வாட்ஸாப், பேஸ்புக் முடக்கம்: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவிப்பு

வாட்ஸாப், பேஸ்புக் முடக்கம்: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவிப்பு
X

பைல் படம்.

கடந்த சில மணி நேரமாக வாட்ஸாப் செயலி முடங்கியது: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான வாட்ஸாப் செயலி சில மணி நேரமாக பயனாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் தொடர்புகொள்ள முடியாதபடி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோடிக்கணக்கில் பயனாளிகளைக்கொண்ட வாட்ஸாப் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல பயனர்கள் வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதை அறிகிறோம். விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. பயனாளர்களின் பொறுமைக்கு நன்றி என தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வலைதளங்களும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலோனோர் பயனாளர்களாக உள்ள சமூக வலைதளங்களில் டுவிட்டர் மட்டுமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!