ஹோட்டலில் சாப்பிட போறீங்களா..? கொஞ்சம் கவனம் வைங்க..!
ஹோட்டல் உணவு (கோப்பு படம்)
இன்று ஹோட்டல்களில் சாப்பிடுவது வேகமாக அதிகரித்து வருகிறது. பலர் ஆன்லைன் ஆர்டர் போட்டு சாப்பிட்டு வருகின்றனர். எந்த ஹோட்டல்களிலும் விற்பனை தேவைக்கு ஏற்ப தரமான உணவுகளை தயாரிக்க முடியவில்லை. அதேபோல் எல்லா ஓட்டல்களிலும் ஒரே நாளில் தயாரிக்கப்படும் எல்லா உணவுப்பொருட்களும் விற்றுத்தீர்வதில்லை. மீதமான உணவுகளை கீழே கொட்டும் அளவுக்கு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெருந்தன்மை இருப்பதில்லை.
அப்படி பெருந்தன்மை இருந்திருந்தால் ஹோட்டல்களின் சமையல் அறைகளை சுத்தமாக பராமரிப்பார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஹோட்டல்களின் சமயைல் அறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை. ஜிலு, ஜிலுவென மின்னும் ஓட்டல்களின் சமையல் அறைகள் கூட மிகப்பயங்கரமான கருப்பு அழுக்கு கறை படிந்து தான் காணப்படுகின்றன. தவிர உணவுகளின் சுத்தமும் மேம்படவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். உணவுப்பாதுகாப்புத்துறை வேடிக்கை பார்க்கின்றனரே தவிர வேலை செய்வதில்லை. அதற்கு காரணம் செய்தி படிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும்.
இப்படி நம்மைச் சுற்றி பாதுகாப்பற்ற உணவுச்சூழல் நிலவும் போது, சாப்பிடும் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். எல்லா நேரமும் இதற்கு வாய்ப்பில்லை. ஹோட்டல்களில் சாப்பிடும் போது என்ன சாப்பிடுகிறோம்? எந்த மாதிரி ஹோட்டல்களில் சாப்பிடுகிறோம் என்பதில் பெரிய அளவில் தெளிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் ஆரோக்கியம் மட்டும் பாதிக்கப்படாது. உயிரே போய் விடும். இப்படி ஹோட்டல்களில் சாப்பிட்டு உயிரிழந்தவர்கள் பலர் உள்ளனர். இப்போது கேரளாவில் ஹோட்டல்களில் நடந்த சம்பவம் இந்திய அளவில் பரபரப்பினை கிளப்பி உள்ளது.
கேரளாவில் திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டது
இதுகுறித்து, ஆய்வு நடத்திய அதிகாரிகள் ஹோட்டலில் பரிமாறப்பட்ட மயோனைஸே, இதற்கு காரணம் என கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனிடையே திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹோட்டல் சீல் வைக்கப்பட்டாலும் இழந்த உயிரை மீட்க முடியுமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க முடியுமா? இரண்டையும் கேரள அரசு கண்டிப்பாக செய்யாது. ஆனால் கண்டுகொள்ளாமை என்ற கொள்ளை இந்திய அளவில் அத்தனை மாநிலங்களிலும் அரசு நிர்வாகத்தில் இருந்து வருகிறது. பொதுமக்களாகிய நாம் தான் சற்று கவனமுடன் செயல்பட்டு தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்பி சாப்பிடக்கூட முடியாத ஒரு சிக்கலான நிலையில் தான் வாழ்கிறோம் என்பதை மறந்து, அவசரப்பட்டு எங்கும், எதையும் தின்று உயிரை இழந்து விடாதீர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu