ஒரு நல்ல கணவன் எப்படி இருப்பார்? இப்பிடியெல்லாம் இருப்பார்..! புதுப்பெண்களே..இது உங்களுக்கானது..!

ஒரு நல்ல கணவன் எப்படி இருப்பார்? இப்பிடியெல்லாம் இருப்பார்..! புதுப்பெண்களே..இது உங்களுக்கானது..!
X

இளம்பெண் -கோப்பு படம்

மகளுக்கு ஒரு நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என்று நினைப்பது எல்லா பெற்றோருக்குள்ளும் இருக்கும். நல்ல மாப்பிள்ளையை எப்படி தெரிஞ்சிக்கலாம் என்று உங்கள் மகளிடமே கேளுங்கள்.

நல்ல கணவனின் இலக்கணம் எது?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லிவைத்தவர்கள், நல்ல கணவன் கிடைப்பதெல்லாம் நீ முற்பிறவியில் செய்த பலன்களுக்கு ஏற்ப கிடைப்பார் என்று நான் சொன்னால் என்னை அடிக்க விரட்டுவார்கள். அதனால், நான் தப்பித்துக்கொள்வதற்காக நான் இப்படி சொல்கிறேன்..எப்படி..?

பெண்களே..சாரி சாரி..சகோதரிகளே.. உங்களை உண்மையாக நேசிக்கும் கணவனை நீங்களும் நேசிக்காத தவறாதீர்கள்.

அட நீங்கவேற..வீட்டுக்கு வந்த செல்போனும் கையுமா இருக்கற கணவனை எங்கிருந்து நேசிக்கிறது..என்று நீங்கள் புலம்புவது கேட்கிறது.

கணவனை கைக்குள் வைத்துக்கொள்ளும் சூட்சுமம் உங்களுக்குத் தெரிவில்லை என்று அர்த்தம். செல்போனை விட உங்கள் அன்பு பெரிது என்பதை அவர்களுக்கு உணர்த்துவது உங்களின் பொறுப்பு. அதையெல்லாம் நான் சொல்லமுடியாது.

நான் சொல்லவந்தது உங்களை நேசிக்கும் கணவர் எப்படியெல்லாம் இருப்பார் என்பதைத்தான். அதனால் கல்யாணம் ஆகாத பொண்ணுங்களும் காதலிக்கும் பொண்ணுங்களும் இப்படி ஒரு (பாவப்பட்ட) பையன் கிடைச்சா மேரேஜுக்கு உடனே ஓகே சொல்லுங்க.


நல்ல கணவனுக்கான இலக்கண வரம்புகள் :

அதனால் திருமணத்திற்கு இப்படி ஒரு ஆண் கிடைச்சா அவனை நிச்சயம் மிஸ் பண்ணிடாதீங்க..

1) எப்படியான ஒரு கடும் கோபத்திலும் கூட எல்லை மீறி தகாத வார்த்தையைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்துவிட்டது என்று சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமான சமையலைக் கூட சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) உங்களுக்குள்ளான சண்டையில் கூட உங்கள் அம்மா, அப்பாவை அத்தை,மாமா என்ற உறவை வைத்தே பேசுவார். உன் அப்பா அம்மா என்று சொல்லமாட்டார்.

5) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சி செய்வார். .

6) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்பாகவும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.(இது ஒண்ணு போதாதா சிஸ்டர்?)

7) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் அவரால் கவனம் செலுத்த முடியாது,மீண்டும் உங்கள் முகத்தில் புன்னகை வரும்வரை. .

8) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

9). உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்களைக் கூட அழகாக மொழி பெயர்ப்பார். உங்கள் அழகில் ஒரு கவிஞனாவார்.

10) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.

11) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார். இது எல்லா ஆண்களிலும் இல்லாத ஒரு சிறப்பு குணம்.

12) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகையைப் பார்த்து அதிகம் வருந்துவார். உங்களை சமாதானப்படுத்த அவரும் சேர்ந்து அழுவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

13) உங்களை மகிழ்விக்க வீட்டுக்கு வரும்போது பூனைபோல உள்ளே நுழைந்து உங்களை பயமுறுத்தி நீங்கள் ஆ..என்று கத்தியதும் சிறுகுழந்தைபோல உங்களை கட்டிக்கொள்வார்.

14) உங்கள் பிறந்தநாளை அவர் அறியாததுபோல இருந்துவிட்டு உங்களுக்குத் தெரியாமல் திடீரென பரிசளித்து உங்களை அசத்துவார்.

15) உங்களுக்கு எந்த நகை அழகு சேர்க்கும்? எந்த ஆடை? என்ன நிறம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கற்பனையில் உங்கள் உருவை நிறுத்தி துல்லியமாக தேர்வுசெய்வார்.

16) அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது உங்களுடன் வெளியில் செல்லவேண்டும் என்று விரும்புவார். குறிப்பாக உங்கள் கைகளைக் கோர்த்து நடப்பதற்கு விரும்புவார்.

வாழ்க்கைக்குத் தேவை பணம் அல்ல நல்ல மனம். உங்களைப்புரிந்துகொண்ட கணவனோடு குடிசையில் வாழ்ந்தாலும் அதுவே மாளிகை வாழ்க்கை. அதைவிடுத்து புரிந்துகொள்ளாத ஒரு கணவனோடு மாளிகையில் வாழ்ந்தாலும் அது நரக வாழ்க்கைதான்.

வாழ்க்கை என்பது ஒருமுறை. அதை அனுபவித்து வாழுங்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்