பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் நோய்களுக்கு வாழைப்பூ சிறந்த நிவாரணி..!

Vazhaipoo Benefits in Tamil
Vazhaipoo Benefits in Tamil
வாழை நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒரு மரமாகும். நமது சுப காரியங்களுக்கு வீட்டின் பந்தலில் முதன்மையான மரமாக வாழைமரம் கட்டப்படும். வாழையின் பாகங்கள் அனைத்தும் பயனுள்ளவையாகும். இலை, நார், வாழைக்காய்,வாழைப்பழம், வாழைப்பூ, வாழைப்பட்டை, வாழைத்தண்டு என எல்லா பாகங்களும் மனிதருக்கு பயனுள்ளவை.
அந்த வகையில் இந்த கட்டுரையில் நாம் வாழைப்பூவின் நன்மைகள் குறித்து பார்க்கப் போகிறோம் வாங்க.
வாழை மரத்தில் உருவாகும் இது பூ வகையை சார்ந்ததாக இருந்தாலும் சமையலில் காய்கறி போல பயன்படுத்தபடுகிறது. வாழைப்பூவைப் பயன்படுத்தி பொரியல், குழம்பு, வடை, அடை, சூப் போன்ற பல்வேறு வகையான உணவுகளைத் தயாரிக்கமுடியும்.
வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது வாழைப்பூ. வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.

வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் என்னென்ன என்று பார்ப்போமா..?
1. வாழைப்பூவை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். இதனால் இரத்த ஓட்டம் சீராகும்.
2. வாழைப்பூ இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
3. இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

4. வயிற்றுப் புண்களை குணமாக்கும் சக்தி வாழைப்பூவுக்கு உள்ளது.
5. வாழைப்பூ மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீத பேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் துர்நாற்றத்தையும் நீக்கும்.
6. பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
7. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
8. உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து அதனுடன் நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu