புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா? - இன்று உலகபுலிகள் தினம்!
Today is World Tiger Day- இன்று உலக புலிகள் தினம் ( கோப்பு படம்)
Today is World Tiger Day- இன்று உலக புலிகள் தினம் (Global Tiger Day). புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புலிகளின் இனம் அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலக புலிகள் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
வீரத்தின் உருவாய், கம்பீரத்தின் காட்சியாய், துணிச்சலின் சாட்சியாய் உலா வரும் விலங்குகள் புலிகள். அசாத்திய அறிவுத்திறன் கொண்ட விலங்காக ராஜநடை போட்டு காட்டை சுற்றும் சூறாவளிகள் புலிகள். புலிகளின் வரலாறு வலி மிகுந்தது. 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு முன்பு உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன. இதில் சுமார் 80 சதவிகிதம் புலிகள் இந்தியாவில் வசித்தன. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் தான் புலிகளுக் கான அழிவு காலம் பெரியளவில் தொடங்கியது. புலி வேட்டையை வீரத்தின் அடையாளமாக இந்திய மன்னர்கள் கருதினார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் இது வீரவிளையாட்டாக ஊக்குவிக்கபட்டது. அதிக புலிகளை வேட்டையாடிக் கொல்பவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதனால் வேட்டை சங்கங்களும் பெருகின. ஜெய்பூர் மகாராஜாவின் வேட்டை சங்கத்திற்கு கிரேக்க மன்னர் ஜார்ஜ் உள்பட உலகம் முழுவதும் மன்னர்கள், இளவரசர்கள் விருந் தினர்களாக வந்து தங்கி, புலிகளை வேட் டையாடி உள்ளனர். 1950ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 18,000 புலிகள் இருந்த நிலையில் 1960ஆம் ஆண்டுகளில் இவை 15,000 மாக குறைந் தது. மத்திய அரசு முதன்முதலில் 1972ஆம் ஆண்டில் புலிகளுக்கான கணக்கெடுப்பை நடத்தியது. இதில் இந்தியாவில் வெறும் 1,827 புலிகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இந்த எண்ணிக்கை அனைவரை யும் அதிர்ந்து போகச்செய்தது. இதனைய டுத்து 1973-ஆம் ஆண்டு “ப்ராஜெக்ட் டைகர்” திட்டம் துவங்கப்பட்டது. புலிகள் காக்கப்பட வேண்டிய விலங்கின பட்டியலில் சேர்த்து, அதற்கான காப்பகங்கள் அமைக்கப்பட்டு புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இதன் பின்னர் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்து 2,226-ஆக இருக்கின்றது.
நாட்டின் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை கடந்த முப்பதே ஆண்டுகளில் வேட்டையாடுதல், விஷம் வைத்து கொல்லுதல் போன்ற காரணங்களினால் ஏறத்தாழ பதினேழு மடங்கு குறைந்துள்ளது. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அக்காடு அனைத்து வகையிலும் வளமான காடாக கருதப்படும். பிறந்த இரண்டு மாதங் கள் வரை புலிக்குட்டிகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு. நான்காம் மாதத்தில் இருந்து எட்டாம் மாதம் வரை குட்டிகள் தாயுடன் நீண்ட தூரம் பயணித்து, மோப்பம் பிடிப்பது, முன்னங்கால்களால் சண்டையிடுவது, தனது பலத்திற்கேற்ற இறை விலங்கினை தேர்வு செய்வது, அவற்றை வேட்டையாடி வீழ்த்துவது, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, காட்டெருது போன்ற ஆபத்தான விலங்குகளிடம் காயம்படாமல் நேர்த்தியாக வேட்டையாடுவது போன்றவை தாய்ப்புலியால் குட்டிகளுக்கு கற்றுத்தரும்.
இதன் பின்னர் தாய்ப்புலி தனது குட்டிகளை தனித்து செயல்பட அனுமதிக்கும். வனத்தில் மனிதர்களால் நடத்தப்படும் அத்துமீறல்களால் புலிகளின் வாழ்விடம் சுருங்கி வருவதால், அவை காப்பகங்களை விட்டு காப்புக்காடுகளிலும் வாழ துவங்கி விட்டன. இவை வாழும் காட்டில் இயற்கை சூழல் பாதித்து அதற்கான இரை விலங்கு கள் கிடைக்காவிட்டால் வனத்தை ஒட்டி யுள்ள பகுதிகளில் மனிதர்களால் வளர்க்கப்படும் ஆடு மாடுகளை உணவாக்க முயற்சிக்கும் என்பதால், புலிகள் வாழும் காட்டில் சிறப்புக் கவனம் செலுத்துவது மிக மிக அவசியம். குறிப்பாக கள்ள வேட்டை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். புலிகளின் வேட்டையை தடுத்து நிறுத்திய மத்திய அரசு, புலிகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu