Besties Quotes in Tamil-'காக்கா கடி'யுடன் தொடரும் நட்பு..!

besties quotes in tamil-சிறந்த நட்பு (கோப்பு படம்)
Besties Quotes in Tamil
ஒரு உண்மையான நண்பர் என்பது நம் வாழ்வில் மிகப் பெரிய பரிசு. அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம், ஒரு முறை கண்டுபிடித்தால் அதை ஒருபோதும் விடக்கூடாது. தேவைப்படும் நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ‘இந்த புகழ்பெற்ற மேற்கோள் உண்மையான நட்பின் அர்த்தத்தை பூர்த்திசெய்கிறது.
ஏனென்றால் நமக்கு தேவைப்படும் போது உண்மையான நண்பர்கள் எப்போதும் நம்முடன் நிற்கிறார்கள். நெருங்கிய, அன்பான, விசுவாசமான, விசுவாசமான மற்றும் சிறந்த தோழராக இருக்கும் நண்பர்கள் உண்மையான நண்பர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களே Besties என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
Besties Quotes in Tamil
அந்த Besties-க்கு கவிதை வடிப்போம் :-
உன் கை விரல் பிடிக்கையில்
புதியதாய் நம்பிக்கை பிறக்குது
உன் கூட நடக்கையில் ஒன்பதாம்
திசையும் திறக்குது என் தோழி!
ஆண் பெண் நட்பில் உன்னதம் உணர்ந்தேன் உண்னிடம்!
பாலினம் தாண்டி பாசம் கொண்டேன் உன்னிடம்!
தோள் சாய்ந்து கொள்ள நீ கிடைத்ததால்
கவலை அனைத்தும் மறக்கிறேன்.
ஒரு பெண் யாரிடமும் எல்லாவற்றையும்
எளிதாக சொல்வதில்லை அப்புடி
உன்னிடம் பகிர்ந்து கொண்டால் அவளுக்கு
நீ சிறந்த நண்பனாக இருப்பாய்!
கிழக்கே பார்த்தேன் விடியலை இருந்தாய் அன்பு தோழி!
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி!
Besties Quotes in Tamil
எத்தனை கோடி உறவு இருந்தாலும்
ஆணுக்கு தோழியின் அன்பும்
பெண்ணுக்கு தோழனின் அன்பும்
மிக சிறந்த உறவு!
ஒரு பெண்ணிற்கு
வழி துணையாக வருபவன்
கணவனாகவோ காதலனாகவோ
இருக்க வேண்டிய அவசியம் இல்லை
கண்ணியம் மாறாத நல்ல நண்பனாகவும் இருக்கலாம்.
ஆணும் பெண்ணும் பழகி கிட்டா காதல் ஆகிவிடுமா
ஆயுள் முழுவது அது தொடர்ந்தாலும் நம் நட்பு மாறுமா
Besties Quotes in Tamil
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டாலும் உன்னை
கொடுத்திட மாட்டேன் தோழி.
பிரியமான காதலும் கூட
பிரிந்த பிறகு ரணமாய் கொல்லும்
பிரிந்து போன நட்பினை கேட்டால்
பசுமையான கதைகளை சொல்லும்.
உயிரிலும் மேலாக நேசிக்க
நான் உன் காதலியும் இல்லை
உயிராக நேசிக்க உன் அன்னையும் இல்லை
உணர்வுகளால் நேசிக்க பழகியவள் நான் உன் தோழியாக!
Besties Quotes in Tamil
பொண்ணுகளை லவ் பண்றத விட
ஒரு நண்பனை இருந்து பாருங்க
எவ்ளோ பாசம் வைப்பாங்கனு தெரியும்.
ஆயிரம் சொந்தங்கள் நம்மை தேடி வரும்
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரு சொந்தம்
என் தோழி!
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதும் ஆனந்தம் தான்
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுந்தால் கூட சுகம் உண்டு.
நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று கேட்டாள் எனக்கு
பதில் சொல்ல தெரியவில்லை ஆனால் உன்னை போல
எனக்கு ஒரு தோழி எப்பவும் கிடைக்க போறதும் இல்லை.
என் தோளில் சாயும் போது என் தோழி நீயடி
உன் மடியில் சாயும் போது என் தாயும் நீயடி!
Besties Quotes in Tamil
ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் இருந்தாலும்
இரவுக்கு அழகு நிலவு தான்
அதேபோல ஆயிரம் உறவுகள்
மண்ணில் இருந்தாலும்
வாழ்க்கைக்கு அழகு நட்பு தான்.
வெற்றியும் உன்னோடு
தோல்வியும் உன்னோடு
இன்ப துளிகளும் உன்னோடு
துன்ப வலிகளும் உன்னோடு
மெய்யும் உன்னோடு
பொய்யும் உன்னோடு
என் கண்ணீரும் உன்னோடு
புன்சிரிப்பும் உன்னோடு.
கருவறை சுகம்
எனக்கு ஞாபகம் இல்லை
நான் தனிமையில்
உறங்கிக்கொண்டிருந்தால்
வகுப்பறை சுகம்
என் மனம் விட்டு நீங்கவில்லை
ஏனெனில் சுகமான நினைவில்
தந்த என் நண்பர்களினால்.
Besties Quotes in Tamil
ஒரு நல்ல தோழி மட்டும்
இருந்தால் போதும்
தோல்வியையும்
துவட்டி போட்டு விடலாம்.
நம்மை பற்றி நமக்கே
தெரியாத ரகசியங்களை
நமக்கே வெளிச்சம்
போட்டு காட்டும்
சிறந்த கருவி தான் நட்பு!
இனிமையானது தொலைதூர
நண்பர்களின் நினைவு!
புறப்படும் சூரியனின்
மெல்லிய கதிர்களைப் போல,
அது மென்மையாக,
இன்னும் சோகமாக,
இதயத்தில் விழுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu