உங்களின் அன்பானவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுங்கள்..!

உங்களின் அன்பானவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுங்கள்..!
X

birthday wishes quotes in tamil-பிறந்தநாள் வாழ்த்துகள். (கோப்பு படம்)

Happy Birthday Wishes Quotes in Tamil-மனதுக்குப் பிடித்தவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதும் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதும் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் ஆகும்.

Happy Birthday Wishes Quotes in Tamil

பிறப்பு என்பது உலகில் ஒருமுறை மட்டுமே. அந்த பிறப்பில் நாம் மனிதராக அவதரித்திருப்பது நமக்கு கிடைத்த வரம். அந்த வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்து பார்ப்பதே பிறப்பின் அழகு. அப்படி நாம் பிறந்த நாளை கொண்டாடுவதும் இந்த வாழ்க்கையை கொண்டாடுவதற்கு சமமே. பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இதோ உங்களுக்கான மேற்கோள்கள்.

  • உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமைப் படுகின்றன. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • உண்மையான அன்புக்கு முகங்கள் இங்கு தேவை இல்லை; முகவரியும் தேவை இல்லை; நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • உண்மையான அன்புக்கு வார்த்தைகளால் சொல்ல முடியாது, உனக்கான பிறந்தாநாள் வாழ்த்துகளை உணர்ச்சிகளினாலும் எண்ணங்களால் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • பிறப்பின் நகர்வு அற்புதமானது. பிறப்பின் நாளது ஒவ்வொரு முறை வரும் போதும் மிகவும் அழகாகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • என் உடலும் உயிரும் ஒரு உருவமாக்கி, என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும் என்னவளே..உனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
  • நல்ல சுகத்தோடும், நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • பேராசை முடிகின்ற இடத்தில்தான் மகிழ்ச்சி தொடங்குகிறது..என்பதை நானறிவேன். உன் புன்னகை தொடங்கும் இடத்தில்தான் என் வாழ்க்கையே தொடங்குகிறது..! அன்பு இருக்கும் இடத்தில் மட்டும்தான் அனைத்தும் கிடைக்கிறது..! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • கொடுப்பவர் ஏழை ஆகாமல், பெறுபவர் பணக்காரன் ஆகாமல் இருக்கும் ஒரே ஒரு செயல் புன்னகை மட்டுமே...! எனவே எப்போதும் புன்னகையுடன் இரு, என்னவனே..! உனக்கு என் முத்தங்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • இந்த வாழ்க்கை அழகாய் மாறுகிறது.. நாம் யாரிடமாவது அன்பைக் காட்டும் போதும், நம் மீது யாராவது அன்பு காட்டும் போதும்..நான் அன்பு காட்டும் என்னவளே உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • என்றும் ஆரோக்கியத்தோடும் நிறைவான தன்னம்பிக்கையோடும் உன் வாழ்க்கையை வெல்ல இந்த பிறந்தநாளில் வாழ்த்தும் உன் நண்பன்..! உற்ற தோழனாக தோள் கொடுப்பேனடா..!

  • இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற பிரார்த்தனை செய்கிறேன்..எனக்கு எதுவும் இல்லாவிட்டாலும் பிறருக்கு எல்லாம் கிடைக்க இறைவா அருள்புரிவாய்..! பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • பூவின் இதழ் போல் உன் புன்னகை மலர.. இந்த என் மன பூந்தோட்டத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்; உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்; உன் கனவுகள் விண்ணை தொடட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • பேரின்பம் எதுவும் வேண்டாம் எனக்கு.. உன்னோடு சின்னச் சின்ன சந்தோசங்கள் போதும், வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு. என்னவளே உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • ரசிப்பதற்கு எதோ ஒன்று கிடைத்து கொண்டிருக்கும் வரை இந்த வாழ்க்கை அழகானது தான். இந்த உலகில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ..! உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக..! நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையோடு..! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!

  • வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி ஓடட்டும்..! மகிழ்ச்சி என்ற ஒன்றின் ஒளிவீசி எங்கும் இனிமை தித்திக்கட்டும்..! . எதிர்காலம் சிறப்பாக அமைய உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்..!
  • பூவினம் சேராத.. பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று..! வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று..அவளுக்கு..என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • பிறப்பு என்பது அழகான விபத்து..! இறப்பு என்பது ஆபத்தான விபத்து..! இரண்டுக்குமிடையில் சில நாட்கள் மட்டுமே நமக்கான வாழ்க்கை..! அதை வாழ்ந்து பார்ப்பதே அறிவுடைமை..! இன்று பிறந்தநாள் காணும் உன்னை வாழ்த்துகிறேன் மனமுவந்து..!
  • வாழ்க்கை என்ற கடலில் உன்னோடு மகிழ்ச்சி என்ற படகில் நான் வாழ்நாளெல்லாம் உன்னோடு பவனி வரவேண்டும்..! நம் வாழ்க்கை கண்டு இவ்வையகம் வாழ்த்திட வேண்டும்..! உன் புகழ் பாடும் நான் உனக்கு வழங்குகிறேன் வாழ்த்துகளை..! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..!
  • உனக்கு வாழ்த்துச் சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா? உன்னை வாழ்த்த புதிதாய் யோசித்து, யோசித்து நானே புதிதாய் பிறந்தேன்..புதிய கவிதைகளுடன்..! . ஆனால் ஒரு கவிதையும் எனக்கு ரசிப்பதற்கு இல்லை.. இன்று பிறந்தநாள் காணும் நீயே ஒரு கவிதைதான் எனக்கு..! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  • இன்று நீ பிறந்தநாள் மட்டுமல்ல.. நீ என்னுள் மலர்ந்த நாளும் இதுவே..அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் நான்..உனக்காக இரு நாளையும் கொண்டாடுவேன் நான்..! நம் இருவருக்குமான ஒருநாள் அந்த திருநாள்..!

  • குறிஞ்சி பூப்பது 12 வருடத்திற்கு ஒரு முறையாம்.. யார் சொன்னது? நான் நம்பமாட்டேன்..! ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறது... அது உன் பிறந்த நாள் தானடி..! ஆண்டுதோறும் மலரும் குறிஞ்சிப்பூ நீ எனக்கு..! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!
  • வானத்து நிலவுக்கு அருகில் நீ நின்றால் நிலவைக்காட்டிலும் நீ அழகு..! வானவில்லை உன் புருவம் அருகில் வைத்தால் உன் புருவமே அழகு..! உன் பிறந்த நாளன்று உன்னை வாழ்த்துகிறேன் தூர நின்று..! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • உன்னைப்பற்றி ஒன்றும் அறியாமல்தான் மணவறைக்குள் அமர்ந்தேன்..! இன்று உன்னை முழுதாய் புரிய வைத்து நம் இல்லறத்தை அழகாக்கிய நாயகன் நீயே..! என் ஆசை நாயகனே, உனக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்..!
  • அன்பைப் பரிமாறிக்கொள்ளும் கண்களுக்கு என்றுமே மனதின் மொழி புரியும். அதனால் தான் என்னவோ என்னை உன்னிடம் சேர்த்து வைத்தது..! என்னவளே.. உனக்கான எனது இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
சீம்பால்..இத மட்டும் சாப்டாம இருக்காதீங்க!.. இதுல எவ்ளோ பெனிஃபிட்ஸ் இருக்கு தெரியுமா?