Appa in tamil-அப்பா ஒரு பலாப்பழம்..! எப்படி?

Appa in tamil-அப்பா ஒரு பலாப்பழம்..! எப்படி?
X

Appa in tamil-அப்பா மேற்கோள்கள் (கோப்பு படம்)

பலருக்கு அப்பா தான் ரோல் மாடல் ஹீரோ. அவர் படிக்காதவராக இருந்தாலும் அவரது ஆளுமை பல வழிகளில் மகனுக்கு பாடம் சொல்லி இருக்கும்.

Appa in tamil

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என் தந்தை அன்பின் முன்னே' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அப்பா என்பவர் ஆளுமையின் அடையாளமாக விளங்குகிறார்.

உணர்வுகளை அதிகமாக வெளியே காட்டிக்கொள்ளாத ஒரு ஜீவன்தான் அப்பா. எத்தனை கஷ்டங்கள், துன்பங்கள் இருந்தபோதும் முகத்தில் அது தெரியாமல் புன்னகைத்து வைப்பார். அந்த ஒரே புன்னகையில் அவர் மனதில் இருந்த அத்தனை துக்கங்களும் சமாதியாகிப்போகும். அப்படியான தன்னம்பிக்கைக்கு அடையாளமானவர், அப்பா. அப்பா இருக்கும்போது தெரியாது, அவரது அருமை. அவரைப் பிரிந்த பின்னர்தான் அவரது இருப்பின் அவசியம் புரியும்.


Appa in tamil

அப்படிப்பட்ட அப்பாவுக்கான மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. உருகிப் படித்துப் பயன்பெறுங்கள்.

அப்பா என்பவர் ஒரு பலாப்பழம். வெளியே முள்ளாக இருப்பினும் உள்ளுக்குள் இனிப்பாக இருப்பவர்.

உலகத்தில் எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் கூட என் கண்கள் தேடுவது என்னவோ என் அப்பாவை மட்டுமே.

கடவுளுக்கும் அப்பாவுக்கும் சிறிய அளவு வேறுபாடுதான். கடவுள் – நாம் காணாத தெய்வம். அப்பா – நாம் தினம் காணும் தெய்வம்

எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும் அப்பாவைப் போல யாராலும் இருந்துவிட முடியாது.


Appa in tamil

இருக்கும் போது கற்று தந்ததைவிட, இறந்த பிறகு அதிகமாய் கற்றுத்தந்த ஜீவன், அப்பா மட்டுமே. அவரும் ஆசான்தான்.

ஊர் முழுக்க பல நூறு சாமிகள் இருந்தாலும், அப்பாவுக்கு இணையாக ஒரு சாமியும் கிடையாது.

அம்மா என்னை வயிற்றில் சுமந்தாலும் ஆயுள் உள்ளவரை என்னை நெஞ்சில் சுமப்பவர் தான் அப்பா

எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன் மகளாகும் வரம் வேண்டும் எனக்கு


Appa in tamil

பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஒரே ஆண் தன் தகப்பன் தான்.

அப்பா என்றழைக்கும் ஒற்றை அன்பு வார்த்தைக்காக தன் மகள் கேட்டதையெல்லாம் செய்பவர் அப்பா

‘நிமிர்ந்த நெஞ்சும், நெருப்பு போன்ற பார்வையும் பாரதிக்குத் தான் உண்டு’ என்று யார் சொன்னார்? நம் அப்பாவுக்கும் உண்டு. ஒரு கண்ணில் கோபம் வந்தாலும், மறு கண்ணில் ஈரம் நின்றாலும், ஓர் புன்னகையால் நம்மை அள்ளி அணைப்பவர் அப்பா.

அம்மா கரு சுமக்கத் துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்கத் தொடங்கியவர் அப்பா. ஆச்சர்யத்தின் இருப்பிடம்.


Appa in tamil

அப்பாவின் தோளில் ஏறி சாமியை பார்க்கும் போது தெரியவில்லை, சாமியின் தோள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று.

அப்பாவின் கண்டிப்பில் கோபம் இருக்கிறதோ இல்லையோ, அளவில்லாத பாசம் கண்டிப்பாக இருக்கும்.

சில நேரமங்களில் பல வலிகளை மறக்க அப்பாவின் வார்த்தைகள் மட்டுமே போதுமானதாக இருக்கின்றது.

பத்து மாதம் சுமந்த தெய்வம் அம்மா. வாழ்க்கை முழுதும் சுமக்கும் தெய்வம் அப்பா.


Appa in tamil

தாய்க்குப் பின் தாரம் என்பார். ஆனால் தந்தைக்குப் பின் தந்தை மட்டுமே. யாராலும் அந்த இடத்தை இட்டு நிரப்ப முடியாது.

பத்து மதம் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஓரே உயிர் அப்பா. மனதிலே உயர்ந்து நிற்கும் அப்பா.

கண்களில் கோபத்தின் நிழல் தெரிந்தாலும், இதயத்தில் பாசத்தின் நிசம் வைக்கும் ஓரே உறவு, தந்தை மட்டுமே.

தனக்கு கிடைக்காத அனைத்து சந்தோஷங்களும், தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்து வாழும் உயிர் தான் அப்பா


Appa in tamil

அம்மாவின் கருவறை எப்படி புனிதமானதோ அதுபோல நம்மைத்தாங்கி பிடிக்கும் அப்பாவின் கைகளும் புனிதமானது.

பலரது வாழ்க்கையில் கடைசிவரை புரிந்துகொள்ள முடியாத புத்தகம்தான் அப்பா.

தாங்கிப் பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

அப்பாவின் கஷ்டம் தெரிய அவர் உறக்கத்தில் இருக்கும்போது உழைத்துக்களைத்த அந்த சுருங்கிய முகத்தையும் ஆழ்ந்த உறக்கத்தையும் பார்.


Appa in tamil

வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அப்பா, தான் வாங்கி வந்த தின்பண்டத்தை பிள்ளைகளை எழுப்பி உண்ணச் சொல்லும் அப்பாவின் அன்பை வளர்ந்தபின் மறந்தது ஏன் ?

வறுமைக் கோட்டில் வாழ்ந்தபோதும் என் பசியை போக்க அப்பா மறந்ததில்லை ஒருபோதும்.

ஆயிரம் சோகங்கள் உள்ளுக்குள் இருந்தாலும் அதனை முகத்தில் காட்டாத நல்ல நாயகனும் நீயே, அப்பா.

Tags

Next Story