amma birthday wishes quotes in tamil-ஈன்ற தாய்க்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து..!

amma birthday wishes quotes in tamil-ஈன்ற தாய்க்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து..!
X
amma birthday wishes quotes in tamil-பெற்ற தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் ஒரு பெரிய ஆனந்தமே இருக்கிறது. நம்மை ஈன்றவள் பிறந்தநாள்..! அவள் பிறந்தபோது நினைத்திருப்பாளா..?

இந்த உலகுக்கு நம்மை அறிமுகப்படுத்திய தேவதை அம்மா..! யாராலும் கொடுக்கமுடியாத அளவுக்கு புனிதமானது தாயின் அன்பு. தாய்க்கு ஈடாக எதையும் உதாரணம் காட்டிவிடமுடியாது. விலங்கினங்கள் கூட தாய் என்றால் குழந்தையைக் காப்பாற்ற போராடும்.


வனத்தில் ஒரு புள்ளிமான் தனது குட்டியுடன் மேய்ந்துகொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுத்தை மானையும் குட்டியையும் வேட்டையாடத் தீர்மானித்து சுற்றி வளைக்கிறது. ஆனால், தாய் மானோ குட்டியைக் காப்பாற்றுவதற்காக சிறுத்தையின் முன் நின்று தன உயிரைத் தந்து குட்டியைக் காப்பாற்றிவிட்டு சிறுத்தைக்கு உணவாகிவிட்டது. அதுவும் தாய் பாசமே.

மனிதர்களிலும் கூட வாகன விபத்து நடக்கும்போது தான் இறந்தாலும் பரவாயில்லை என்று குழந்தையை பாதுகாப்பாக தூக்கி வீசிய தாயின் கதைகளையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். இப்படியான சம்பவங்களே தாயின் பாசத்திற்கு போதுமானவைகள்.

அப்படியான தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்வது நமது கடமையல்லவா..? வாருங்கள் தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து எழுதுவோம்.

  • எத்தனைப் பிறவியிலும் தாயே உனக்கு நானே மகனாக பிறக்கவேண்டும். என்னை ஈன்ற தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • என் வாழ்க்கையின் ஒளி நீயே..என் வாழ்க்கையின் முழுமையும் நீயே அம்மா..! உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • அம்மா உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்..! நீ ஊட்டிய நிலா சோற்றைக்காட்டிலும், வேறு அமிர்தம் நான் கண்டதில்லை, அம்மா..!
  • மீண்டும் நான் குழந்தையாக வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன், என் அன்னையின் மார்பில் மீண்டும் பால்குடிக்க..! இன்னும் கூடுதலாக உன்னிடம் இருந்து பாசத்தை பங்குபோட்டுக்கொள்வதற்காக..! என் செல்ல அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

  • ஆறாத துன்பம் வந்தபோதும் உன் முந்தானையில் என் கண்ணீர் துடைத்தால் தொலைந்துபோகிறது மனக்கவலைகள்..! நீண்டு வாழவேண்டும் என் அம்மா..என் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • அலங்காரம் செய்து உன்னை அழகாக பார்க்காவிட்டாலும் என் ஆயுள் முழுவதும் உன்னை என் நெஞ்சில் சுமப்பேன் அம்மா.! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.!
  • உன்னைப்போல் ஓருறவு இனி எனக்கேதம்மா..? கண்ணைப்போல் வைத்துனை காப்பேனம்மா..! என் செல்ல அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • இதயம் அற்ற உயிராய் இருந்த என்னை கருவறையில் சுமந்து உயிர்தந்த இறைவி நீதானம்மா..! உனக்குப் பின்னேதான் எனக்கு பிற கடவுளெலாம்..! என் இனிய அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!

  • மூச்சடக்கி எனை பிரசவித்த தாயே..என் மூச்சுள்ள வரை உனைக் காப்பேன்..! என் நெஞ்சில் வைத்து சுமப்பேன்..! என் இனிய தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • எண்ணற்ற என் ஏக்கங்களுக்கு விடைதந்த தேவதை என் அம்மா..! நான் மனதில் நினைப்பதற்கு முன்னே வாங்கித் தரும் தெய்வம்..! என் இதயத்து தீபமாக இருக்கும் என் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • நித்திரை சூழாத நேரங்களில் எல்லாம் என் தாய்மடியில் படுத்தால் கண நேரம் போதுமானது, நான் .!தூங்கிப்போவேன். என் இனிய அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்த மெத்தையானாலும், என் தாய்மடிக்கு ஈடாகாது..! சொர்க்கம் என்பது என் தாய்மடி மட்டுமே..! என் தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

  • உன் விழிகளில் அருவியாய் கண்ணீர்..ஆனால் மனதிலோ எனை ஈன்றதன் மகிழ்ச்சி..! அப்படியே வாரி அள்ளி எனை முத்தமிட்டாய்..! அந்த முத்தம் நானறியாமல் இருந்தாலும் இன்னும் என் கன்னத்தில்தான் இருக்கிறது அம்மா..! என் தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • எத்தனை காலங்கள் ஆனால் என்ன..? உனக்கு நான் சிறுபிள்ளைதான்..! என்னை அடிப்பதற்கும் என்னை தண்டிப்பதற்கும் உனக்குமட்டுமே உரிமையுண்டு அம்மா..! நான் உனக்கானவன்..! என் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..!
  • துன்பத்தின் சோகங்களால் வரும் கண்ணீர் அருவியாய் கொட்டும்போதெல்லாம் அன்பென்ற அணை கட்டி என்னுள் இன்ப ஊற்றாய் நின்று நம்பிக்கையை பொங்கச் செய்தாய்..! என் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு