இன்று மட்டும்தான் வாய்ப்பு; வருமான வரி தாக்கல் தாக்கல் செய்து விட்டீர்களா?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று, (ஜூலை 31) கடைசி நாள் ( மாதிரி படம்)
இன்று, ஜூலை 31க்குள் வருமான வரியை தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக காணலாம்.
ஆண்டு வருமான வரிக் கணக்கை செலுத்துவதற்காக ஜூலை 31 கடைசி நாளாகும். கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம். அதன்படி கடந்த வாரத்திலிருந்தே அதிகமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.
நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளதாக நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கடந்த நிதி ஆண்டில் ஜூலை 25ம் தேதி சுமார் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த 22ம் தேதி இரவே முறியடிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும் வேலையில் சுமார் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். இந்த நிலையில் இந்த நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஜூலை 31க்குள் வருமான வரியை தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும்?
வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்பிக்க தவறியவர்கள் அபராத்துடன் கூடிய ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி 31 டிசம்பர் 2024க்கு தாக்கல் செய்யலாம்.
அதனையும் கடந்து வருமான வரியை தாக்கல் செய்யவில்லை எனில் அது தானாகவே புதிய வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F பிரிவின்படி, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் ₹5000 விதிக்கப்படும்.
இதேபோல உங்கள் வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ. 1,000 ஆகும். மேலும் கூடுதலாக, நிலுவையில் உள்ள வரித் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu