நிலவில் முதலில் தரையிறங்க போவது யார்?

நிலவில் முதலில் தரையிறங்க போவது யார்?
X

விண்ணில் வெற்றிகரமாகச்செலுத்தப்பட்ட சந்திரயான் 3  விண்கலம்

நிலவில் முதலில் தரையிறங்க போவது யார்? என்பதில் ரஷ்யாவுடன் இஸ்ரோ போட்டி போட்டு வருகிறது.

நிலவில் முதலில் தரையிறங்க போவது யார்? என்பதில் ரஷ்யாவுடன் இஸ்ரோ போட்டி போட்டு வருகிறது. சந்திரயான் - 3 வரும் 23ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரஷ்யாவின், 'லுானா - 25' வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, நிலவில் முதலில் தரையிறங்கப் போவது யார் என்ற போட்டி இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் உள்ளதா என்பதை ஆராய, சந்திரயான் - 3 விண்கலத்தை, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி வரும் சந்திரயான் - 3, வரும் 23ம் தேதி நிலவில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான, 'ராஸ்காஸ்மோஸ்' நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக, 'லுானா - 25' விண்கலத்தை, ரஷ்யாவின் வாஸ்டோச்னி விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ரஷ்யா பிளவுபடுவதற்கு முன், ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக இருந்த போது, 1976ல் நிலவில் ஆய்வு மேற்கொண்டது. தற்போது, 47 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி உள்ளது.

இது சந்திரயான் - 3 விண்கலத்தை விட வேகமாக பயணித்து, அடுத்த ஐந்து நாட்களில், வரும் 16ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என கூறப்படுகிறது. அதன் பின் ஐந்து முதல் ஏழு நாட்களில் அது நிலவில் தரையிறங்கும் என ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி பார்த்தால், சந்திரயான் - 3 நிலவில் தரை இறங்குவதற்கு இரண்டு நாட்கள் முன், அதாவது வரும் 21ம் தேதி அல்லது, சந்திரயான் - 3 தரையிறங்கும் அதே நாளான ஆக., 23ல், 'லுானா - 25' நிலவில் தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோசுக்கு, இஸ்ரோ அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நம் விண்வெளி பயணத்தில் மற்றுமொரு சந்திப்பு நிகழ்வது குறித்து மகிழ்ச்சி என, வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்