2ம் உலகப்போரின்போது பிரிட்டிஷ்காரர்கள் வீசிய 2 அணுகுண்டுகள் கும்மிடிப்பூண்டி அருகே கண்டெடுப்பு

2ம்  உலகப்போரின்போது பிரிட்டிஷ்காரர்கள் வீசிய 2 அணுகுண்டுகள் கும்மிடிப்பூண்டி அருகே கண்டெடுப்பு
X
ராமநாதபுரம் கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் உலகப்போரின்போது பிரிட்டிஷ்காரர்கள் வீசப்பட்ட 2 அணுகுண்டு கண்டெடுப்பு.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூண்டி ராமநாதபுரம் கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் லட்சுமி வெங்கட்ராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உலகப்போரின்போது பிரிட்டிஷ்காரர்கள் வீசப்பட்ட 2 அணுகுண்டு கண்டெடுப்பு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் லட்சுமி வெங்கட்ராமன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் பிரிட்டிஷ் கால ஆட்சியில் உலகப்போரின்போது வீசப்பட்ட 2 அணு குண்டுகள் அப்பகுதியில் இருந்ததை விறகு வெட்டிக்கொண்டிருந்த நபர்கள் கண்டெடுத்து காவல் துறைக்கும் வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சென்று அணுகுண்டை மீட்டு வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பகுதியில் உலகப்போரின்போது பிரிட்டிஷ்காரர்கள் பயிற்சி செய்ததாகவும் அப்போது கிராமத்தில் இருக்கும் நபர்களை வெளியேற்றி பயிற்சி செய்த போது ஒரு சில குண்டுகள் இப்பகுதியில் பறந்து விழுந்து இருக்கலாம் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த உலகப் போரின் போது இருந்த பெரியவர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். ராமநாதபுரம் பகுதியில் இதேபோன்று 20க்கும் மேற்பட்ட அணு குண்டுகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு ராமநாதபுரம் பகுதியில் இருந்தது, அந்த கிராமத்தின் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil