சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நிற்கும் திருப்பதி தேவஸ்தானம்
சந்திரபாபுநாயுடு- ஜெகன்மோகன்ரெட்டி.
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புகார் கூறப்பட்டது. இந்த புகாரை கேள்விப்பட்டதும் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து போனது. ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இது குறித்து நடந்த விசாரணையில் கலப்படம் நடந்தது உண்மை என்று தெரியவந்தது.
முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் "மன்னிக்க முடியாத தவறுகளை" செய்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா, மாநிலத்திடம் அறிக்கை கோரினார். YSRCP தலைவர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, நாயுடு கடவுளை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துகிறார் என்று கூறினார்.
அதன் பின்னர் தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளையரை மாற்றி விட்டனர். கோயிலில் புனிதப்படுத்தும் பணிகள் தொடங்கின. மக்கள் தங்கள் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறுகின்றனர்.
உணர்வுகள் புண்படுத்தப்பட்டபோது, மன்னிக்க முடியாத தவறுகள் நடந்தால், நான் (பொறுப்பவர்களை) விட்டுவிட வேண்டுமா?. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திராவில் பெரிய அளவில் அரசியல் போர் நடந்து வந்தது. இந்த போரில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் வாரியம் முழு ஆதரவு வழங்கியது. தன் மீது அதிருப்தி அதிகரித்து வருவதை அறிந்த ஜெகன் மோகன் ரெட்டி இந்த விவகாரத்தை திசை திருப்ப முயன்று வருகிறார். மத்திய அரசும் இந்த பிரச்னையை கவனமாக கவனித்து வருகிறது.
செய்தியாளர் கூட்டத்தில் ஜெகன் கூறியதாவது: இது திசை திருப்பும் அரசியல். நாயுடுவின் நூறு நாள் ஆட்சியில் அதிருப்தி அடைந்த மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள், அவர்களின் 'சூப்பர் சிக்ஸ்' (தேர்தல் வாக்குறுதிகள்) என்ன ஆனது என்று கேட்கிறார்கள். மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்த கதை புனையப்பட்டுள்ளது” என்றார். ஆனால் இதனை மறுத்த முதல்வர் சந்திரபாபுநாயுடு, திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்படம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்கும் வரை விடப்போவதில்லை என சபதம் எடுத்து பணி செய்து வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu