எனை ஈன்ற தாய்க்கு இன்று பிறந்தநாள்..! தாழ் பணிகிறேன் தாயே..!

Mom Birthday Quotes in Tamil
X

Mom Birthday Quotes in Tamil

Mom Birthday Quotes in Tamil-இந்த உலகுக்கு என்னை, அறிமுகப்படுத்திய கடவுள். என்னை ஈன்ற தாய். எனை பிறப்பித்தவளுக்கு இன்று பிறந்தநாள்..!

Mom Birthday Quotes in Tamil-தொப்புள் கொடியால் என்னை பிணைத்தவள். எப்போதும் என்னை முந்தானைக்குள் புதைத்தவள். அவளின் முந்தானையைப் பிடிக்காமல் நான் உறங்கியதில்லை. என் தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் நான் படுக்க வந்தபோதெல்லாம் என் தந்தை என்னை வெறுப்பாக பார்த்தபோது என் அன்னைமட்டும் மௌனமாக சிரித்த சிரிப்பின் அர்த்தங்கள் இப்போது தெரிகிறது.எனக்காக மகிழ்ச்சியைத் தொலைத்து வாழ்ந்தவள்.

பிறருக்காக வாழ்வதே பெண்மையின் சிறப்பு.அல்ல..அல்ல தாய்மையின் சிறப்பு. ஆமாம் பெண் என்றாலே தாய்மை. குழந்தையாய் இருக்கும்போது பெண்குழந்தை சகோதரனுக்காக விட்டுக்கொடுப்பாள். தந்தைக்கு விட்டுக்கொடுப்பாள். கல்யாணம் பண்ணிய பின்னே கணவனுக்கு விட்டுக்கொடுப்பாள். குழந்தைகள் ஆனபின்னே அவர்களுக்காக விட்டுக்கொடுப்பாள். பெண் என்றாலே அடுத்தவர் நலனுக்கு வாழ்பவள். இறைவனுக்கு நிகரான தாய் பிறந்தநாள் என்றால்..வாழ்த்துகளை பாருங்கள்..படீங்க..!

  • யார் அன்பு காட்டினாலும் அது என் தாயின் அன்பை போல் வருமா? யாராலும் கொடுக்கமுடியாத அளவுக்கு புனிதமானது என் தாயின் அன்பு..! அம்மா உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • நீ ஊட்டிய நிலா சோற்றைக்காட்டிலும், வேறு அமிர்தம் நான் கண்டதில்லை, அம்மா..!
  • அப்பா கடைக்கு செல்கையில் சாப்பிட எதாவது வாங்கிட்டு வா என்பதும், அம்மா கடைக்கு செல்கையில், சீக்கிரமா வாம்மா என்பதும், தாய் அருகேயே வேண்டும் என்று எண்ண வைத்தது நெஞ்சம்..! Amma I Love You..!
  • ஆடம்பரமாய் கட்டித்தந்த வீட்டை விட, உன் சேலையில் கட்டித்தந்த வீடு தான் ஆனந்தத்தை தந்தது அம்மா..
  • அழகே..! நின் உதிரம் கொண்டு உயிர்த்தவள் எழுதுவது, என் கன்னம் கிள்ளும் செல்லம் தலையில் குட்டும் கோபம்.. எவ்வுண்மையயும் உரைக்கும் உன் நேர்மை..எந்த ஆண்மையையும் மிஞ்சும் உன் திறமை.. நான் அழ பதறிப் போகும் நின் தாய்மை.. இவையோடு இளவெயிலாய், திங்கள் தோறும் உன் சுருக்கங்கள் அதிகரிக்க மீண்டும் ஒரு கிள்ளையாய் எம் கை சேருவாயா..?
  • வேதனை என தெரிந்தும் தன் குழந்தைக்காக ஏற்றுக்கொன்டு சுமக்கிறாள் பெண்..! ஒரு தாயாக பெண்ணே நீ தேவதை தான்..
  • எனக்கு எத்தனையோ ஆசைகள் இருக்கிறது.. ஆனால் அவளின் ஆசை கனவு அனைத்தும், நானாக மட்டுமே இருக்கிறேன், அம்மா..
  • அளவில்லாத பாசம் விட்டுக்கொடுக்காத உரிமை இவையனைத்திற்கும் சொந்தக்காரி.. ஒவ்வொரு வீட்டிலும் தெய்வமாக வாழ்கிறாள் அன்னையாக..
  • அனைத்திலும் ஆசானாகி, அகிலத்தின் முதன்மையானவள் எனும் போற்றுதலுக்குறியவள், என் அம்மா..!
  • இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.. நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.. பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்.. அவள் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்..!
  • தேடிச்சென்ற சொந்தமெல்லாம் தேவையில்லை என்றாலும், என்னை தேவையில்லையென்று மட்டும் ஒதுக்கி வைக்கவில்லை என்னை பெற்றெடுத்த மகராசி, அம்மா..
  • கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா..
  • ஓவ்வொரு முறை என் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டித் திட்டு வருகிறேன் என் கடவுளை..
  • இழந்தவன் தேடுவதும், இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு..
  • பூஜை இல்லாமலும், கைகூப்பி தொழாமலும், உன் ஆசையை நிறைவேற்றும் ஒரே தெய்வம், அம்மா..!
  • அன்பு, அதுவும் தூய அன்பு, விலகாது, மாறாது, மறையாது, அது தாயின் அன்பு..!
  • தாயிற் சிறந்த கோயிலும் இல்லை!..தெய்வமும் இல்லை.. அவளுக்கு ஈடு சொல்ல, எந்த உலகிலும் எதுவும் இல்லை.. அன்பு அணைப்பினால், அகிலத்தையே தாரை வார்த்திடுவாள்..! அந்த பேரன்பிற்கு இணையாக எதுவுமே இல்லை..அன்பு அன்னையரை வணங்குகிறோம்..!
  • அம்மா... என் மீது எப்போதுமே வீசுவது அன்பு எனும் அம்பு மட்டுமே..அது என்னை குத்துவதில்லை..மாறாக வருடுகிறது,மயிலிறகாய்..!
  • அன்பு எனும் நீர் ஊற்றி, ஆசீர்வாதத்தைப் பொழிந்தாய். எனக்குத் தொடர்ந்து ஆதரவாக இருந்ததற்கு நன்றி.
  • ஒவ்வொரு நாளும் கவலைப் படுவாள்..! ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலைப்படமாட்டாள்.. அம்மா...
  • கேட்டதை வாங்கி கொடுத்துவிட்டால் மனைவிக்கு மகிழ்ச்சி... என்ன வேண்டும் என்று கேட்டாலே தாய்க்கு மகிழ்ச்சி..!
  • கேட்க கூச்சப்படுவான் என நினைத்து, எல்லா உறவினர்கள் வீடுகளிலும், தன் பிள்ளைக்குத் தானே பரிமாறுவாள் அம்மா..
  • உலகத்திலே தூய உறவு கொண்ட ஓர் உயிர் இருக்கும் என்றால், அது நம்மைப் பெற்ற தாய் தான்..!
  • அடிப்பதும் அன்னையே, அரவணைப்பதும் அன்னையே.. இதைத் தவிர காதலுக்கு வேறு எடுத்துக்காட்டு உண்டோ?
  • அடுத்தவர்களின் கண்களுக்கு எப்படியோ, என் விழிகளுக்கு உலக அழகி என் அன்னையே..

என் இதயத்தில் உன்னுடைய இடத்தைப் பிடிக்க வேறு யாரும் இல்லை. உலகின் மிகச் சிறந்த அம்மாவைக் கண்டுபிடித்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். உங்கள் பிறந்தநாளில் ஒரு நிமிடம் ஒதுக்க விரும்புகிறேன், அழகான தோற்றத்திற்கும் அனைத்து எல்லையற்ற அன்பிற்கும் நன்றி..

  • உங்களின் சிறப்பான உறவை நான் பொக்கிஷமாக கருதுகிறேன், இந்த சிறப்பு நாளில் உங்கள்

அரவணைப்பையும் அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பே அம்மா..!

  • உங்களைப் போன்ற ஒரு தாயைப் கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி..என் அருமையான அம்மாவுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்..உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அன்பு மற்றும் மகிழ்ச்சியை எப்போது பெற விரும்புகிறேன்..
  • எப்போதும் என்னில் சிறந்ததைக் கொண்டு வரும் அல்லது நான் என்ன செய்தாலும் குறைந்தபட்சம்

என்னில் சிறந்ததைக் கண்ட பெண்ணுக்கு.பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!

  • நீங்கள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். ஆனால், நான் என் பக்கத்திலேயே உன்னுடன் இருக்க நினைக்கிறேன்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு