விளையாட்டு வீரர்களுக்கு அற்புதமான வாய்ப்பு!

விளையாட்டு வீரர்களுக்கு அற்புதமான வாய்ப்பு!
X
விளையாட்டு வீரர்களுக்கு அற்புத வாய்ப்பு வந்துள்ளது. எஸ்.பி.ஐ., வங்கியில், 68 பேருக்கு வேலை ரெடியாக உள்ளது.

இளங்கலை பட்டம் பெற்ற, விளையாட்டு வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,) வங்கியில், 68 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 14ம் தேதி.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், 17 வங்கி அதிகாரி, 51 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு, இளங்கலை பட்டம் முடித்த, விளையாட்டு வீரர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

கல்வி தகுதி என்ன?

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கூடைப்பந்து, கிரிக்கெட் , கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து , கபடி, டேபிள் டென்னிஸ், பாட்மின்டன் போன்ற 8 துறைகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு முதல் முன்னுரிமை; மாநிலம் சார்பில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாம் முன்னுரிமை. பல்கலை இடையிலான போட்டியில் பங்கேற்றவர்களுக்கு மூன்றாம் முன்னுரிமை. தேசிய போட்டிகளில் மாநில பள்ளிகளின் சார்பில் பங்கேற்றவர்களுக்கு நான்காம் முன்னுரிமை வழங்கப்படும். வங்கி அதிகாரி, கிளர்க் ஆகிய இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பினால், தனித்தனியாக விண்ணப்பங்களை நிரப்ப வேண்டும்.

வயது வரம்பு.

வங்கி அதிகாரி பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கிளர்க் பணிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://bank.sbi/web/careers/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்களை மதிப்பீடு தேர்வு (Assesment Test)மற்றும் நேர்காணல் முறையில் பணியமர்த்தப்படுவர். மற்ற வங்கிகளில் பணிபுரியும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாது.

விண்ணப்பிக்க கட்டணம்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. எஸ்.சி, எஸ்.டி., ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!