எஃகு மீதான ஏற்றுமதி வரி வாபஸ்: உள்நாட்டு எஃகு தொழில் ஊக்கம் பெறும் என கருத்து
பைல் படம்
2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் & செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
58 சதவீதத்திற்கும் குறைவான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது. 58 சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும். இரும்புத் தாதுத் துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது. எச் எஸ் 7201, 7208, 7209,7210,7213, 7214, 7219, 7222 & 7227 ஆகியவற்றின் கீழ் வகைப் படுத்தப்பட்ட பன்றி இரும்பு மற்றும் எஃகுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு வரி இல்லை.
ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி, ஃபெரோனிக்கல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும் . கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும் . இது 2022, நவம்பர் 19 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.. தற்போதைய நடவடிக்கைகள் உள்நாட்டு எஃகுத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும்; ஏற்றுமதியை அதிகரிக்கும்.
இரும்பின் வரலாறு.. மனிதன் கண்டுபிடித்த இரண்டாம் உலோகங்களிலேயே உன்னதமானதும், நாகரிக முன்னேற்றத் திற்கு அடிகோலியதும் இரும்பு உலோகம் மட்டுமே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. இன்றியமையாத உலோகமாக ஆகிவிட்ட இரும்பைக் கண்டுபிடித்ததன் மூலம், உணவைத் தேடுவதற்கு பயன்படும் வேட்டைக் கருவிகள், எதிரிகளிடம் இருந்து கருத்தி தங்களைக் காத்துக் கொள்வதற்கான ஆயுதங்கள் ஆகியவற்றை மனிதன் முதலில் உருவாக்கினான் . பின்னர் விவசாயத் தொழில், நெசவுத்தொழில், கப்பல் கட்டும் பரந்துவிட்டது.
இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கான கட்டுமானங்கள், பாலங்கள், விவசாயம் செய்வதற்கான கருவிகள், கடல் வாணிபத்திற்கான கப்பல்கள் மற்றும் புகை வண்டிகள், ஆகாய விமானங்கள், பல்வேறு கனரக தொழில்களை மேற்கொள்வதற்கான கருவிகள் என எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவையாக இரும்பு உலோகம் ஆகிவிட்டது. இரும்பு இல்லை என்றால் எதுவுமே இல்லை என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. இன்றளவும் அனைத்து துறைகளிலும் இரும்பு அதிக அளவில் பயன்படுவதால், மனிதன் கண்டுபிடித்த உலோகங்களிலேயே இரும்பே பிரதானம் என கொண்டாடப் படுகிறது. எனவே இரும்பைக் கண்டுபிடித்த இனமே, உலக நாகரிகத்தின் முன்னோடிகள் ஆனார்கள் என்பதில் வியப்பு இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu