Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது மேல்..!
Betrayal quotes in tamil-துரோகத்தின் வலி மேற்கோள்கள் (கோப்பு படம்)
Betrayal quotes in tamil
ஏமாற்றுதல் என்பது போலியான முகத்தை உடையவரின் சராசரி செயல், அவ்வளவே. ஏமாற்றம் அடைந்தவருக்கு மட்டுமே அது பெரிய பாதிப்பு. ஏமாற்றியவர் அதுகுறித்த எந்த உறுத்தலும் இல்லாமல் சராசரி வாழ்க்கையோடு இணைந்துவிடுவார்.
ஏமாற்றம் என்பதற்கு சில வார்த்தைகளை நாம் பொருள் கொள்ளமுடியும். போலி, அவநம்பிக்கை, துரோகம், பகை, சண்டை, வாக்குவாதம்,நம்பிக்கைத் துரோகம், ஏமாற்றுதல், பகட்டு வார்த்தை, நரித் தந்திரம், முதுகில் குத்துதல் இப்படி பல வார்த்தைகளைக் கூறலாம்.
உங்கள் ஏமாற்றத்திற்கான காரணங்கள் இந்த வார்த்தைகள் ஒன்றுக்குள் அடங்கிவிடும். அதனால் சுய சிந்தனையுடன் நாம் தீர்க்கமாக இருப்பதே சிலரை அடையாளம் காட்டும்.
Betrayal quotes in tamil
ஏமாற்றத்தின் வலி ஏற்படுத்தும் வேதனைகளின் மேற்கோள்கள் இங்கு தரப்பட்டுள்ளன. படித்து மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் நேர்மறை சிந்தனையை எதிர்மறையாக எடுத்துக்கொண்டவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும்.
நாம் நேசிக்கும் எல்லோரும் நம்மை ஒரே தட்டில் வைத்திருக்கமாட்டார்கள். உங்களுக்கான ஒரு தேவை ஏற்படும்போது அதை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம்.
தேள் கொட்டிவிட்டது என்பதால் தேள் கெட்டதாகிவிடுமா? அதன் குணம் கொட்டுவது. அதையறிந்து விலகி இருப்பதே நமக்கு இருக்கும் வாய்ப்பு.
Betrayal quotes in tamil
துரோகம் செய்யும் ஒருவர் இழப்பது நட்பை மட்டுமல்ல நீங்கள் வைத்திருந்த அவர் மீதான நம்பிக்கையும்தான்.
நீ மேலே மேலே உயரும்போது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள். ஆனால் நீ கிழே போகும்போது, உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்.
அவள் சென்று விடுவாள் என தெரிந்திருந்தால்,என் வாழ்நாள் முழுவதும் இருட்டிலேயே நீந்தி கழித்திருந்துப்பேன்
Betrayal quotes in tamil
ஒருவர் உங்களிடம் ஆறுதல் தேடிவரும் போது, அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, பிறகு அவரை பற்றி மற்றவரிடம் குறை கூறினால், அதை விட நம்பிக்கை துரோகம் என்ன இருக்கு....
காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்
ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது மாயாதைக் குரியது
Betrayal quotes in tamil
காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்
ஒருவரை பிடிக்கவில்லை என்றால் உண்மையாக வெறுத்து விடு. ஆனால் பொய்யாக நேசிக்காதே.
பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது.
வலிகளைத் தரும் உறவுகள் வேண்டாம் ஆறுதல் தரும் தனிமையே போதும்.
Betrayal quotes in tamil
பொய்யான அன்பை தேடிச் செல்லும் சிலர், உண்மையான அன்பை மதிப்பதில்லை. உண்மை புரியும் போது, அன்பானவர்கள் அருகில் இருப்பதில்லை.
எவ்வளவு தான் நன்றாக பழகினாலும், ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது. இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து, வைத்திருந்தது அவர்களின் திறமையா... அல்லது, அறியாமல் இருந்தது நமது அறியாமையா என்று.
மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை. ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதீர்கள் மறுபடியும் அவர்களை
Betrayal quotes in tamil
யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாய் இருங்கள். இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்.
கை தவறினால் கண்ணாடி உடையும் என யோசிப்பவர்கள்,வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை
துரோகிகள் யார் தெரியுமா? துரோகத்தை செய்து விட்டு அந்த குற்ற உணர்வு சற்றும் இல்லாமல் திரிபவர்கள் தான் மிகச் சிறந்த துரோகிகள்.
Betrayal quotes in tamil
நேர்மையாக இருப்பவர்களைத் தான் வாழ்க்கை அதிகம் ஏமாற்றி விடுகின்றது.
நீ யாருக்காக அழுது அழுது இறந்து கொண்டிருக்கிறாயோ அவர்கள் வேறு யாருக்காகவோ சிரித்து சிரித்து வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
விட்டு விடவும் முடியாமல், விலகி நிற்கவும் முடியாமல், விரும்பி ஏற்கின்றேன் சில வலிகளை.
அவள் என்னை பார்த்து சிரித்தாள், அவள் கன்னத்தில் குழி விழுந்தது, நான் அவளை பார்த்து சிரித்தேன் என் வாழ்க்கையே குழியில் விழுந்துவிட்டது.
Betrayal quotes in tamil
பலரின் மாற்றங்களுக்கு காரணம் சிலர் தரும் ஏமாற்றங்கள் தான்
துரோகங்கள் வலியை விட ஆச்சரியத்தைத் தான் தருகின்றன. எப்படி இவ்வளவு சிறப்பாக நடித்து ஏமாற்றினார்கள் என்று.
ஒரு பெண்ணை உன்னிடம் அதிகமாக பேச அனுமதிக்காதே பின் அவள் உன்னை அதிகமாக பேச வைத்துவிடுவாள் "தனியாக "
Betrayal quotes in tamil
வழிய வந்து வலியை தந்து விலகி செல்கிறார்கள் வேஷம் போடும் மனிதர்கள்
அழகான தருணங்கள், அதை நீதான் கொடுத்தாய். அழியாத சோக வரலாறு அதையும் நீ தான் கொடுத்தாய்.
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது.
துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது.
Betrayal quotes in tamil
நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம், கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது
கிழிந்த முகமூடிகளுக்கு பின்னால் இருப்பதெல்லாம் நிஜமல்ல. இன்னொரு முகமூடியாகவும் இருக்கலாம்.
தன்னோடத் தேவைக்காக மட்டுமே உன்னோடு உறவு வைத்துக் கொள்ளும் உலகம். தேவைகள் முடிந்ததும் கண்டிப்பாக தூக்கி எறியப்படுவாய், உண்டுமுடித்த மாங்கொட்டையாக.
Betrayal quotes in tamil
நாம் பிறருக்கு செய்வது மற்றொருவர் மூலமாக நமக்கே வந்து சேரும்.அது உதவியாக இருந்தாலும் சரி துரோகமாக இருந்தாலும் சரி.
என்னை ஏமாற்றியது உன் தவறல்ல என்னை ஏமாற்றும் அளவிற்கு நான் உன் மீது அன்பாய் உண்மையாய் இருந்தது தான் என் தவறு.
உனக்கு நான் உயிராக இருப்பேன், எனக்கு நீ உண்மையாக இருக்கும் வரை
துரோகங்கள் நமக்கு கற்றுக் கொடுப்பவை ஒன்று தான், சற்றே சுயநலமாய் இருந்திருக்கலாம் என்று.
Betrayal quotes in tamil
தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்
காதலிப்பதற்கு முன்பு வரை ரசிக்கப்படும் பொய்கள் காதலிக்க தொடங்கிய உடன் காதலையே வெறுக்க வைத்து விடுகிறது
நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்.
Betrayal quotes in tamil
வழிகளைத் தேடிதான் செல்கிறோம். போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டுமே.
பிடிக்கவில்லையெனில் நண்பனுக்கு எதிரியாய் கூட இருந்து விடும, ஆனால் துரோகியாய் நொடியேனும் மாறி விடாதே.
கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.
விரும்பி காதலித்தேன் அவளை நான் விரும்பாமலே கொடுத்தாள் வலிகளை இருந்தும் ஏற்றேன் அவள் கொடுத்ததற்காக
Betrayal quotes in tamil
உனக்காக சிரிக்கும் உதடுகளை விட உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசி. அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும்.
எனக்கு எப்போதும் மழையில் நடப்பது பிடிக்கும், அப்பொழுதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது.-சார்லி சாப்ளின்
மகிழ்ச்சியாக இருக்கும்போது, இசையை ரசிக்கிறீர்கள். ஆனால் சோகமாக இருக்கும்போதுதான்,வரிகளை புரிந்துகொள்கிறீர்கள். -ஃபிராங்க் ஓசன்
சோகமே இல்லையென்றால் 'மகிழ்ச்சி' என்ற சொல் அதன் அர்த்தத்தை இழந்துவிடும்.-காரல் ஜங்
Betrayal quotes in tamil
சோகம் என்னவென்றால், துரோகம் எப்போதும் உங்கள் எதிரிகளிடமிருந்து ஒருபோதும் வருவதில்லை என்பதே. -அரியானா கிராண்டி
என்னைப் பொறுத்தவரை, மரணத்தை விட மோசமான விஷயம் துரோகம். மால்கம் எக்ஸ்
எனக்கு துரோகம் செய்த நண்பர்களுக்கு துரோகம் செய்ய என் மனம் ஒப்பவில்லை. ஏனெனில் துரோகத்தின் வலி நான் அறிந்துள்ளதால் என்னை முழுமையாக பாதித்துள்ளது.
Betrayal quotes in tamil
எதிரியைக்கூட சில சமயங்களில் நம்பலாம். ஆனால், கூட இருந்து குழிபறித்த நண்பர் முகத்தில் இருக்கும் துரோகிகளை நம்பவே கூடாது.
உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை. உங்களின் உண்மை நட்பு நீடிக்காத அவர்கள்தான் வருத்தப்படவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu