பிரதமர் மோடிக்கு பிடித்தவை என்னென்ன..?

பிரதமர் மோடிக்கு பிடித்தவை என்னென்ன..?
X

பிரதமர் மோடி யோகா செய்யும்போது.( கோப்பு படம்)

பிரதமர் மோடிக்கு என்ன பிடிக்கும்? எதை விரும்பி சாப்பிடுவார்? என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிரதமர் மோடிக்கு 71 வயது. ஆனாலும் 70 வயதைக் கடந்த மற்றவர்களை ஒப்பிடும்போது அவர் ஆரோக்கியம் மிகுந்தவராகவே இருக்கிறார். அதற்கு காரணம் அவரது யோகா செய்யும் பழக்கமும், உணவுப்பழக்கமுமே காரணம்.

பிரதமர் மோடியை சாப்பாட்டுப்பிரியர் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் அவர் நிச்சயமாக அவர் சாப்பாட்டை ரசித்து சாப்பிடுபவர். அவர் ஒரு கண்டிப்பான சைவ சாப்பாட்டை விரும்புபவர். குறிப்பாக எளிமையான குஜராத்தி உணவுகளை விரும்பி சாப்பிடுவார். கிச்சடி அவருக்கு மிகவும் பிடித்த குஜராத்தி உணவு.

குஜராத்தி சாடி கிச்சடி

தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் உடையவர். குளித்தப் பின் யோகா செய்வது வழக்கம். காலை 7 மணிக்கெல்லாம் தயாராகிவிடுவார். காலையில் தேப்லா, தோக்லா அல்லது போஹா(அவல் உப்புமா) சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கும். மதிய சாப்பாட்டுக்கு குஜராத்தி அல்லது தென்னிந்திய வகை எளிய உணவுகளை விரும்பி சாப்பிடுவார். இரவு உணவில் ரொட்டி, பருப்பு மற்றும் தயிர் போன்றவை சேர்த்துக்கொள்வார்.

தோக்லா

விரத காலங்களில் அதை பின்பற்றுவதில் சிரத்தையுடன் இருப்பார். குறிப்பாக நவராத்திரியில் 9 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கும் அவர் ஒரு நாளைக்கு 1 பழம் மட்டுமே சாப்பிடுவார். பகலில் எலுமிச்சை ஜூஸ் மற்றும் ஒரு கப் தேநீர் மட்டுமே அருந்துவார்.

பிடித்த உணவுகள் :

கிச்சடி பிரியர். சாக், சாலட், பருப்பு மற்றும் கறி ஆகியவற்றைக் கொண்ட சைவ தட்டு உணவு, சுவையாக செய்யப்பட்ட எந்த காய்கறியும் பிடிக்கும். நீண்ட பாசுமதி அரிசியில் தயார் செய்த மோதி காஸ் காய்கறி பிரியாணி(Moti Khass Briyani). செஃப் சஞ்சீவ் கபூர் பிரதமர் மோடிக்கு உயர்தர சைவ உணவை தயாரித்து வழங்குகிறார்.

தேப்லா

71 வயதிலும் இளமையான தோற்றத்துடனும், மிடுக்குடனும், துடிப்புடனும் இருப்பதற்கு, அதிகாலை துயில் எழுதல், யோகா செய்தல் மற்றும் சைவ உணவுப்பழக்கம் போன்றவையே காரணம் என்று அவரே சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!