நிர்மலாவையும், ஜெய்சங்கரையும் பிரதமர் மோடி ஏன் தேர்வு செய்தார்..?

நிர்மலாவையும், ஜெய்சங்கரையும்  பிரதமர் மோடி ஏன் தேர்வு செய்தார்..?
X

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்ரமணியன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

நிர்மலா சீத்தாராமனையும், ஜெய்சங்கர் சுப்பிரமணியத்தையும் பிரதமர் மோடி ஏன் விடாப்பிடியாக வைத்திருக்கிறார் என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் பரவலாக பேசு பொருளாக இந்த விஷயம் பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. மக்களை சந்திக்காமல் மன்மோகன் சிங் பிரதமராக 10 ஆண்டுகள் ஆண்டதை பற்றி யாரும் பேசுவதில்லை. இதற்கு முன் ராஜ்யசபா எம்.பி.,க்களாகவே இருந்த பலர் காங்., ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தது பற்றியும் பேசுவதில்லை. ஆனால் திறமையான இரண்டு தமிழர்களை மோடி நல்ல வேலைக்கு பயன்படுத்துவதை பலராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதற்காகவே இந்த விளக்கம்.

நிர்மலா சீத்தாராமன்:

பிறப்பு : ஆகஸ்டு 18, 1959

ஊர்: பிறந்தது மதுரை. வளர்ந்தது திருச்சி.

படிப்பு: இளங்கலை, சீதாலஷ்மி ராமசாமி கல்லூரி - திருச்சி

முதுகலை மற்றும் M.Phil (பொருளாதாரம்) - ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். புது தில்லி.

முனைவர் (பொருளாதாரம்) பாதியில் நிறுத்தப்பட்டு லண்டன் செல்லவேண்டிய சூழல்.

தெரிந்த மொழி: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு

பொறுப்புக்கள்:

1. Member of the National Commission for Women from 2003 to 2005

2. பி.ஜே.பி யில் இணைப்பு 2008

3. பி.ஜே.பி., யின் 6 பேர் கொண்ட தேசிய செய்தி தொடர்பாளர் - 2014 வரை

4. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் - 2014

5. இந்தியாவின் முதல் (முழுநேர) பாதுகாப்புத் துறை அமைச்சர் -2017

6. அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் 2019 வாக்கில் புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார். இதில் லஷ்கர் இ தொய்பா வைச் சேர்ந்த 170 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர் ராணுவத்தில் செய்த மாற்றங்கள் நமது பரம எதிரி நாடான சீனாவையே இப்போது வரை கட்டிப்போட்டுள்ளது.

7. 2019 மே மாதத்தில் இருந்து இன்று வரை நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.

8. இதுவரை சாதனையாக 6 முறை இந்திய அரசின் பட்ஜெட்டை வெற்றிகரமாக தொடர்ந்து தாக்கல் செய்துள்ளார்.

9. இவருடைய நிதி அமைச்சக காலகட்டத்தில் தான் உலக அளவிலான நெருக்கடிகளையும் தாண்டி, இந்தியா 5 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்தது மற்றும் GDP புதிய உச்சத்தை தொட்டது.

10. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் லண்டனில் உள்ள Agricultural Engineers Association ல் பொருளாதார நிபுணராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

விருதுகள்:

1. இவர் படித்த JNU 2019-ல் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.

2. போர்ப்ஸ் இதழ் 2019ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களில் 34வது இடத்தை வழங்கியது.

மிகச்சிறந்த பேச்சாளர், மிக மிக எளிமையானவர், மிகுந்த நேர்மையாளர். இவருடைய ஒரே மகள் வாங்க்மயி திருமணம் 2023 ல் பெங்களூருவில் மிக மிக எளிமையாக நடைபெற்றது. நெருங்கிய சொந்தங்கள் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிமையாக நடத்தினார்.

முக்கிய தொழிலதிபர்களையும் வங்கியின் முதலாளிகளையும் அழைத்திருந்தால் பல ஆயிரம் கோடி அளவுக்கு மொய் மட்டும் ரொக்கமாக வந்திருக்கும். (தமிழ்நாட்டோடு ஒப்பிடாதீங்க) உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பட்ஜெட்டை ஆறுமுறை தாக்கல் செய்தனர். இவ்வளவு பெரிய நாட்டின் ராணுவ அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். இவரின் செயல்பாடுகளை பற்றி எழுதினால் பல கோடி பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். இவர் மீது இதுவரை துரும்பு அளவு கூட புகாரோ, ஊழல் குற்றச்சாட்டோ எழுந்தது இல்லை. இதனை கூர்ந்து கவனியுங்க. அபாரமான அறிவுத்திறனும், பணித்திறனும் கொண்டவர்.

ஜெய்சங்கர்:

பிறப்பு : டெல்லி

பெற்றோர்: சுப்ரமணியம் & சுலோசனா ( திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட தந்தையார் முன்னாள் இந்திய குடிமைப்பணி அதிகாரி, மிகப் பெரிய பொறுப்புக்களில் இருந்தவர். இந்திய பாதுகாப்புத் துறை, பன்னாட்டு போர் பகுப்பாய்வு மற்றும் இந்திய அணுசக்தி துறையில் பல்வேறு உயர் பொறுப்புக்களை வகித்தவர். 2007 ல் நடந்த இந்திய அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணமானவர். இவருக்கே இரண்டு பக்க கட்டுரை எழுதும் அளவுக்கு திறமையான அதிகாரி )

கல்வி: ஆரம்பகால கல்வி, டெல்லியின் விமானப்படை பள்ளி, பெங்களூர் ராணுவ பள்ளி.

இளங்கலை: செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூர் - டெல்லி

MA,M.Phil, Ph.D - Jawaharlal Nehru University (JNU)

பின்னர் இந்திய ஆட்சிப்பணியில் தேர்வு ( Indian Foreign Service (IFS) in 1977

பொறுப்புக்கள்:

1977 இல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார்.

1985-1988 க்கு இடையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார்.

1990-1993 க்கு இடையில், அவர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக நியமிக்கப்பட்டார்.

1993-1995ல் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநராக (கிழக்கு ஆசியா) ஆனார்.

1995-1998 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலர் (அமெரிக்கா)

2000-2004ல் சிங்கப்பூரில் இந்திய ஹை கமிஷனர்.

2007-2009 இல் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக ஆனார் மற்றும் அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பை வழிநடத்தினார்.

2009-2013 வரை சீனாவுக்கான இந்தியத் தூதராக இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

2013-2015 க்கு இடையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தார். மோடியின் நியூயார்க் பேரணியின் முக்கிய வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.

2015-2018 க்கு இடையில் இந்தியாவின் வெளியுறவு செயலராக இருந்த அவர், பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார்.

2019 இல் வெளியுறவு அமைச்சரானார். இந்திய தூதாண்மையை மேலும் பரப்புவதில் கவனம் செலுத்தினார். இது போக பல நாடுகளில் வெளியுறவுத் துறை தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

விருது:

2019 ல் பத்மஶ்ரீ வழங்கப்பட்டது.

மிக எளிமையான நேர்மையான அதிகாரி எனப்பெயரெடுத்தவர். புரிந்து கொள்ளவே முடியாத உலக அரசியலை மிக, மிக தெளிவாக கற்றுத் தேர்ந்தவர். இவரது நுட்பமான உலக அறிவுத்திறன் வியப்புக்குறியது. இவருடைய காலகட்டத்தில் தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் பயனடைந்தனர். ரஷ்ய உக்ரைன் போர் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கிய இந்தியர்களையும் மாணவர்களையும் விரைந்து மீட்டதில் மிகப் பெரிய பங்கு இவருக்குண்டு.

வெளிநாடுகளில் நடக்கும் நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில், இந்தியாவைப் பற்றி அவதூறு பேசும் அந்த நாட்டவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி கொடுப்பதில் வல்லவர். இந்திய பாதுகாப்புத்துறைக்கு ஈடான, இன்னும் கூடுதல் சென்சிட்டிவ் ஆன வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை எந்த குழப்பமும் இன்றி நிர்வகித்து, உலக நாடுகள் மத்தியில், இந்தியாவின் செல்வாக்கினையும், மதிப்பையும் உயர்த்தி வருகிறார்.

இத்தனை கல்வி பின்புலமும், திறமையும், எளிமையும், நேர்மையும் கொண்ட இந்த இருவரும் நமது அமைச்சரவையில் இருப்பது நாட்டுக்கு மட்டும் பெருமையல்ல. தமிழகத்திற்கே மிகப்பெரிய பெருமை. இவர்களை மிகக்குறுகிய வட்டத்திற்குள் அடைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!