போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். கத்திரிக்காய் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் நீங்குகிறது. அதனால் மலச்சிக்கலும் நீங்குகிறது.

பம்பிங் ஸ்டேஷன் -இதயம்

நமது உடல் முழுமைக்கும் இரத்தத்தை பம்பிங் செய்தி சீராக இரத்தத்தை அனுப்பும் வேலையை செய்வது நமது இதயம்தான். அப்படியான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு, இதய பாதிப்பு அல்லது இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற ஆபத்தான பாதிப்புகள் உருவாகின்றன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சாப்பிட்டு வருவதன் மூலம் இதயத் தசைகள் வலுப்பெறுகின்றன. அதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

சிறுநீரக கற்கள்

உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் உப்புத் தன்மை அதிகமாகும். போதுமான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் பலருக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. அதற்கு கத்திரிக்காயை ஏதோ ஒரு வடிவில் உணவாக தயார்செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் பாதுகாக்கப்படும்.

காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.எப்படிப்பட்ட மூல நோயையும் கத்திரிக்காய் குணமாக்கும். வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை உணவில் சேர்த்து வந்தால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சுவாசக் கோளாறுகள்

காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் இருக்கின்றன. சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது இந்த நுண்கிருமிகள் மற்றும் மாசுகளை சேர்த்ததுதான் சுவாசிக்கின்றோம். அவ்வாறு நாம் சுவாசிக்கும்போது சிலவை நமது நாசியில் வடிக்கப்பபடுகிறது. அதையும் மீறி உள்ளே நுழைந்து நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. அதற்கு கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நுரையீரல் சுத்தமடையும். இதனால், சுவாசப் பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

உடல் எடை குறைக்க

கண்டதையும் தின்று சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பதால் உடல் பருமன் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. அவ்வாறு அதிகரித்த உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும்.

இரும்புச்சத்து நிர்வாகம்

உடல் பலம் பெற ரத்ததில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்யத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் இரும்புச் சத்தை இரத்தத்தில் போதுமான அளவில் மேலாண்மை செய்ய கத்திரிக்காய் பயன்படுகிறது. அதனால் அடிக்கடி கத்திரிக்காயை சாப்பிடுவதன் மூலமாக உடலில் அளவுக்கதிகமாக இரும்புச்சத்து இருப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.

புகைப் பழக்கம்

புகைப் பிடிப்பது தனக்கு மட்டுமில்லாமல் மற்றவருக்கும் தீங்கு ஏற்படுத்தும் ஒரு மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல், வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுகின்றன. கத்திரிக்காயிலும் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத சிறிய அளவு நிகோடின் உள்ளது. கத்திரிக்காயை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் இந்த நிகோடின், புகைப் பழக்கம் உள்ளவர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவுகிறது.

கல்லீரல்

இஷ்டத்துக்கு மாமிச உணவு சாப்பிடுபவர்களுக்கும் அதிக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கும் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் கல்லீரலின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். இது உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். கல்லீரல் செயல்பாடு குறைந்தால் மாமிச உணவு மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களை நிறுத்துவது அவசியமாகும். அவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளை போக்கலாம். இருப்பினும் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவதும் அவசியமாகும்.

ஊட்டச்சத்து நிறைந்தது

உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டது, கத்திரிக்காய். இதில் வைட்டமின் சி, ஈ போன்றவையுடன் இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற தாதுச்சத்துகளளும் இருக்கின்றன. இவைகள் உடலின் எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் பயனாவதுடன் இதயம், இரத்த நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்த நலனுக்கு உதவுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!