Akka Thambi Quotes in Tamil-தம்பி கிடைத்த அக்கா; அக்கா கிடைத்த தம்பி..! யார் வரம் பெற்றவர்..?

Akka Thambi Quotes in Tamil-தம்பி கிடைத்த அக்கா; அக்கா கிடைத்த தம்பி..! யார் வரம் பெற்றவர்..?
X

akka thambi quotes in tamil-அக்கா தம்பி மேற்கோள்கள் (கோப்பு படம்)

ஒருமுறை மட்டுமே பிறக்கும் சகோதர பாசம் எந்த உறவுகளோடும் ஒப்பிட்டு கூறிவிட முடியாது. அந்த உறவுகளுக்கென்று தனித்தன்மைகள் உள்ளன.

Akka Thambi Quotes in Tamil

சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதற்குச் சமம் ஆகும். இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான இணைபிரியாத நண்பர்களாக வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் அல்லது சோகங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே எதிர்கொண்டிருப்பார்கள். ஒருவரை ஒருவர் அன்பால் நனைத்து இருப்பார்கள். ஒன்றாக உண்டு கழித்திருப்பார்கள். ஒன்றாக தூங்கி இருப்பார்கள். ஒன்றாக பள்ளிக்குச் சென்றிருப்பார்கள். முக்கியமான

Akka Thambi Quotes in Tamil

ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் இருக்கும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக வெறுமையாக, அற்புதமான உறவை இழந்து சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து இருப்பார்கள்.

அக்கா – தம்பி

உறவை பற்றி கவிதை

எழுத முயற்சி செய்து

தோற்று போனேன்

இந்த அக்கா – தம்பி உறவே

ஒரு அழகிய கவிதை

என்பதை உணர்ந்த பின்பு

தாயின் மறு உருவம் நீ..

உனது முதல் பிள்ளையாக நான்

அன்பால் இணைந்து இருக்கும்

இரு விண்மீன்கள்

அக்கா – தம்பி!

வயதால் எவ்வளவு தான்

அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு

தன் தம்பி எப்போதும்

சிறு பிள்ளை தான்!

Akka Thambi Quotes in Tamil

தம்பிகள் இருக்கும்

அக்காக்களுக்கு மட்டுமே

தெரியும். அது குட்டி குழந்தை அல்ல

குட்டி பிசாசு என்று..!

பிறப்பு, இறப்பு, வாழ்க்கை,காதல்,

எல்லாம் ஒரே ஒரு முறை ஆனால்

நான் உன் மீது கொண்டஅன்பு மட்டும்

உன் தம்பி நான் சாகும் வரை..

அக்கா.!

தம்பிகளுக்கு மட்டும் தான் தெரியும்

தன் அக்காவின் அன்பும்

கண்டிப்பும் இன்னொரு

அம்மாக்கு சமம் என்று.!

Akka Thambi Quotes in Tamil

தம்பியை

தன் அன்பால் அடக்கவும்

தம்பியின் கோபத்திற்கு

அடங்கவும் தெரிந்த ஒரு பெண்

அக்கா என்றால் அந்த

அக்கா தம்பி பாசம் என்றும்

ஒரு சொர்க்கம் தான்..!

அம்மாவிடம் கூட சில உண்மைகள்

மறைப்பதற்கு இருக்கலாம்

ஆனால் அக்காவிடம் மறைப்பதற்கு

ஒன்றுமே இல்லை.

பிள்ளை பாக்கியம் பெறாமலே

தாயாகும் பாக்கியம்

அக்காகளுக்கு மட்டுமே உண்டு.

அன்னையின் அரவணைப்பை

அவளிடம் கண்டேன்

அன்பிற்கு அடைமொழி கேட்டால்

என் அக்கா என்பேன்!

Akka Thambi Quotes in Tamil

உன் அன்பிற்கு நான் அடிமை

உன் கண்டிப்புக்கு நான் குழந்தை

உன் துன்பத்தில் நான் நண்பன்.

“அக்கா” பாசத்தின் தாய்

அரவணைப்பின் அன்னை..

மகிழ்ச்சியின் அம்மா..!

தம்பியின் கோபத்திற்கு

அடங்கவும் அதே தம்பியை

தன் அன்பால் அடக்கவும்

தெரிந்த ஒரு பெண் அக்கா

என்றால் அந்த

அக்கா தம்பி பாசம்

ஒரு சொர்க்கம் தான்..!

நேரம் காலம் பார்த்து

சண்டை போடுவதல்ல

அக்கா தம்பி பாசம்..

நினைத்த நேரம் எல்லாம்

சண்டை போடுவது தான்

அக்கா தம்பி பாசம்..!

Akka Thambi Quotes in Tamil

தம்பிகளுக்கு தான் தெரியும்

தன் அக்காவின் அரவணைப்பும்

கண்டிப்பும் இன்னொரு

தாய்க்கு சமம் என்று..!

தம்பியை குழந்தையாக

பார்ப்பதும் அக்காவை

அம்மாவாக பார்ப்பதும் தான்

வார்த்தையால் விவரிக்க

முடியாத உன்னதமான உறவு

அக்கா தம்பி..!

பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை

எல்லாம் ஒரு முறை ஆனால்

உன் மீது கொண்ட பாசம் மட்டும்

உன் தம்பி சாகும் வரை..

அக்கா..!

Akka Thambi Quotes in Tamil

அக்கா தம்பியின் பாசத்திற்கு

முன்னால் அம்மா அப்பாவின்

பாசம் கூட தோற்றுப்போகும்..!

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!