வரப்போகும் ஸ்விப்ட் புதிய மாடல்... மார்க்கெட்டே காலியாகப்போகுது..!

வரப்போகும் ஸ்விப்ட் புதிய மாடல்...  மார்க்கெட்டே காலியாகப்போகுது..!
X
இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ள புதிய ஸ்விப்ட் கார் பெரும் வரவேற்பினை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுசூகி ஸ்விஃப்ட்டின் புதிய தலைமுறை மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் புதிய ஸ்விஃப்ட் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட், மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றதாக அமைந்திருக்கும். சர்வதேச அளவில் கிடைக்கின்ற ஸ்விஃப்ட்டில் உள்ள மூன்று சிலிண்டர் Z12E 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5,700rpm சுழற்சியில் 82hp மற்றும் 4,500rpm சுழற்சியில் 108Nm டார்க் வழங்குகின்றது. மைல்டு ஹைபிரிட் பெற DC சிங்கோரேனஸ் மோட்டாரிலிருந்து 3.1hp மற்றும் 60Nm டார்க் வழங்குகின்றது.

மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் காரணமாக புதிய ஸ்விஃப்ட் அதிக மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. WLTP முறைப்படி மைலேஜ் 23.4kpl மற்றும் 24.5kpl ஆக சான்றிதளிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் முற்றிலும் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் கூர்மையான எல்இடி பகல்நேர விளக்குகள், பெரிய கிரில் மற்றும் புதிய வடிவமைப்பில் உள்ள ஹெட்லைட்கள் உள்ளன. பின்பக்கத்தில் புதிய வடிவமைப்பில் உள்ள டெயில்லைட்கள் மற்றும் பெரிய ஸ்பாய்லர் உள்ளன.

புதிய ஸ்விஃப்ட்டின் இன்டீரியர் முற்றிலும் புதியதாக மாற்றப்பட்டுள்ளது. 9 இன்ச் தொடுதிரை ஃப்ரீஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, சுசூகி கனெக்ட் ஆதரவு போன்ற வசதிகள் உள்ளன.

புதிய ஸ்விஃட்டில் 6 ஏர்பேக்குகள், இபிடி, ஏபிஎஸ், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், குரல் கட்டுப்பாடு போன்ற புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஸ்விஃப்ட் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் காராகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களில் ஸ்விஃப்டும் ஒன்றாகும். புதிய ஸ்விஃப்ட் அதன் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு காரணமாக ஹேட்ச்பேக் ரக சந்தையில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்விஃட்டின் முக்கிய அம்சங்கள்:

மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன், அதிக மைலேஜ், புதிய வடிவமைப்பு, புதிய இன்டீரியர், புதிய பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!