/* */

Birthday wishes quotes in tamil- பிறப்பது ஒருமுறை..! பிறப்பினை கொண்டாடுவோம் வாங்க..!

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூட பலரது வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்தலாம். அதனால் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

HIGHLIGHTS

Birthday wishes quotes in tamil- பிறப்பது ஒருமுறை..! பிறப்பினை கொண்டாடுவோம் வாங்க..!
X

Birthday wishes quotes in tamil-பிறந்தநாள் வாழ்த்துகள் (கோப்பு படம்)

Birthday wishes quotes in tamil

பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் கொண்டாட்டம் மிகவும் சிறப்பானது. மனதுக்கு நெருங்கியவர்கள் அவர்களுக்காக விசேஷமான ஏற்பாடுகளைச் செய்யும்போது, மனம் ஏனோ அவர்களை நேசிக்கத் தொடங்குகிறது. இது உலகில் மிக சிறப்பு வாய்ந்த உணர்வுகளில் ஒன்றாகும்.

இந்த அற்புத உணர்வு ஒருவரை முதிர்ச்சியடையச் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் வரும்போது முந்தைய ஆண்டிலும் ஒரு வயது கூடியிருக்கும். வயதுகள் கூடினாலும் முதுமையை நோக்கி பயணித்தாலும் ​​ஒவ்வொரு நாளும் நம் பிறந்தநாளுக்காக காத்திருக்கிறோம். ஒரு சிறிய வாழ்த்து மனதை பூரிக்கச் செய்கிறது. இளமையாய் உணர்ச்சி செய்கிறது.


வாழ்த்துகளைப் பெறும் அந்த உள்ளம் மகிழ்ந்து நன்றிப்பெருவுணர் அடையும். பிறந்தநாள் வாழ்த்துப்பெற்றோர் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறார்கள். ஆதலினால் பிறந்தநாள் கொண்டாடுவோம். அவர்களை வாழ்த்துவோம் வாங்க.

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக, நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி ஓடட்டும். மகிழ்ச்சி என்ற ஒளிமட்டுமே வீசி தித்திக்கட்டும். . எதிர்காலம் சிறப்பாக அமைய உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்.

பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று. வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று, என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!


Birthday wishes quotes in tamil

காலை உதிக்கும் சூரியக் கதிர்கள் மஞ்சள் மலர்கள் சூடட்டும்..மரங்களின் மலர்கள் காற்று வீசி உன்னை அர்ச்சனை செய்யட்டும். மேகங்கள் மழையை மழைதுளியாய் உன்னை வாழ்த்தட்டும். எனக்காக பிறந்தவளே..என் இதயத்தை திருடியவளே உனக்கு என் பொன்னான முத்தங்களுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறேன்.

வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து வளம் பல பெற்று வாழ்க நீ பல்லாண்டு. வையத்தில் நின் புகழ் ஓங்கட்டும் . இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

உனக்கென்று வாழ்த்துச் சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா? உன்னை வாழ்த்த புதிதாய் யோசிக்கிறேன். கவிதைகள் எனக்கு கிட்டவில்லை. ஏன் தெரியுமா? புதிதாய் இன்று பிறந்த நீ எனக்குக்கிடைத்த புதுக்கவிதை..1 புதுக்கவிதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் -. .

பிறந்தநாள் மட்டுமல்ல நீ என்னுள் பிறந்த நாளையும் கொண்டாடுவேன் நான். வாழ்த்துகிறேன் என் கணவா..! என் கனவை கொள்ளையடித்த புருஷா..! பிறந்தநாள் வாழ்த்துகளடா..!


Birthday wishes quotes in tamil

கடமை தவறாத இலக்கணம் கொண்டவன். எனக்கு என்ன தேவை? குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதறிந்து காலத்தே செய்யும் என் கணவன் கடமை தவறாதவான். நீ எனக்கு கிடைத்த வரமடா..! உனக்கு உன் மனைவியின் அன்பான வாழ்த்துகள்..!

குறிஞ்சி பூப்பது 12 வருடத்திற்கு ஒரு முறையாம். யாரடா சொன்னது? ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறதே என் இதயத்து குறிஞ்சி..! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!

ஒளி தன் கைகள் விரித்து என் வாழ்க்கை பாதைக்கு ஒளி (வழி) காட்டிய வசந்த நாள் இன்று. ஆமாம், என்னவள் பிறந்தநாள். அவளுக்கு என் ஆசை முத்தங்களுடன் பிறந்தநாள் வாழ்த்துகள்..!

வாழ்க்கையில் நாம் பிறந்ததை அடையாளம் காட்டும் உன்னத நாளே "பிறந்த நாள்". எதையும் இங்கு நாம் கொண்டுவரவில்லை, தேடிய சொந்தங்களைத் தவிர. அதில் என் மனைவி எனக்குக் கிடைத்த அற்புதப்படைப்பு. சிறப்புமிக்கவள். அவள் பிறந்ததால் நான் இன்று வரம் பெற்றேன். வாழ்த்துகிறேனடி..என் நாயகியே.!


Birthday wishes quotes in tamil

நிலவைக் கொண்டு வந்து உன்னிடம் நான் தந்தாலும் உன்னைக்காட்டிலும் அதன் பெறுமதி குறைவே..! என்னை கட்டியணைத்து அன்பாய் பேசும் வார்த்தைகள் என்னை பல்லாண்டு வாழச்செய்யும். அங்கு உன்னோடு நானும் வாழ்வேன். என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

உங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் மணவறைக்குள் அமர்ந்தேன். இன்று உங்களைப் பற்றி முழுவதும் புரிய வைத்து என் இல்லறத்தை அழகாக்கி விட்டீர்கள். என்னவனே, என் மன்னவனே, என் ஆசை நாயகனே

உங்களுக்கு எனது இனிய பிறந்த தின வாழ்த்துகள்..!

ஒரு கூட்டுப்பறவையாக பிறந்த நாம் காலங்கள் கடந்து திசைக்கு ஒருவராக வாழுகிறோம். ஒரு வயிற்றுப்பந்தம் எனும் சொந்தம் மட்டும் விட்டுப்போகுமா..? என் சகோதரனே, உனக்கு என் அன்பான பிறந்த தின வாழ்த்துகள்.


Birthday wishes quotes in tamil

கண்களுக்கு மட்டுமே, மனதின் மொழி புரியும். அதனால் தான் என்னவோ என்னை உன்னிடம் சேர்த்தது. அந்தக்கண்ணுக்கு சொந்தக்காரிக்கு இன்று பிறந்தநாள். என்னவளுக்கு பிறந்த தின நல்வாழ்த்துகள்..!

அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகிப் போயின. நீ பிறந்தபோது என் தேவதை பிறந்தாள் என்று கொண்டாடினேன். மகளே..! நீ எனக்கு இன்னொரு தாய்..! எங்கள் வீட்டு தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!

யாரென்று அறியாது உரிமையாய் பழகினோம். இன்னார் என்று தெரியாது உண்மையாய், இருந்தோம். என்றுமே நம்முடைய நல்லுறவு நீடிக்க வேண்டி உன் பிறந்த தினத்தில் இறைவனிடம் வேண்டுகிறேன், நண்பியே..!


Birthday wishes quotes in tamil

நம் இருவரின் கண்ணீரைப் பார்க்கும், இறைவனின் இதயம் கூட உருகிப்போகும், நம் பிரிவை எண்ணி. நம் எதிர்கால நலனுக்காக தூரதேசம் போனாலும், என் இதயத்தில் வாழும் என் இனியவளுக்கு இந்நாளில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

உன் பிறந்தநாளின் ஆகச் சிறந்த பரிசுப்பொருள் உன் காதல் தீபம் ஏற்றிய என் இதயம் தானடி..! என்னவளே..என் வாழ்க்கையின் பொன்னவளே..! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

புத்தம் புது நாள், புத்தம் புது வருடம், புத்தம் புது வாழ்க்கை என எல்லாம் மீறிய சிறப்பு என்னவளின் பிறந்தநாள். சோகங்கள் கூட மாயமாகின..! இனி உனக்கு நன்னாளடா.. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குவதற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


Birthday wishes quotes in tamil

உன்னை சந்தித்த பிறகு என் ஒவ்வொரு பிறந்தநாளும் உன்னையே பரிசாக நினைக்கிறது. உன் வருகையை எனக்கான மிகப்பெரிய பரிசுதான்..ஆனாலும் நீ மலர் கொத்து தருகிறாய். பரவாயில்லை என்னை மலராக நீ எண்ணுவதால் கூட இருக்கலாம்.

உன் பிறந்தநாளில் வாழ்த்து அட்டைகளில் வாழ்த்துச் சொல்லி உன் வீட்டு அலமாரிக்குள் ஒளிந்து கொள்ள ஆசையில்லை, எனக்கு. உன் இதயத்தில் வாழ ஆசைப்படுகிறேன்..! நேரில் வந்து வாழ்த்துகிறேனடி என் இதயத்து ரோஜாவே..!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அன்பே எனக்கு வரம் ஒன்று கிடைத்தால், உன் பிறந்த நாளையே வருடத்தின் முதல் நாளாக அறிவிக்க ஆசை என்பேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்


Birthday wishes quotes in tamil

பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது. அதை காலத்தின் நகர்வால் மீண்டும் அடையும் போது வாழ்த்துகள் அழகானது. என்னவளே என் உயிரானவளே..உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

என்னில் கலந்து, என் இதயத்து ஏடுகளில் எழுதப்பட்ட கவிதையே, உனக்கு இன்னொரு கவிதை எழுத வேண்டுமா..? வேண்டாம்..என் இதயத்து கவிதை அழிவதை நான் விரும்பவில்லை..! உன்னை என் இதயத்து கவிதை வாழ்த்தும். என்னவளுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..!

Updated On: 27 Aug 2023 12:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  3. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  4. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...
  5. வீடியோ
    Vani Bhojan -யை Rambha என கிண்டல் !! #anjaamai #anjaamaimovie...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை:...
  7. இந்தியா
    என்டிஏ அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்! பல...
  8. லைஃப்ஸ்டைல்
    வெள்ளை முள்ளங்கியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. வீடியோ
    NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet #vanibhojan...
  10. சினிமா
    நீங்களும் நடிகர் மாதவனைப் போல ஜொலிக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!