சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
மத்திய அமைச்சர் அமித்ஷா.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா,குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி அமித்ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், சமூக சேவகர் என்றும் கூறியுள்ளார். அவரது வருமான ஆதாரங்களில் எம்பி பதவிக்கான சம்பளம், வீடு – நிலம் தொடர்பான வாடகை, பங்கு ஈவுத்தொகை வருமானம் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். இதனுடன், தன் மீது 3 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.
மேலும் பிரமாண பத்திரத்தில், ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. ரூ. 15.77 லட்சம் கடன் உள்ளது. ரொக்கமாக ரூ.24,164 மட்டுமே உள்ளது. ரூ. 72 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளன. அவரது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் உள்ளன.
2022-23ம் ஆண்டின் வருமானம் ரூ. 75.09 லட்சம். மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம். மனைவியின் பெயரில் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு ரூ.22.46 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.9 கோடி. மனைவியின் பெயரில் ரூ.26.32 லட்சம் கடன் உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்துறை அமைச்சர், பாரதீய ஜனதா கட்சியில் முடிவுகள் எடுக்க கூடிய முக்கிய நபர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பரான அமித்ஷாவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லாதது வியப்பாக தான் இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu