/* */

இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஸ்கரைப்பற்றிய தெரியாத தகவல்கள்

இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஸ்கரைப்பற்றி தெரியாத விஷயங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஸ்கரைப்பற்றிய தெரியாத  தகவல்கள்
X

லதா மங்கேஸ்கர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவியுடன்.

மராத்தி பேசும் குடும்பத்தில் தீனாநாத் மங்கேஷ்கர் மற்றும் ஷேவந்தி ஆகியோருக்கு மகளாக லதா மங்கேஸ்கர் மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். அவரது தந்தை நாடக நடிகரும் பாடகரும் ஆவார். ஷேவந்தி அவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கருக்கு 2வது மனைவி ஆவார்.

லதா மங்கேஸ்கரின் உண்மை பெயர் ஹேமா.பின்னர் அவரது தந்தையே லதா என்று பெயரை மாற்றினார். 1938ம் ஆண்டில் லதா மங்கேஸ்கர் தனது முதல் அரங்கேற்றத்தை தொடங்கினார். அன்று ராக காம்பவதியுடன் 2 மராத்தி பாடல்களை பாடினார்.

லதா மங்கேஸ்கர் தனது 5 வயதிலேயே நடிக்கத்தொடங்கினார். பள்ளிக்கூடத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே சென்றார். முதல் நாளே அவர் இசையை கற்றுக்கொடுக்கத்தொடங்கினார். பள்ளியில் பாட்டு கற்றுக்கொடுத்த லதா மங்கேஸ்கரை ஆசிரியைகள் கடிந்துகொண்டதால் அன்றில் இருந்து பள்ளிக்கே போகவில்லை.

1938ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி முதல் சங்கீதக்கச்சேரியை தொடங்கினார்.1942ம் ஆண்டு அவருக்கு 13 வயதில் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். மங்கேஸ்கர் குடும்பத்துக்கு நெருக்கமான விநாயக் தாமோதர் என்ற சங்கீத மாஸ்டர் லதா குடும்பத்துக்கு உதவினார். நடிப்பதிலும் பாடுவதிலும் லதா கவனம் செலுத்தினார்.1942ம் ஆண்டில் முதன்முதலில் மராத்தி சினிமாவுக்கு பாடல் ஒன்றை பாடினார். 1945ல் மும்பைக்கு குடிபெயர்ந்தார். 'தில் மேரா தோடா' என்ற பாடல் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அன்று தொங்கிய திரை இசைப்பயணம் அரை நூற்றாண்டு காலமாக கோலோச்சியிருந்தது.

லதா மங்கேஸ்கருக்கு சச்சின் டெண்டுல்கரை மிகவும் பிடிக்கும். சுமார் 30ஆயிரம் பாடல்களை 36 மொழிகளில் பாடியுள்ளார். இந்திய அரசு அவருக்கு பல விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

Updated On: 6 Feb 2022 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு