Annan Thangachi Quotes In Tamil-ஒரு கொடியின் இரு மலர்கள், அண்ணன்-தங்கை..!
![Annan Thangachi Quotes In Tamil-ஒரு கொடியின் இரு மலர்கள், அண்ணன்-தங்கை..! Annan Thangachi Quotes In Tamil-ஒரு கொடியின் இரு மலர்கள், அண்ணன்-தங்கை..!](https://www.nativenews.in/h-upload/2023/10/15/1797946-bro-sis9.webp)
Annan Thangachi Quotes In Tamil-அண்ணன்-தங்கை மேற்கோள்கள் (கோப்பு படம்)
Annan Thangachi Quotes In Tamil
மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையான வாழ்க்கை காலத்தில் உறவுகளின் துணையுடனேயே வாழ முடியும்.உறவு முறையில் பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு என்பன குடும்ப உறவுகள் ஆகும். இவை மரபணு தொடர்புடையவையாக தொடரும் உறவுகள்.
என்னதான் சண்டைகள் போட்டுக்கொண்டாலும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். உடல்நலம் பாதிக்கப்படும்போது அல்லது ஏதாவது துன்பம் நேரும்போதோ உடன் பிறப்புகள் துடித்துப்போவார்கள். அதுதான் பாசம். வேறு எந்த உறவுகளிலும் கிடைக்காத ஒரு பிணைப்பு ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளிடம் இருக்கும்.
Annan Thangachi Quotes In Tamil
அந்த வகையில் இன்று நாம் அண்ணன்-தங்கை உறவு குறித்த மேற்கோள்களைப் பார்க்கலாம் வாங்க.
ஒற்றைச் செடியில்
பூத்த இரட்டை
ரோஜாக்கள் அண்ணன் -தங்கை.
ஒரு தாயின் தொப்புள்கொடி
பந்தம் அன்பின் வேர்களாக
மரண பரியந்தம்
தொடர்கிறது.
உள்ளம் கலந்து உறவு ஆனோம்.
உயிரே போகும் நிலை வந்தாலும்
இந்த அண்ணன் தங்கை உறவு
எப்போதும் மாறாதது.
Annan Thangachi Quotes In Tamil
வாழ்க்கை என்னும் பயணத்தில்
தங்கைளின் ஜன்னல் ஒர
இருக்கைகள் அண்ணன்களே,
மகிழ்ச்சியின் வெளிப்பக்கங்களை
நேரடியாக காட்டுவதற்கு.
உடன் பிறக்கவில்லை என்றாலும்
உள்ளம் கலந்து உறவு ஆனோம்.
உயிரே போகும் நிலை வந்தாலும்
இந்த அண்ணன் தங்கை உறவு
எப்போதும் இருக்கும்.
Annan Thangachi Quotes In Tamil
இரத்த பந்தம்
தங்கை அண்ணன் உறவை
மட்டுமே தீர்மானிப்பதில்லை.
இரு உயிர்களின் பாசப்
பிணைப்பையே தீர்மானிக்கிறது.
தன் தந்தையை விட
தங்கையின் மேல் நூறு மடங்கு
பாசம் வைப்பது.அண்ணன் என்ற
ஒருவனால் மட்டுமே முடியும்.
Annan Thangachi Quotes In Tamil
ஒரு ஆண் எப்போது
அழகாகிறான் தெரியுமா?
தனது தங்கைக்கு, தான் இன்னொரு
அப்பா என்று உணரும் போது.
கோபத்தில் ராட்சசி ,குட்டிப்பிசாசு
என்று சொன்னாலும் எல்லா
அண்ணன்களின் மனதிலும் எப்போதும்
தன் தங்கை தேவதையே.
Annan Thangachi Quotes In Tamil
ஒரு தங்கை அவள்
அண்ணன் மீது காட்டும்
அதிகபட்ச பாசமே,
அவனுடன் போடும் சண்டையும்,
அவனைத் திட்டித்தீர்க்கும்
வார்த்தைகளைத்தான்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்
எவ்வளவு விலை கொடுத்தாலும்
கிடைக்காத அன்பு,
தங்கை- அண்ணன்
உறவில் மட்டுமே உண்டு.
Annan Thangachi Quotes In Tamil
ஆயிரம் தந்தையின்
பாசத்தை அண்ணனிடமும்,
ஆயிரம் தாயின் பாசத்தை
தங்கையிடமும், காணலாம்.
உள்ளவனுக்கு தங்க மாளிகை
என்றால்
இல்லாதவனுக்கு
தங்கையின் உள்ளமே
தங்கமாளிகை.
தங்கை உள்ளமே போதும்
Annan Thangachi Quotes In Tamil
தங்கை கண்ணில்
கண்ணீர் வந்தால்
அண்ணன் நெஞ்சில்
இரத்தம் வருவது போன்ற
வலி இருக்கும்.
தங்கை தன் அண்ணனை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டாள்.
தங்கைக்கு வாழ்க்கை
அமையும் வரை தன்
வாழ்க்கையை பற்றி
நினைக்க மாட்டான்
அண்ணன்.
Annan Thangachi Quotes In Tamil
வலிக்காமல் குட்டுவது
எப்படி என்பது தங்கைகளுக்கு
மட்டுமே தெரியும்.. அது போல
வலித்தது போல் நடிக்க
அண்ணன்களால்
மட்டுமே முடியும்.
கையில் மருதாணி வைத்து
அவசரமாய் என்னிடம்
ஓடி வரும் போது ஓர்
உலக அதிசயமாய்
என் தங்கை.
Annan Thangachi Quotes In Tamil
தங்கையின் வாழ்க்கைக்காக
தன் வாழ்க்கையை கூட
தியாகம் செய்பவன்
அண்ணன் மட்டும் தான்.
விடுமுறை தினங்களில்
சைக்கிள் ஓட்ட
கற்றுத்தருவாய் முயற்சித்து
மணலில் நான் விழுகையில்
மாரோடு அணைக்கும்
தாயும் நீயே அண்ணா.
Annan Thangachi Quotes In Tamil
அண்ணன் தங்கை
எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் அடுத்த
நொடியே இருவரும்
பேசிக் கொள்வார்கள்..
அது தான் உடன்
பிறந்த பாசம்.
தன் தங்கைக்காக எந்த
சூழ்நிலையையும் தாங்கி
கொள்பவன் அண்ணன்
மட்டுமே.
Annan Thangachi Quotes In Tamil
அண்ணன் தங்கை உறவு
என்பது வெறும் கையில்
கட்டும் கயிற்றில் வாழ்வதில்லை..
அது இதயத்தில் வாழ்வது.
எந்த செயலையும் துணிந்து
செய்வான் தன்
தங்கைக்காக அண்ணன்.
எத்தனை முறை அம்மா
திட்டினாலும் ஓய்வதே
இல்லை அண்ணன்
தங்கை சண்டை.
Annan Thangachi Quotes In Tamil
தன் உயிர் உள்ளவரை
அண்ணனிடம் அன்பும் பாசமும்
காட்டுபவள் தங்கை.
தங்கை அண்ணன் மீது
காட்டும் அதிகபட்ச பாசம்
சண்டையாக தான் இருக்கும்.
மலர்களோடு மலராக
பூத்திருக்கும் ரோஜாவே
தங்கை.. உன்னைக்
காப்பதற்கு முள்ளாக
நானிருப்பேன்.
Annan Thangachi Quotes In Tamil
என்றுமே மாறாத அன்பு
என் அன்புத் தங்கையே
உனக்கு மட்டுமே என்றுமே
இந்த அண்ணன் உனக்கு
கொடுப்பேன்.
தங்கை என்றும் அண்ணனுக்கு
விலை மதிக்க முடியாத
பொக்கிஷம்.
Annan Thangachi Quotes In Tamil
அண்ணன் எது வாங்கிக்
கொடுத்தாலும் தங்கை
குறை சொல்லாமல்
இருக்க மாட்டா.. ஆனா
எல்லோரிடமும் இது என்
அண்ணன் வாங்கித் தந்தது
என்று பெருமையாக
சொல்லுவாள்.
வாசித்த கவிதைகளில்
யோசிக்க வைத்த வரி அண்ணா…
சுவாசித்த இதயங்களில் நேசிக்க
வைத்த வரி தங்கை.
Annan Thangachi Quotes In Tamil
தன் தங்கைக்காக எல்லோரையும்
எதிர்த்து நின்று போராடுபவன்
அண்ணன் மட்டும் தான்.
உடல் முழுதும் இரத்தம் வந்தாலும்
அதையும் தாங்கிக் கொண்டு
தன் தங்கைக்காக உழைப்பவன்
தான் அண்ணன்.
எனக்கு இன்னொரு தாய் தந்தை
என் அண்ணனே என்று
கூறுவாள் தங்கை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu