2006 பேருக்கு மத்திய அரசு வேலை : கல்வித்தகுதி 12ம் வகுப்பு மட்டுமே..!
ஸ்டெனோகிராபர் (கோப்பு படம்)
தேர்வு எப்போது?
இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் கட்டணம் செலுத்த 18ம் தேதி கடைசி நாளாகும்.
ஆக., 27, 28 தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் இந்தத் தேர்வு வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது.
கல்வித்தகுதி: இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படித்தவர்களும் தகுதியானவர்கள்.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோர், ஸ்டெனோகிராபி திறன் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஸ்டெனோகிராபர் கிரேடு 'சி' பணிக்கு 18 முதல் 30 வயதுடையவர்களும், கிரேடு 'டி' பணிக்கு 18 வயது முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
அதிகபட்ச வயது வரம்பு தளர்வு:
எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு - 5 வருடங்கள்.
ஓ.பி.சி., - 3 வருடங்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு:
இந்தப் பணிக்கு பார்வையற்றோர், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், காது கேளாதோர், கை, கால்களை இழந்தவர்கள், முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பிரச்சனை உள்ளவர்கள், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ssc.gov.in எனும் இணையதளப் பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ.100 ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu