10 Points about pongal festival in tamil-சொத்தாட்டம் பத்து வரிகளில் பொங்கல் பண்டிகை..!

10 Points about pongal festival in tamil-சொத்தாட்டம் பத்து வரிகளில் பொங்கல் பண்டிகை..!
X
பொங்கல் தமிழர் திருநாள், அறுவடைத் திருநாள் என்று தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. இது ஒரு நன்றி கூறும் பெருவிழா.

10 Points about pongal festival in tamil

அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ‘போகாலி பிஹு’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாட ப்படுகிறது. அறுவடை முடிந்த பிறகு அந்த வயல்களில் கொட்டகைகள் போட்டு முதல் நாள் இரவில் இளைஞர்கள் விருந்து உண்பார்கள். அடுத்தநாள் காலை அந்த கொட்டகைக்கு தீ வைத்து எரிக்கிறார்கள். அப்போதில் இருந்து அறுவடைத் திருநாள் தொடங்குகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருவோருக்கு கரும்புத் துண்டுகள் மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பார்கள்.


மாராட்டியர்கள் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். அப்போது மராட்டியர்கள் எள்ளுருண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

10 Points about pongal festival in tamil

முதல் நாள்: போகிப் பண்டிகை அன்று மராட்டியர்கள் எள் சேர்த்து, ராகி மாவில் ரொட்டியுடன் காய்கறி கூட்டும் செய்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்தபின் சாப்பிடுகிறார்கள்.

இரண்டாம் நாள்: சங்கராந்தி அன்று வெல்லம் சேர்த்து எள்ளுருண்டை செய்கிறார்கள். கூடவே ஏதாவது ஒரு இனிப்பும் செய்து பழம், கரும்பு ஆகியவற்றை படைக்கிறார்கள். எல்லோருக்கும் எள்ளுருண்டை கொடுக்கிறார்கள். சமூகத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க உறுதி எடுத்துக்கொள்கிறார்கள்.


மூன்றாம் நாள்: கிங்கராந்தி அன்று எண்ணெயில் பொரித்து வடை செய்கிறார்கள். பவுஷ் (தை) மாதம் குளிராக இருக்கும். அதனால் உடலுக்குச் சூடு அளிக்கும் எள்ளைச் சேர்த்துக்கொள்கிறார்கள். மராட்டிய மக்கள் பொங்கலின்போது பெண்களுக்கு குங்குமம் மற்றும் எள்ளுருண்டை வழங்குவது வழக்கம். அப்போது இனிமையாக பேசு, யாருடனும் சண்டை போடாதே’ என்று கூறுகிறார்கள்.

ஆந்திர மாநிலத்தில் வயல்வெளி, சூரியன், மழை ஆகியவற்றை தெய்வமாக வணங்கும் விழாவாக திறந்த வெளியில் பொங்கல் பானை வைத்து மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

10 Points about pongal festival in tamil

கேரளாவில் பொங்கல் விழாவைப் பெண்கள் கொண்டாடுகிறார்கள்.இதற்கு ‘பொங்கலா’ என்று பெயர். இந்தப் பொங்கல் மகாசக்தியின் அருளைப் பெறுவதற்குக் கொண்டாடப்படுகிறது.


பஞ்சாப்பில் பொங்கல் பண்டிகையை ‘லோரி’ என்று அழைப்பர். இளவேனிற் காலம் தொடங்குவது பொங்கல் பண்டிகை.

காஷ்மீரில் கிச்சடி அமாவாசை என்ற பெயரில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் பொங்கலின் மறுபெயர் கங்கா சாகர் மேளா. பொங்கல் அன்று கங்கைக் கரையில் ஆடிப்பாடி கும்மியடித்து ஒரே நேரத்தில் நதியில் நீராடி சூரியபகவானை வழிபடுகிறார்கள்.

10 Points about pongal festival in tamil


வட மாநிலங்களில் சில பகுதிகளில் தைப்பொங்கல் அன்று எமகண்ட நேரத்தில் சூரிய பகவான் உத்ராயனத்தில் பிரவேசிக்கும் மகர சங்கராந்தி அன்று எமராஜனை மகிழ்விக்கும் வகையில் எமகண்ட வேளையில் அவரது உருவ பொம்மைக்கு சந்தனம் இட்டு, மலர்சூடி, நிவேதனமாக கருப்பு – வெள்ளை எள் உருண்டையைப் பிரசாதமாகப் படைப்பார்கள்.

குறிப்பு : அங்கு கடைகளில் எமதர்மராஜன் படம், உருவ பொம்மைகள் கிடைக்கிறது.

குஜராத்தில் பொங்கல் திருநாளை புனித தினமாகக் கொண்டாடுகிறார்கள். புதுப் பாத்திரங்கள் வாங்கி அன்று பயன்படுத்துவார்கள்.


தமிழகத்தில் பொங்கல் விழா :

10 வரிகளில் பொங்கல் பண்டிகை

10 Points about pongal festival in tamil

1. பொங்கல் ஒரு அறுவடைத் திருநாள்.

2. இந்த பண்டிகையை தமிழர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

3. தமிழ் நாட்காட்டியின் பத்தாவது மாதத்துடன் தொடர்புடைய பொங்கல் "தைப் பொங்கல்" என்றும் அழைக்கப்படுகிறது.

4. இந்த திருவிழா சுமார் 1000 வருட வரலாறு கொண்டது.

5. இந்த விழா தமிழகம் உட்பட நாட்டின் பிற பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

6. தமிழில் பொங்கல் என்ற சொல்லுக்கு "கசிவு" அல்லது "நிரம்பி வழிவது" என்று பொருள்.

7. தென்னிந்திய மக்கள் வசிக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

8. தமிழ் மாதமான தை மூன்றாம் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

9. பொங்கல் என்பது ஒரு சடங்கின் ஒரு பகுதியாக அரிசி உணவுகளை தயாரிப்பது தொடர்பான பண்டிகையாகும்.

10. இந்த விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

11. முதல் நாள் போகி பொங்கலும், இரண்டாம் நாள் சூரிய பொங்கலும், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கலும் , நான்காம் நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கலின்போது 'பொங்கலோ பொங்கல்' என்று சத்தமிட்டு ஆர்ப்பரிப்பது வழக்கம்.

12. போகிப் பொங்கலன்று இந்திரனையும், சூரியப் பொங்கலன்று சூரியனையும், மாட்டுப் பொங்கலன்று பசுவையும் வழிபடுவார்கள்.

13. அரிசி, வெல்லம், பால், பருப்பு போன்றவற்றின் கலவை சமைக்கப்பட்டு பானைக்கு வெளியே கொட்ட அனுமதிக்கப்படுகிறது.

Tags

Next Story