Baking Soda Meaning in Tamil-இட்லி சோடா,ஆப்ப சோடா, பேக்கிங் பவுடர் எல்லாம் ஒன்று தானா?

baking soda meaning in tamil-பேக்கிங் சோடா(கோப்பு படம்)
Baking Soda Meaning in Tamil
சோடியம் பை கார்பனேட்’ எனப்படும் சமையல் சோடா சமையலில் மட்டுமல்லாமல், சமையலைத் தாண்டி அழகு மற்றும் வீட்டு பயன்பாடுகளிலும் அதிகமாக பங்கெடுக்கிறது.
பேக்கிங் பவுடர்- ஊட்டச்சத்து
USDA ஆதாரங்கள்
100 கிராம் அளவு பேக்கிங் சோடாவில்
கலோரிகள் 53
மொத்த கொழுப்பு 0 கிராம் 0%
நிறைவுற்ற கொழுப்பு 0 கிராம் 0%
கொலஸ்ட்ரால் 0 mg 0%
சோடியம் 10,600 மிகி 441%
பொட்டாசியம் 20 மிகி 0%
மொத்த கார்போஹைட்ரேட் 28 கிராம் 9%
உணவு நார்ச்சத்து 0.2 கிராம் 0%
சர்க்கரை 0 கிராம்
புரதம் 0 கிராம் 0%
வைட்டமின் சி 0% கால்சியம் 587%
இரும்பு 61% வைட்டமின் டி 0%
வைட்டமின் பி6 0% கோபாலமின் 0%
மெக்னீசியம் 6%
சதவீதம் தினசரி மதிப்புகள் 2,000 கலோரி உணவை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் கலோரி தேவைகளைப் பொறுத்து உங்கள் தினசரி மதிப்புகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.
இட்லி சோடா, ஆப்ப சோடா, சோடா மாவு, சமையல் சோடா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இந்தப் பெயர்களுக்கு இடையில் குழம்பிக் கொள்ளாதவர்கள் இருக்கவே முடியாது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறானவை அல்ல. எல்லாம் ஒன்றுதான்.
Baking Soda Meaning in Tamil
பேக்கிங் பவுடர் என்பது சற்று வித்தியாசமானது. அதைத் தவிர மற்ற அனைத்து பெயர்களும் ஒரே பொருளைக் குறிப்பது தான். முதலில் கூறப்பட்ட நான்கு பெயர்களும் ஒன்றுதான் என்பதை இனி நீங்கள் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
இது சமையல் பொருட்களை மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும், உப்பச் செய்யவும் பயன்படுகிறது. இட்லி மாவை புளிக்க வைக்கவும், கேக், பிஸ்கட், ரஸ்க், பிரட் போன்ற பேக்கரி வகைகளை தயார் செய்யவும் பெருமளவில் பயன்படும் பேக்கிங் சோடாவில் ஆன்டி- ஆசிட் இருப்பதால் நம் உடலில் ஏற்படும் அமிலத்தன்மை அதிகரிப்பால் உண்டாகும் பிரச்னைகளை தடுத்து நிறுத்தி சீர் செய்வதற்கு உதவி புரிகிறது. எனவே இதை தண்ணீரில் சிறிதளவு சேர்த்து குடிக்கலாம்.
Baking Soda Meaning in Tamil
முகப்பரு நீக்கும்
இதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியா முகப்பருவின் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. வாரம் ஒரு முறை பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளிங்கு போல் மின்னச் செய்யும்.
பற்கள் பளிச்சிட
பேக்கிங் சோடாவில் இருக்கும் அல்கலைன் என்னும் பொருள் பற்களின் நிறத்தை பாதுகாக்க உதவுகிறது. சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பேஸ்ட் போல் ஆனதும் பற்களில் தேய்த்தால் உங்கள் பற்கள் முன்பு இருந்ததை விட வெண்மையுடன் பளிச்சென்று மின்னும். ஆனால் இதை உடனே செய்துவிட வேண்டும்.
Baking Soda Meaning in Tamil
பூச்சிக்கடி
பூச்சிக்கடி, தோல் அரிப்புகளுக்கு சிறிதளவு பேக்கிங் சோடாவை தண்ணீர் கலந்து தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கண்டிஷனர்
உங்கள் கூந்தலுக்கு பேக்கிங் சோடா சிறந்த கண்டிஷனராக செயல்படும். நீங்கள் ஷாம்பு போட்டு தலையை அலசுவதற்கு முன் தலையில் சிறிதளவு பேக்கிங் சோடாவை தூவி, பின்னர் ஷாம்பு போட்டு அலசினால் போதும் கூந்தல் சிக்கு விழாமல் பட்டுப்போல் மின்னும். இது வறண்ட கூந்தலுக்கு பொருந்தாது.
Baking Soda Meaning in Tamil
டியடோரண்ட்
நீங்கள் உபயோகிக்கும் டியோடரன்ட்க்கு பதிலாக சிறிது பேக்கிங் சோடாவை அக்குள் பகுதிகளில் தடவிக் கொண்டு பின்னர் குளித்து விட்டு வந்தால் போதும் எந்த துர்நாற்றமும் உங்கள் மீது வீசாது. பேக்கிங் சோடா வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.
கறைகளை போக்க
உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தப்படுத்தவும் பேக்கிங் சோடா பயன்படுகிறது. டைல்ஸ், பாத்திரங்கள் கழுவும் சிங்க், குழாய்கள், சில்வர் பாத்திரம், வெள்ளி பாத்திரம், வாஷிங் மெஷின், காஃபி மேக்கர், குளியலறை போன்ற இடங்களில் படிந்திருக்கும் விடாப்பிடியான கரைகளை நீக்க சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு நன்கு தேய்த்து விட்டால் போதும் கரைகள் முழுமையாக நீங்கி விடும்.
பேக்கிங் சோடாவை கறைகள் படிந்த துணிகள் மீதும் உபயோகிக்கலாம். பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் துணிகளை ஊற வைத்து அலசினால் துணிகளில் படிந்திருக்கும் கறைகள் எளிதில் நீங்கிவிடும். குழந்தைகள் துணிகளை இந்த முறையில் அலசலாம்.
Baking Soda Meaning in Tamil
எச்சரிக்கை:
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது அமிர்தத்துக்கு மட்டுமல்ல பேக்கிங் சோடாவிற்கும் பொருந்தும். பேக்கிங் சோடாவில் இருக்கும் அதிக அளவு சோடியம் எல்லோருக்கும் ஏற்றது அல்ல. அதனால் இதனை உபயோகிக்கும் பொழுது அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். பேக்கிங் சோடாவை மிக மிகக் குறைந்த அளவே நீங்கள் பயன்படுத்தி பலன் பெற முடியும். அதிகமானால் பக்க விளைவுகள் உண்டு என்பதை அறிவது அவசியம் ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu