சமூக நலத்துறையில் ரூ.30,000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்

சமூக நலத்துறையில் ரூ.30,000 சம்பளத்தில் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்
சமூக நலத்துறையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

திருவள்ளுர் மாவட்டம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப சட்டம் 2005 செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் இச்சட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடமாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து 18.01.2023 வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பத்தினை https://tiruvallur.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் (அ) திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

கல்வி தகுதிகள்: M.A. Sociology / Social Work / Psycology with computer knowledge.

வயது வரம்பு: Scheduled Caste / Scheduled Tribe 22 வயதிலிருந்து 35 வயதிற்குள், Most Backward Classes / Backward Classes 22 வயதிலிருந்து 32 வயதிற்குள், General Turn (Open Competition) - 22 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத ஒப்பந்த ஊதியம். ரூ.30,000/-

மேற்படி தகுதிகளுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலக தொலைப்பேசி எண்.044-29896049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story