சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம்
X
இன்று சர்வதேச யோகா தினம்.

உன்னதமான யோக கலையை உலக நாடுகளுக்கு எடுத்து செல்லும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஐநா சபை, கடந்த 2014-ம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று 7 வது சர்வதேச யோகா தினம் ( International Yoga Day), உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடத்தின் யோகா தினத்தின் முக்கிய கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா' என்பதாகும்.

தில்லியில் நடைபெற உள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள், காலை 6:30 மணி முதல் துார்தர்ஷன் சேனல்களில் நேரிடையாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) சிறப்புரையாற்ற உள்ளார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் உரை நிகழ்த்த உள்ளார்.

அதன்பின்னர் யோகா பயிற்சி செய்யும் விளக்கம் நடைபெறும். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், உள்ளிட்ட பல ஆன்மீக தலைவர்கள் மற்றும் யோகா குருக்கள், ஆரோக்கிய வாழ்விற்கான யோகா குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture