6 month baby food in tamil-6 மாத குழந்தைக்கு இதையெல்லாம் தரலாம்..! தெரிஞ்சுக்கங்க..!
6 month baby food in tamil-ஆறு மாத குழந்தைக்கான உணவுகள் (கோப்பு படம்)
என் குழந்தைக்கு 6 மாசம் ஆச்சு. தாய்ப்பால் மட்டுமே போதுமா..என்ற குழப்பம் இளம் தாய்களுக்கு இருபிப்பது வழக்கமான ஒன்று. ஆனால், 6 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே முழுமையான உணவு என்பதையும் மறந்துவிடக்கூடாது.
வளர்ச்சி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். அதில் சில குழந்தைகள் 5 மாத முடிந்த உடனே திட உணவுக்குத் தயாராகி விடுவார்கள். திட உணவுக்கு தயாராகிவிட்டார்கள் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம்? அதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.
6 month baby food in tamil
குழந்தை திட உணவுக்கு தயாராகி விட்டனர் என்பதை எப்படிக் கண்டுபிக்கலாம்?
- தாய்ப்பால் கொடுத்த பிறகு அழுது கொண்டு இருப்பது, கைகளை சூப்புவது.
- தலை சரியாக நின்றுவிடுதல்.
- உணவைப் பார்த்து சப்பு கொட்டுவது, உணவின் மீது ஆர்வம் காட்டுவது.
- குழந்தைக்கான சிறிய சுத்தப்படுத்திய ஸ்பூனை குழந்தையின் வாயில் வையுங்கள். குழந்தையால் அந்த ஸ்பூனை சப்ப முடிகிறதா அல்லது அவர்களால் கையில் ஸ்பூனை பிடிக்க முடிகிறதா என்று. இதை வைத்தே அவர்கள் திட உணவுக்கு தயாராகிவிட்டனர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
- முதல் முறையாக குழந்தை திட உணவை சுவைப்பதால் சிறிய அளவில் இருந்து படிப்படியாக அளவை அதிகரிக்கலாம்.
- யாருடைய துணையும் இல்லாமல் தானாக உட்காருவது.
- ஒரே உணவைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பதும் நல்லது.
6 month baby food in tamil
திட உணவு கொடுக்கும்போது நினைவில் வைக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்
- பழங்களின் கூழ் (Fruit Purees) பெஸ்ட்.
- முதல் முதலில் கொடுத்தால், ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் என ஆரம்பித்து படிப் படியாக உணவின் அளவை அதிகரிக்கவேண்டும்.
- குழந்தையை கட்டாயப்படுத்தி உணவை ஊட்டக் கூடாது.
- குழந்தை உணவு வேண்டாம் என முகத்தை திருப்பினால் உணவு கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும்.
- தாய்ப்பால் / குழந்தைகளுக்கான ஃபார்முலா பால் காலையிலும் இரவு தூங்கும்போதும் கொடுக்கலாம்.
- மதியம் வேளை மற்றும் மாலை வேளைகளில் திட உணவுகளைக் கொடுக்கலாம்.
- மதிய உணவு குழந்தைக்கு நல்ல சத்தான உணவாக இருப்பது மிகவும் நல்லது.
- இரண்டு முறை திட உணவுக் கொடுத்தாலும் தேவையின் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.
- குழந்தைக்கு தயாரிக்கும் உணவு, குழந்தை சுவைக்கும்படி பக்குவமாக செய்வது நல்லது.
- குழந்தைக்கு ஊட்டும்போது குழந்தையை மேலே உயர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். உணவை குழந்தைகள் பார்க்கட்டும்.
- குழந்தை சாப்பிடுவதை நீங்கள் கவனியுங்கள். அவர்களுக்கு பிடிக்கிறதா, விழுங்க முடிகிறதா, புரை ஏறுகிறதா என்பதெல்லாம் கவனிக்கப்படவேண்டும்.
- உணவு ஊட்டும் போது விளையாட்டு காண்பிக்காமல், குழந்தையிடம் ஏதாவது பேசியபடியே உணவை ஊட்டுதல் வேண்டும்.
- குழந்தை உணவைத் தொட முயற்சித்தால், தொடுவதற்கு அனுமதியுங்கள்.
- குழந்தை கையில் உணவை பிடிக்க ஆர்வம் காட்டினால், நீங்கள் கைகளில் பிடித்தபடியே, குழந்தை தானே உணவை வாயில் வைத்து சுவைக்க அனுமதிக்கவும்.
- முதல் முதலாக ஒரு உணவை கொடுத்தால் 3 நாள் வரை காத்திருந்து, மீண்டும் அந்த உணவை செய்து குழந்தைக்குத் தரலாம்.
- உதாரணத்துக்கு, இன்று கேரட் கொடுத்தால் 3 நாள் கழித்து, குழந்தைக்கு ஒத்து கொள்கிறதா என்பதைக் கவனித்த பிறகே மீண்டும் கொடுக்கவேண்டும்.
- குழந்தைக்கு உணவின் மூலம் அலர்ஜி வருகிறதா எனத் தெரிந்து கொள்ள, தொடக்கத்தில் ஒரு உணவை மட்டும் கொடுத்துப் பாருங்கள். பின்னர் கலவையான உணவுகளைக் கொடுக்கலாம்.
6 month baby food in tamil
குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டால் அதன் அறிகுறிகள்
இருமல்
வயிற்று வலி
வாந்தி
அரிப்புகள்
சிவந்து போகுதல்
முகத்தில் வீக்கம்
மூச்சு விட சிரமம் ஏற்படல் போன்றவைகள்.
குழந்தைக்கு உணவு தரும்போது குழந்தையை நன்றாக கவனியுங்கள். அலர்ஜி எதுவும் தென்பட்டால் உடனே அந்த உணவை நிறுத்தி விடவேண்டும். உடனே குழந்தை நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டும்.
ஆலோசனை
பொதுவாகவே குழந்தைகளுக்கு திட உணவு கொடுப்பதற்கு முன்னர் உங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று அவரது பரிந்துரையின்படி திட உணவுகளைக் கொடுக்கலாம்.
6 மாத குழந்தைக்கு தரப்படவேண்டிய உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன. அந்த நேரங்களில் உணவை வழங்கலாம்.
மதியம் வேளைகளில்- !2 மணி அல்லது 1 மணிக்குள் (தினம் ஒன்றாக மாற்றி மாற்றித் தரலாம்)
ஆப்பிள் கூழ்
கேரட் கூழ்
பூசணி கூழ்
வாழைப்பழ கூழ்
பப்பாளி கூழ்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு கூழ்
மாலை வேளைகளில் ( 3.30 மணி முதல் 4.30 மணிக்குள்) தினம் ஒன்றாக மாற்றி மாற்றிக் கொடுக்கலாம்)
அரிசிக் கஞ்சி
ராகி கஞ்சி
சிவப்பு அவல் கஞ்சி
சம்பா கோதுமைக் கஞ்சி
மசித்த உருளைக்கிழங்கு கூழ்
சப்போட்டா கூழ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu