Anbu kavithai in tamil-'அன்பு' என்பது ஆகாய ஊற்று..! எங்கிருந்து பாய்கிறது என்பது தெரியாது..!
Anbu kavithai in tamil-அன்பை வெளிப்படுத்தும் கவிதைகள் (கோப்பு படம்)
'அன்பு' என்பது இரண்டு உள்ளங்களுக்கு இடையேயான உறவின் சக்தியை வெளிப்படுத்தும் ஒரு காயப்படுத்தாத ஆயுதம். கரடுமுரடான உள்ளம் படைத்தோரையும் 'அன்பு' என்ற ஒற்றைச்சொல் அவர்களை மென்மையாக்கும்.
அதேபோலவே அன்பு இருபக்க கூர்மையுள்ள கத்தி போன்றது. அந்த இருபக்க கத்தி குத்தினாலும் காயம் ஏற்படாது, மாறாக அன்பின் ஊற்று பெருக்கெடுக்கும்.
'அன்பு' சமாதானத்தின் தூதுவன். அமைதியின் பாதுகாவலன். அந்த அன்பின் அழகினை அளவெடுத்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்கிவிட முடியாது. 'அன்பு' பரந்து விரிந்தது. அண்ட ஆகாசங்களைக் கடந்தது.
அப்படிப்பட்ட அன்பின் வடிவங்களில் மேற்கோள்களை பார்ப்போம் வாங்க.
செடியில் மலர்ந்த மலர், மண்ணில் உதிர்ந்து மறைந்து போகும். ஆனால் என் மனதில் பூத்த அன்பு என்றும் உதிர்வதில்லை.
அழகைப் பார்த்து காதலிக்க நான் உள்ளமற்றவன் அல்ல. நான் கள்ளமற்றவன். இளமையில் மோகம் மட்டுமே அழகாகத் தோன்றும் என்ற முதிர்ச்சி அறிந்தவன். உண்மைக்காதல் அழகைப் பார்ப்பதில்லை, உள்ளத்தை மட்டுமே..!
சுவைமிகு உணவெனினும் அளவுக்கு மேல் என்றால் சலித்துப்போகும். ஆனால், அன்பு எவ்வளவு கிடைத்தாலும் சலிக்காது. வெறுத்தாலும் விட்டு விலகாது.
அன்பு கோபத்திலும் குறையாதது. கோபத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும். அன்பு சாகும் வரையிலும் விடாது, தொடரும்.
Anbu kavithai in tamil
தூய்மையான அன்பு பனை வெல்லம் போன்றது. திகட்டத் திகட்டத் தின்றாலும் சுவை மாறாது.
உண்மை அன்பு மலைகளில் தோன்றும் அருவி போன்றது. ஆயிரம் கசப்பான செடிகளுக்குள் புகுந்து வந்தாலும் அதன் தன்மை மாறாது. அதைப்போலவே உண்மை அன்பு எத்தனை துன்பங்கள் எதிர்கொண்டு வந்தபோதும் மூலிகையை தனக்குள் உள்வாங்கிய அருவி நீர் மாறாதது போல அன்பும் மாறாது.
அன்பு என்பது ஒரு வாழ்க்கையின் சிறந்த பரிசு. அதைப் பெறுவதிலும் மகிழ்ச்சி; கொடுப்பதிலும் மகிழ்ச்சியே.
'அன்பு' என்கிற தேடல் கிடைத்தவர்களுக்கு பொக்கிஷம். அன்பை இழந்தவர்களுக்கு தேடும் புதையல்.
நேசத்தைக் காட்டி மோசமாக நடிப்பவர்களுக்கு அன்பு பொதிந்த பெயர்களை சூட்டாதீர்கள். அவர்கள் அன்பின் எதிரிகள், அன்பின் கொலைகாரர்கள். வேண்டாம்..அன்பு வாழட்டும்..!
Anbu kavithai in tamil
அன்பு நினைவுகளை இனிதாக்கும். அன்பு பகைமையை விரட்டி அடிக்கும். அன்பு உள்ளத்தை நிறைவாக்கும்.
அன்பு என்பது ஒரு குடும்பத்தின் ஆலவிழுது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நிழல்தரும் நிசமாகும்.
அன்பு கிடைத்தால் ஆனந்தம் தான். அதுவே அன்பு எதிர்பாராமல் கிடைத்தால் பேரானந்தம்..!
'அன்பு' வெறுப்பை உரமாக்கும் உயிர்சக்தி. உள்ளத்து அன்பின் ஆழச்சிரிப்பால் முகத்தில் பூப்பது புன்னகை..!
'அன்பு' மேடு பள்ளங்களை சீராக்கும் உன்னத கருவி. உலகை நேராக்கி, உள்ளத்தை கூர்மையாக்கி அகிலத்தை ஆளவைக்கும்.
அன்பு குடிகொண்ட உள்ளத்தில் 'கருணை,இரக்கம், பண்பு, ஒழுக்கம், படிப்பினை, நல்லறிவு' போன்றவை தானே குடியேறும் தெய்வங்கள் ஆகும்.
Anbu kavithai in tamil
அன்பின் விதை ஒரு குடும்பத்திற்கு மட்டுமானதல்ல அது உலகுக்கே சோறுபோடும் கணக்கற்ற விளைச்சல் தரும் மாய பாத்திரம்.
அன்பு என்னும் புத்தகத்தின் முடிவுரை, பெரும்பாலும் பிரிவாகத்தான் இருக்கிறது. அது மாற்றமுடியாதது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்ற வள்ளுவனைப்போல அன்பிற்கும் உண்டோ வடிவம் என்ற வினாவில் அன்பிற்கு உருவம் கிடையாது, அது உள்ளத்தால் வருவது என்ற விடை கிடைத்தது.
வாழ்க்கைக்கு பணமும் பொருளும் தேவைதான், ஆனால் அதுவே வாழ்க்கையன்று, அன்பைத் தொலைத்தவர்களுக்கு.
புரிதலும் விட்டுக்கொடுத்தலும் உண்மை அன்பினை அளவிடுகின்றன. அதனால் எந்தச் சூழலிலும் அன்பை விட்டுக்கொடுப்பதில்லை, விட்டு விலகுவதும் இல்லை. உண்மை அன்புக்கு இலக்கணம்.
Anbu kavithai in tamil
அன்பு என்பது வண்ணத்து பூச்சியைப் போன்றது. வலுக்கட்டாயமாக விரட்டிப் பிடிக்க (பிடுங்க) நினைத்தால் அது பறந்துவிடும் இல்லை இறந்துவிடும். அன்பு எனும் வண்ணத்துப்பூச்சி அதுவே தேடிவந்து உன் தோள்களில் அமர வேண்டும்.
நீங்கள் என்னை வெறுத்தால் நானும் வெறுப்பேன், நீங்கள் என்னை துரத்தினால் நானும் துரத்துவேன், நீங்கள் என்னை மறந்தால் நானும் மறப்பேன், ஆனால் மறு ஜென்மம் என்று ஒன்றிருந்தால், அங்கும் உங்களைத் தேடி வந்து தொல்லை பண்ணுவேன். காலம் தான் தோற்குமே தவிர என் அன்பு தோற்காதது.
அன்பு கொண்ட அனைவரும் விலகிச் செல்வதால், சில நேரம் நேசிப்பவர்களிடம் அன்பைச் சொல்ல அச்சம் எழுகிறது. சொன்னால் பிரிந்துவிடுவார்களோ என.
வாழ்வில் அனுபவம் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றுகிறது.
Anbu kavithai in tamil
அன்பு இருக்கும் உள்ளம் எப்போதும் அமைதியுடன் இருக்கும். அன்பு மட்டுமே யாரையும் காயப்படுத்தாத அனைவரையும் வீழ்த்தக் கூடிய ஆயுதம்.
அன்பை உணர வேண்டுமானால் முதலில் உண்மையாக இருக்க வேண்டும். உண்மை இல்லாத உள்ளத்தில் அன்பு என்பது வெறும் நாடகம்.
அவளுக்குப் பிடிக்காத ஒன்றைச் ஒன்று செய்து விட்டேன். அதனால் என்னை விட்டுச் சென்றுவிட்டாள். அவளுக்குப் பிடிக்காதது அதிகமாய் அன்பு வைப்பது. இழப்பு எனக்கல்ல..!
நாம் விலகினாலும் தேடி வந்து பேசும், சில அன்பான உள்ளங்களுக்கு தேவைக்காக பழகும் சுயநலம் ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை, அன்பு ஒன்றைத்தவிர.
Anbu kavithai in tamil
அன்பு வாழ்க்கைக்கு மிக அவசியமானது என்றாலும் அதுவும் அளவோடு இருப்பது நலம்.அளவுக்கு அதிகமானால் அதுவும் நஞ்சு தான்.
கள்ளமில்லா நல்ல அன்பு வேண்டுமென்றால் நாட வேண்டிய ஒரே இடம் குழந்தைகள்..!
வேண்டாம் என்று வெகுதூரம் நாம் விலகிச்சென்றாலும் மீண்டும் விட்ட இடத்திற்கே நம்மை அழைத்து வந்து விடுகிறது ஒரு சிலரின் அன்பு.
குணம் மாறாத அன்பு புரிதலுடன் விட்டுக் கொடுக்கும் போது, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத அந்த அன்பு பேரன்பாக வளர்கிறது.
நடிக்கத் தெரியாத அன்புக்கு சிலநேரங்களில் கோபமும் வரலாம். அங்கு இருப்பது உண்மை அன்பு.
'அன்பு' என்பது ஒரு திரவம். கொதிப்பவர்களிடம் ஆவியாகிவிடுகிறது. குளிர்கிறவர்களிடம் உறைந்துவிடுகிறது.
Anbu kavithai in tamil
அன்பை கொட்டவும் அக்கறை காட்டிடவும் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனம் ஏங்குவதென்னவோ விரும்பி சிறைபட்ட அந்த ஒற்றை இதயத்திடம் மட்டுமே.
நாம் இந்த உலகத்தில் தங்கிச் செல்லும் காலத்திற்கான வாடகை, மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே.அது கணக்கற்றதாகவும் இருக்கிறது.
சிலரின் போலி அன்பை உண்மை என்று நம்பி காகிதக் கப்பல்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன், அவை மூழ்கிவிடும் என்பதறிந்தும்.
உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது. உண்மையான அன்பை இழக்கும்போது தான் அதன் மதிப்புப் புரியும்.
Anbu kavithai in tamil
உலகில் விலை மதிப்பில்லாத விஷயங்கள் இரண்டு உள்ளன. ஒன்று தாய்மையில் உருவாகி மரணம் வரை தொடரும் அன்பு. இன்னொன்று, எதையும் எதிர்ப்பாக்காமல் மற்றொருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை.
தூக்கியெறிந்த பிறகும் தூற்ற மனம் வருவதில்லையெனில் உங்களின் அன்பு உண்மையானது தான்.
அதிகாரத்தால் விலைக்கு வாங்க முடியாததில் முதன்மையானது பெண்மையின் அன்பு.
அறியா வயதில் அன்பைப் பற்றி அனைவருமே அதிகம் அறிந்திருப்போம். அங்கு குழந்தைத்தனங்கள் நிரம்பி இருப்பதால்.
முக்கியத்துவம் இருப்பதால் அன்புக்காட்ட வேண்டாம், அன்பு வைத்தப்பிறகு முக்கியத்துவம் கொடுங்கள்.
Anbu kavithai in tamil
அடுத்தவர் மனதை ஆராயாமல், அவர்களிடம் நம் அன்பை வெளிப்படுத்துவது நமது அறியாமையின் அடுத்த பக்கம்.
உடைத்தெறிய ஆயிரம் காரணங்கள் இருக்க, உயிர்த்தெழ ஏதாவது ஒரு காரணத்தை வைத்திருக்கிறது அன்பு.
ஆசை என்பது பனித்துளி போல நொடியில் மறைந்து வீடும். உண்மையாக வைத்த அன்பு கடல் போன்றது என்றும் நிலைத்திருக்கும்.
வலிகளைக் கடந்த தன்னம்பிக்கையும், எதிர்கொண்ட சவால்களில் தோன்றிய புன்னகையும் கொண்டவர் வாழ்க்கை குறைகளைக் காண்பதில்லை..!
ஒருவர் மீது அதிக அன்பு வைத்திருப்பதை நிரூபிக்க மற்றொருவரின் மனதைக் காயப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை.
அன்பின் பஞ்சாயத்து எப்போதும் தீராது. அன்பு வைத்தும் கிடைக்கவில்லை என்று சிலரும், அன்பு போதும் என்று ஒதுங்கி ஓடும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Anbu kavithai in tamil
சிலரின் அன்பு வார்த்தையில் மட்டுமே இருக்கும். மனதில் இல்லாத அன்பு செயலிலா வந்துவிடப்போகிறது? பெருமைக்கு உரைக்கும் காரியவாதியாக இருப்பார்கள்.
உன்னிடம் பழகிய நொடியில் இருத்து உன் அன்பு எனக்கு தெரிந்தது. ஆனால் உன்னை பிரிந்த பின்தான் உன் அன்பு எனக்கு புரிந்தது.
உன் அன்பின் அதீதத்தை உணர்ந்த பின் வேறெதுவும் பெரிதாய் இருந்திடவில்லை அன்பே.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu