உலக அழகியாக வேண்டிய இவர், என்ன ஆனார் தெரியுமா..? ஆச்சர்யப்படுவீங்க..!
இந்திய அளவில் பல அழகிப்போட்டிகளில் வெற்றி பெற்ற கரிமா.
ஹரியானாவைச் சேர்ந்த பெண் கரிமா யாதவ் மிகவும் துணிச்சலான பெண் மட்டுமல்ல மிகவும் அழகானவரும் கூட. அழகாக இருந்ததால் ஒரு நாள் கரிமா எதேச்சையாக ஒரு அழகுப் போட்டியில் கலந்து கொண்டார்.
ஆச்சர்யமாக அந்த போட்டியில் வெற்றி பெற்றார். பின்னர் அது கரிமாவின் வாடிக்கையாகிவிட்டது. அட ஆமாங்க எல்லா அழகுப்போட்டியிலும் கலந்து கொள்ளத் தொடங்கினார். அது என்ன மாயமோ மந்திரமோ அவர் கலந்துகொண்ட அத்தனை போட்டிகளிலும் வெற்றிபெற்றார்.
இதற்கிடையே அவர் துணிச்சல் மிக்கவர் என்பதால் அவருக்கு இந்திய இராணுவத்தில் பணியாற்றவும் ஒரு ஆழமான ஆசை இருந்தது. திடீரென ஒருநாள் இத்தாலி சென்று சர்வதேச அளவிலான அழகுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் பாருங்கள் அவருக்கு வந்த சோதனை.அதே காலகட்டத்தில் CDS (Combined Defense Services) தேர்வும் வந்து இருந்தது.
சரி தேர்வையும் எழுதுவோம் என்று தேர்வை எழுதினார்.கரிமா. அவரது முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்றார். தேர்வில் வெற்றி பெற்றதும் மேல் பயிற்சிக்காக சென்னையில் உள்ள இந்திய இராணுவ அதிகாரி பயிற்சி அகாடமிக்கு (OTA) செல்ல வேண்டியிருந்தது.
ஒருபக்கம் உலக அழகிப்போட்டி. மறுபக்கம் இராணுவ அதிகாரி பயிற்சி. கரிமா மனசு ஒரு ஊசலாட்டத்தில் இருந்தது. முடிவு எடுப்பதில் ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது.
சர்வதேச அழகி போட்டியில் கலந்துகொண்டால் ஒருபுறம் மாடலிங் தொழிலில் வளரலாம். மறுபுறம் பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்து வாசப்படி கதவைத் தட்டும். பணமும் கொட்டோகொட்டு என்று கொட்டும். வாழ்க்கையே மிகப்பெரிய ராஜ வாழ்க்கையாகும்.
என்ன செய்வது என்று சிறிது சிந்தித்த கரிமா தடுமாற்றத்துடனே இருந்தார்.
இன்னொரு பக்கம், சிறுவயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரியும் கனவு வேறு இருந்தது. ஒருபக்கம் லட்சியம். ஒருபக்கம் தானாக வந்து வாய்த்த வாய்ப்பு. அவரால் முடிவு எடுக்க முடியாமல் பெற்றோரிடம் ஆலோசனைக் கேட்டார்.
கரிமாவின் பெற்றோர், 'கரிமா, இது உன் வாழ்க்கை. ஒன்று உனது சிறு வயதில் இருந்த லட்சியம். இரண்டாவது உனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு. உனக்கு எது பிடிக்கிறதோ அதை நீயே தேர்வு செய். அதுதான் சரியாக இருக்கும்.நீ எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு துணையாக இருப்போம்' என்று முடிவை கரிமாவிடமே விட்டுவிட்டார்கள்.
கரிமா இரவு முழுவதும் யோசித்தார். அப்போதும் கரிமாவுக்கு குழப்பம் தீரவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்துக் கொண்டே இருந்தார்.
காலையில் எழுந்து நிதானமாக எழுந்து சென்ற கரிமா தனது அம்மாவிடம் அவரது முடிவைச் சொன்னார்.
"அம்மா நான் இத்தாலிக்குப் போகவில்லை. இந்திய ராணுவப் பயிற்சியை முடிப்பதற்காக சென்னைக்குப் போகிறேன்." என்றார்.
அப்படிச் சென்ற கரிமா சமீபத்தில் பயிற்சியை சிறப்பாக முடித்து இந்திய ராணுவத்தில் லெப்டினன்டாக பணியில் சேர்ந்தார்.
உலக அழகியாகும் முடிவை மாற்றிக்கொண்டு நாட்டுக்காக பணிசெய்ய முடிவு எடுத்த கரிமா நிச்சயம் போற்றுதலுக்கு உரியவர். உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம் கரிமா...!
இந்திய தேசபக்தியுள்ள தேசத்தின் மகளுக்கு ஒரு சல்யூட்..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu