Appa Love Quotes-ஆண்டவன் வடிவே அப்பா..! அன்பு செய்வோம் வாங்க..!

Appa Love Quotes-ஆண்டவன் வடிவே  அப்பா..! அன்பு செய்வோம் வாங்க..!
X

Appa Love Quotes-அப்பா மேற்கோள்கள் (கோப்பு படம்)

அப்பா ஒரு பலாப்பழம் போன்றவர். வெளியே முள்ளாகத் தோன்றுவார். உள்ளே இனிப்பாக இருப்பார். அதுதான் தந்தையின் உண்மை முகம்.

Appa Love Quotes

எண்ணற்ற தியாகங்களின் மொத்த உருவம் தந்தை. ஒரு ஆண் இளம் வயதில் பொறுப்பற்று சுதந்திரமான எண்ணங்களுடன் சுயநல சிந்தனையுடன் மட்டுமே இருக்கிறான். திருமணம் முடிந்த பிறகு கூட அதில் சிறிதளவு மாற்றம் மட்டுமே காண முடியும்.

Appa Love Quotes

அதுவே தந்தை என்ற ஒரு தகுதி வந்தவுடன் அவனில் இருந்த சுயநல எண்ணங்கள் மாறி குடும்பத்தின் மீது குறிப்பாக குழந்தைகளின் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொள்கிறான் தான் பட்ட இன்னல்களை தன்பிள்ளைப் படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறைக் காட்ட தந்தையைத் தவிர ஒரு உயிரால் அதிகம் நினைக்கமுடியாது.


தன்னைவிட தன் பிள்ளை அறிவாளியாய் புத்திசாலியாய் பொருளாதார ரீதியில் சிறந்து விளங்கவேண்டும் என்ற உயரிய சிந்தனை தந்தையைத் தவிர வேறு யாருக்கும் வந்துவிடாது. தாய்மீதுள்ள பாசம் தந்தையின் மீது இருக்காது. இருப்பினும் நாம் அதை வெளிக்காட்ட நமக்கும் தெரியாது; அவர்களுக்கும் தெரியாது மற்றவர்களிடம் இருந்து பெரிய பிரச்னை வரும் வரை

அன்பை அதட்டலாய் அளிக்கும் குணம் தந்தையிடம் மட்டுமே இருக்கும். சிக்கனத்தையும் சேமிப்பையும் ஒரு பிள்ளை கற்றுக்கொள்ள சரியான ஆசான் தந்தை மட்டுமே சிறுதிண்பண்டமும் தன்பிள்ளைக்கும் வேண்டுமென்ற எண்ணம் இங்கு யாரிடத்தில் உண்டு? ஆதாயம் தேடாத ஆத்மா. மனதினை கல்லாக முகத்தில் காட்டிக்கொண்டு உள்ளத்தில் அன்பும் பாசமும் அக்கறையையும் தேக்கி வைத்திருப்பார்.

தன்பிள்ளைகளின் தேவைகளை நிறவேற்ற ஓயாமல் உழைக்கும் உன்னதமான உழைப்பாளி. தன் உயிரை பொருட்படுத்தாமல் தன்பிள்ளைகளின் தரத்தினை உயர்த்தும் மிகப்பெரிய தியாகி. தன் ஆசைகளையும் கனவுகளையும் தொலைத்து பிள்ளைகளின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் கடவுள் தந்தையைத் தவிற வேறு ஒருவர் இருக்க முடியாது.

Appa Love Quotes


அந்த உயர்வான தந்தையின் மேற்கோள்களை படித்து பயன்பெறுங்கள்:

இறைவனுக்கும் அப்பாவுக்கும்

சிறு வித்தியாசம்தான்

இறைவன் நாம் காணாத கடவுள்

அப்பா நாம் தினம் காணும் கடவுள்

கண்ணில் கோபத்தையும்

இதயத்தில் பாசத்தையும்

வைத்திருக்கும் ஒரே உறவு அப்பா

தங்கியிருந்த தாயின் கருவறை

புனிதமானது அதே போல நாம்

விழும் போது தாங்கிக் கொண்ட

அப்பாவின் தோள்களும்

புனிதமானது.

Appa Love Quotes

பலரது வாழ்வில் கடைசி

வரை விளங்கிக்கொள்ள

முடியாத புத்தகம் அப்பா.

கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லை

கடவுளே கிடைத்தார் வரமாக

அப்பா


தாங்கிப் பிடிக்க

அம்மாவும் தூக்கி

நிறுத்த அப்பாவும்

இருக்கும் வரை யாரும்

வீழ்ந்தது இல்லை.

பிள்ளைகள் கேட்கும்

பொருளை வாங்கிக்

கொடுப்பதில் தான்

அப்பாவின் சந்தோசம்

நிறைந்திருக்கின்றது.

Appa Love Quotes

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை

தாய்க்கும் பிள்ளைக்குமாய்

ஆயுள் வரை தங்கிடும்

ஒரே உயிர்

குழந்தையாக இருந்த

பொழுது உன்னை இறுக

கட்டியணைத்த படி உன்

அரவணைப்பிலும்

பாதுகாப்பிலும் வாழ்ந்த

நாட்கள் மீண்டும் வராத

என்று என் இதயம்

ஏங்குகிறது அப்பா.

தன் தலைக்கு மேலே

உட்கார வைத்து நம்மை

அழகு பார்க்கும் அப்பாவை

நாம் ஒரு போதும் தலை குனிய

வைத்து விடக் கூடாது.


எத்தனை பேர் நான் இருக்கிறேன்

என்று சொன்னாலும்

அப்பாவை போல் யாராலும்

இருக்கவே முடியாது.

Appa Love Quotes

என்னை தூக்கி அணைக்க

முடியாமல் நீ தவித்த

தவிப்பை உன் கண்கள்

எனக்கு காட்டிக்

கொடுக்கிறது அப்பா.

நான் ரசித்த அழகிய

இசை என் அப்பாவின்

இதயத்துடிப்பு.

ஆராய்ந்து பார்க்கும் வரை

யாருக்கும் தெரியாது

ஒவ்வொரு தந்தையின்

கஷ்டத்தை

தன் மூச்சு உள்ள வரை

எனக்காக நேசிப்பவர்…

எனக்காக தான்

சுவாசிப்பவர் என்

அப்பா மட்டும்.

Appa Love Quotes


அழகிய உறவாய் அன்பான துணையாய்

உயிர் கொடுக்கும் உயிராய்

மழலையின் தோழனாய்

குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்

ஒரே உறவு அப்பா

அப்பா நமக்கு

என்னவெல்லாம் செய்தார்

என்பதை நாம் உணர்வதற்கு

வாழ்க்கையில் பல

வருடங்களை கடக்க

வேண்டி இருக்கின்றது.

அப்பாவை தவிர நமக்கு

நல்ல நடத்தையை

வாழ்க்கையில் வேறு

எந்த ஆசானாலும்

கற்பிக்க முடியாது.

அன்பை வார்த்தையில்

வெளிப்படுத்தாமல் தன்

உழைப்பு மூலம்

உணர்த்தும் ஒரே உறவு

அப்பா மட்டும் தான்.

தாய் நமக்காக

கஷ்டப்படுவதை நம்மால்

கண்டு பிடித்து விட முடியும்.

ஆனால் தந்தை நமக்காக

கஷ்டப்பட்டதை மற்றவர்கள்

சொல்லித் தான் பிற்காலத்தில்

தெரிய வரும்.


Appa Love Quotes

உண்மையாக உழைத்து

சொந்த காலில் நிற்கும்

பொழுது தான் புரிகிறது.

இத்தனை நாள் தன்

தோளில் சுமப்பதற்கு

எவ்வளவு வலிகளை

கடந்திருப்பார்

என்று “அப்பா”.

அம்மாவின் அன்பு கடல்

அலை போல வெளிபட்டுக்

கொண்டே இருக்கும்..

ஆனால் அப்பாவின் அன்பு

நடுக்க கடல் போன்றது

வெளியே தெரியாது

ஆனால் ஆழம் அதிகம்.

அப்பாவின் அன்பை

விட சிறந்த அன்பு இந்த

உலகில் எதுவும் கிடையாது.

கடவுளுக்கும் அப்பாவிற்கும்

சிறு வேறுபாடு தான்

கண்ணுக்கு தெரியாதவர்

கடவுள்.. கண்ணுக்கு

தெரிந்தும் பலராலும்

கடவுள் என புரிந்து

கொள்ளப்படாதவர்

“அப்பா”.


Appa Love Quotes

செதுக்கப்பட்ட ஒவ்வொரு

சிலையும் கடவுள் என்றால்

எனக்கு அப்பாவும் கடவுள்

தான். அடித்தாலும் அன்பால்

அணைக்கும் கடவுள் அப்பா.

சில நேரம் பல வலிகளை

மறக்க அப்பாவின்

வார்த்தைகள் மட்டும்

போதுமாக இருக்கின்றது.

நாம் தவறான பாதையில்

சென்றால் ஓடி வந்து

நம்மை தடுக்கும் முதலாவது

உறவு அப்பாவாக தான்

இருக்க முடியும்.

Tags

Next Story