Truck Carrying Fireworks-பட்டாசு ஏற்றிச்சென்ற லாரியில் தீ..! (வீடியோ உள்ளது)

Truck Carrying Fireworks-பட்டாசு ஏற்றிச்சென்ற லாரியில்  தீ..!  (வீடியோ உள்ளது)
X

Truck carrying fireworks-தமிழ்நாட்டில் இருந்து பட்டாசு ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட விபத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து பட்டாசு ஏற்றிச் சென்ற லாரியில் தீ பிடித்ததால் லாரி முற்றிலும் எரிந்து தீக்கிரையானது.

Truck Carrying Fireworks,Ayodhya Fireworks,Unnao,Ayodhya Shri Ram Mandir Pran-Pratishtha Ceremony,Shri Ram Janmbhoomi Teerth Kshetra

ஜனவரி 22-ம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ஸ்ரீ ராம் மந்திர் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக, நேற்று இரவு (16ம் தேதி ) தமிழ்நாட்டில் இருந்து புனித நகருக்கு பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததாக NDTV தெரிவித்துள்ளது.

Truck Carrying Fireworks

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பூர்வா கோட்வாலியின் கார்கி கெடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் பதிவு செய்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ கிளிப்பில், டிரக் தீயில் எரிந்து வெடிப்பதைக் காணமுடிகிறது. அதில் இருந்து பல சுற்று பட்டாசுகள் வெடித்தன. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக லாரி தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ அணைக்கப்பட்டது.

ஸ்ரீ ராம் மந்திரில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்காக பட்டாசுகள் நிறைந்த லாரி அயோத்தி நோக்கி சென்று கொண்டிருந்ததாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் எப்படி தீ பிடித்தது என்பதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.

Truck Carrying Fireworks

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதற்கிடையில்,கும்பாபிஷேக விழாவிற்கான மதச் சடங்குகள் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. ஏழு நாள் சடங்கு ஜனவரி 21 வரை தொடரும். ஜனவரி 18 ஆம் தேதி (நாளை) கருவறையில் சிலை வைக்கப்படும். இதற்கான 'கும்பாபிஷேக விழா' ஜனவரி 22ம் தேதி ராம் லல்லாவில் நடக்கிறது.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் படி, ஏழு நாள் சடங்கு துவாதஷ் அதிவாஸ் நெறிமுறைகளைப் பின்பற்றும், ஒவ்வொரு நாளும் பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

அறக்கட்டளை அறிவிப்பின்படி,

ஜனவரி 16: பிராயச்சிதா மற்றும் கர்மகுதி பூஜான்,

ஜனவரி 17: மூர்த்தியின் பரிசார் பிரவேஷ்,

ஜனவரி 18 (மாலை): தீர்த்த பூஜை, ஜல யாத்ரா மற்றும் கந்தாதிவாஸ்,

ஜனவரி 19 (காலை): ஔஷதாதிவாஸ், கேசரதிவாஸ், திவாஸ், ஜனவரி (மாலை): தன்யாதிவாஸ்,

ஜனவரி 20 (காலை): ஷர்கராதிவாஸ், ஃபாலாதிவாஸ், 20 ஜனவரி (மாலை): புஷ்பதிவாஸ்,

ஜனவரி 21 (காலை): மத்தியதிவாஸ், ஜனவரி 21 (மாலை): ஷையாதிவாஸ்

Truck Carrying Fireworks

ஸ்ரீ ராம் லல்லாவின் பிரான்-பிரதிஷ்டையைக் குறிக்கும் கும்பாபிஷேக விழா , ஜனவரி 22 அன்று பௌஷ் சுக்ல துவாதசியின் மங்களகரமான அபிஜித் முஹூர்த்தத்தின் போது மதியம் 12:20 மணிக்கு நடைபெறும். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் கூறுகையில், பிரான்-பிரதிஷ்டா ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாணவேடிக்கை காட்டிய பட்டாசு லாரி : வீடியோ

https://twitter.com/i/status/1747478879256899859

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!